கர்ப்பிணிகள் கோடைக்காலத்தை எதிர்கொள்ள இப்படி செய்யுங்கள்..!

வெயில் காலத்தில் எதிர்கொள்ளும் சிரமங்களை சமாளிக்க தினசரி இந்த விஷயங்களை கடைபிடிக்கலாம்.

கர்ப்பிணிகள் கோடைக்காலத்தை எதிர்கொள்ள இப்படி செய்யுங்கள்..!
மாதிரி படம்
  • Share this:
கர்ப்பிணிகள் வெயில் காலத்தில் எதிர்கொள்ளும் சிரமங்களை சமாளிக்க தினசரி இந்த விஷயங்களை கடைபிடிக்கலாம். அவை என்னென்ன பார்க்கலாம்.

நீர்ச்சத்தை தக்க வைத்தல் : ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். அதோடு இளநீர், ஃபிரெஷ் ஜூஸ் , பழவகைகளை சாப்பிடலாம். இதனால் உடல் எரிச்சலின்றி வெப்பத்தை எதிர்கொள்ள உதவும்.

உணவுப் பழக்கம் : காய்கறிகள், கீரை வகைகள் அதிகம் சாப்பிடுங்கள். மோர் சாப்பிடுங்கள், கூடுதல் எண்ணெய், காரம், மசாலா உணவுகளை தவிர்த்தல் நல்லது. உப்பு அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.


அடிக்கடி சிறுநீர் வருகிறதா..? சங்கடத்தை தவிர்க்க இந்த உணவுகளை தவிருங்கள்

உடற்பயிற்சி : தினசரி குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்வது உடலின் ஆற்றலை சீராக வைக்க உதவும். உடற்பயிற்சி செய்யும் போது வெயில் இல்லாத காலை, மாலை வேலைகளில் செய்யுங்கள்.

உடைகள் தேர்வு : லூஸான, பருத்தி ஆடைகளை அணியுங்கள். இறுக்கமான காற்று உள்ளே செல்லாத ஆடைகளை தவிருங்கள். காலணிகள் பயன்படுத்தும்போதும் லூஸான பஞ்சு காலணிகள் பயன்படுத்தலாம்.

தூக்கம் : இரவு சீக்கிரம் தூங்கி உறக்கத்தை சீராக கடைபிடித்தல் அவசியம். மதிய வேளையில் 30 நிமிட குட்டி தூக்கமும் அவசியம் என்பதை மறவாதீர்கள்.

மருத்துவ செக்அப் : செக்அப் செல்லும்போது உச்சி வெயிலில் செல்லாமல் காலையிலேயே சென்று வருவது நல்லது. அதேசமயம் செக்அப் நாட்களை தவிர்க்காமல் சென்று வருவது அவசியம்.Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

பார்க்க :

 
First published: May 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading