Home /News /lifestyle /

பெண்களே பிறப்புறுப்பில் இப்படியெல்லாம் தென்பட்டால் அது ‘நார்மல்’ தான்..!

பெண்களே பிறப்புறுப்பில் இப்படியெல்லாம் தென்பட்டால் அது ‘நார்மல்’ தான்..!

பெண்கள் பிறப்புறுப்பு ஆரோக்கியம்

பெண்கள் பிறப்புறுப்பு ஆரோக்கியம்

, மாதவிடாய் தவிர்த்து வேறு சில தருணங்களில் திரவம் வெளியேறினால் என்ன அர்த்தம், என்பதுபற்றி பல்வேறு கேள்விகளும் சந்தேகம் பலருக்கும் இருக்கின்றன. பெண்ணின் பிறப்புறுப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள வெளிப்பகுதியில் இந்த விஷயங்கள் காணப்பட்டால், அவை எல்லாமே நார்மல் தான்!

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
உடல் ஆரோக்கியம் என்று வரும் பொழுது சருமம், உடல் உறுப்புகள் சரியாக இயங்குகிறதா, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுகிறோமா, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு நார்மலாக இருக்கிறதா என்பதை சரிபார்ப்பதை மட்டும் கிடையாது. இன்டிமேட் ஹெல்த் என்று கூறப்படும் பிறப்புறுப்புப் பகுதியின் ஆரோக்கியமும் மிகவும் முக்கியமாகும். ஆண்கள் பெண்கள் என்று அனைவருமே பிறப்புறுப்புப் பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்வது, தொற்று வராமல் பார்த்துக் கொள்வது அவசியம். மிகவும் சென்சிட்டிவான சருமம் கொண்ட பிறப்புறுப்பு பகுதிகள் பாதிக்காத அளவுக்கு மென்மையான ஆடைகளை அணிவதும் முக்கியம்.

பெண்களின் பிறப்புறுப்பான வஜைனா பற்றி வெளியான பற்றி பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் இருக்கின்றன. வஜைனா மற்றும் அதன் வெளிப்பகுதியான வுல்வா எப்படி இருந்தால் ஆரோக்கியமாக இருக்கிறது, மாதவிடாய் தவிர்த்து வேறு சில தருணங்களில் திரவம் வெளியேறினால் என்ன அர்த்தம், என்பதுபற்றி பல்வேறு கேள்விகளும் சந்தேகம் பலருக்கும் இருக்கின்றன. பெண்ணின் பிறப்புறுப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள வெளிப்பகுதியில் இந்த விஷயங்கள் காணப்பட்டால், அவை எல்லாமே நார்மல் தான்!

வஜைனா மற்றும் வுல்வாவின் ‘வாசனை’ :

பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து வெளிப்படும் ஒரு விதமான வாசனை ஆரோக்கியமானதா அல்லது தனக்கு மட்டும் தான் அவ்வாறு இருக்கிறதா என்று பல பெண்களுக்கு குழப்பமாகவே இருந்து வருகிறது. வஜைனா என்பது ரோஜாப்பூவோ அல்லது நறுமணமிக்க எந்த ஒரு பொருளும் கிடையாது. அதிலிருந்து இயல்பாகவே, காப்பர், சதையின் வாசம், லேசான மாமிசம் போன்ற வாசமா ஆகியவை தான் எப்பொழுதுமே காணப்படும்.

நீங்கள் சாப்பிடும் உணவுகள், மருந்துகள், உங்கள் ஆரோக்கியம் மற்றும் நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதை பொறுத்து இதன் வாசனை மாறும். எனவே வஜைனாவில் இருந்து பூக்கள் போன்ற வாசம் வரவில்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஆனால், அதே நாளில் தொற்று ஏற்பட்டிருந்தால் ஒரு விதமான துர்நாற்றம் காணப்படும். நீங்கள் அதற்கு மருத்துவரை அணுக வேண்டும்.



வஜைனாவில் இருந்து வெளியேறும் திரவம் :

மாதவிடாய் ரத்தப்போக்கு தவிர்த்து வேறு சில காரணங்களுக்காக அவ்வப்போது பிசுபிசுப்பாக, அல்லது தண்ணீர் போல திரவங்கள் வெளியேறும். பெரும்பாலான நேரங்களில் இது எந்தவிதமான ஆபத்தையும் குறிப்பதில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பாலியல் ரீதியான தூண்டுதல் ஏற்படும் பொழுது கூட வெஜைனாவில் இருந்து வெளியேறும்.

உடற்பயிற்சி செய்தால் பெண்கள் சீக்கிரம் கர்ப்பமாக முடியுமா..? நிபுணர்கள் சொல்லும் தகவல்...

அது மட்டுமில்லாமல் பெண்கள் ஓவலேஷன் என்று கூறப்படும் கருவுறுவதற்கு கருமுட்டை தயாராக இருக்கும் நாட்களில். ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வின் பொழுது திரவம் வெளியேறுவதைக் காண்பீர்கள். பெரும்பாலான சமயம் இது இயல்பானதுதான் என்றாலும், இந்த திரவம் துர்நாற்றம் வீசினாலோ அல்லது வழக்கத்திற்கு மாறாக அல்லது ரத்தப்போக்குடன் காணப்பட்டாலும் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

பிறப்புறுப்பின் மேல்பரப்பில் சிறிய கட்டிகள், கொப்புளங்கள் :

பிறப்புறுப்பில் அவ்வபோது சின்ன சின்ன கட்டிகள் அல்லது லேசான கோப்புகள் போன்ற bumps காணப்படுவது இயல்பு. பிறப்புறுப்பில் இருக்கும் முடிகளை நீக்கும் போது, அதன் விளைவாக லேசாக கட்டிகள் தோன்றலாம். அல்லது உடல் உஷ்ணம் அதிகம் ஆனாலும், நீங்கள் அணிந்த உள்ளாடை உராய்வினாலும் ஏற்படலாம். சில நாட்களில் தானாகவே மறைந்துவிடும்.



மாதவிடாயின் போது கருப்பு அல்லது பிரவுன் நிற ரத்தப்போக்கு:

மாதவிடாயின்போது ஏற்படும் ரத்தப்போக்கு எப்பொழுதுமே சிவப்பு நிறத்தில் தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒரு சிலருக்கு உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு ஏற்ப வெளியேறும் திரவம் பிரவுன் நிறத்தில் அல்லது கருப்பு நிறத்திலும் காணப்படலாம். பெரும்பாலும் இவை கருப்பைக்குள் இருக்கும் அழுக்கு வெளியேறுவதைத் தான் குறிக்கிறது எனவே இதைப் பற்றி அச்சப்பட வேண்டாம்.

அதே போல, லேபியா என்று கூறப்படும் இதழ் வடிவில் இருக்கும் வஜைனால் திறப்பின் வடிவமும், அளவும் மாறுபடுவதும் இயல்பு தான்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Vagina Health, Women Health

அடுத்த செய்தி