International Yoga Day 2022 : ஆண்டின் நீண்ட பகல் பொழுது கொண்ட நாளில் யோகா தினம் : இந்த நாளின் சிறப்பை தெரிந்துகொள்ளுங்கள்...
International Yoga Day 2022 : ஆண்டின் நீண்ட பகல் பொழுது கொண்ட நாளில் யோகா தினம் : இந்த நாளின் சிறப்பை தெரிந்துகொள்ளுங்கள்...
யோகா
சம்மர் ஸால்ஸ்டிஸ் என்று கூறப்படும் இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதே நாளைத் தான் பிரதமர் மோடி சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்று ஐ நா சபையில் முன்மொழிந்து அதை 2014 ஆம் ஆண்டில் நிறைவேற்றினார்.
உலகின் நீண்ட பகல் பொழுது இருக்கும் நாளாகவும் குறைந்த பகல் பொழுது இருக்கும் நாளாகவும் வருடத்தில் இரு நாட்கள் வரும். உலகத்தில் மிக நீண்ட பகல் பொழுது, அதாவது சூரியன் விரைவில் உதயமாகி தாமதமாக அஸ்தமனமாகும் நாளாக ஜூன் 21 ஆம் தேதி இருக்கிறது. சம்மர் ஸால்ஸ்டிஸ் என்று கூறப்படும் இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இதே நாளைத் தான் பிரதமர் மோடி சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்று ஐ நா சபையில் முன்மொழிந்து அதை 2014 ஆம் ஆண்டில் நிறைவேற்றினார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இரண்டு நாட்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.
எவ்வாறு நம்முடைய ஊரில் மாதப்பிறப்பு, அறுவடைத் திருநாள் என்று ஒவ்வொரு குறிப்பிட்ட நாள் கொண்டாடப்படுகிறதோ அதே போல பூகோள அடிப்படையில் ஜூன் 21 ஆம் நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உலக நாடுகள் பலவற்றிலும் இந்த நாள் பருவ மாற்றத்தில், கிளைமேட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே இது கொண்டாட்டத்திற்குரிய நாளாகும். சம்மர் ஸால்ஸ்டிஸ் என்று கூறப்படுவதில் சால்ஸ்டிஸ் என்பது ‘சூரியன் மறையவில்லை’ என்பதை குறிக்கிறது. வடக்கு ஹெமிஸ்பியரில் பகல் பொழுது நீளமாகவும், இரவுப் பொழுது குறைவாகவும் இருக்கும் ஆரம்பத்தை குறிக்கும் நாள் ஜூன் 21. அதேபோல இந்த நாள் தெற்கு ஹெமிஸ்பியரில் அதற்கு மாற்றாக இரவுகள் நீளமாகவும் பகல் பொழுது குறைய தொடங்குவதை குறிக்கும் நாளாகும்.
இயற்கையாகவே ஜூன் 21 மிக நீண்ட பகல் பொழுதை கொண்ட நாளாக இருக்கிறது, இது இயற்கையாகவே அமைந்துள்ளது. இதன் அடிப்படையில்தான் வடக்கு ஹெமிஸ்பியரில் உள்ள பகுதிகளில் கோடைக்காலம் துவங்குகிறது. ஒரு ஆண்டின் முக்கியமான நாட்களில் இதுவும் ஒன்று. எனவே இந்த நாளில் தான் சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட வேண்டும் என்பதை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் யோகா பயிற்சிகளில் மிகவும் முக்கியமானது சூரிய நமஸ்காரம். அதிகாலையில் சூரிய உதய நேரத்தில் 12 விதமான ஆசனங்களை ஒரே சுழற்சியில் செய்வது தான் சூரிய நமஸ்காரம். சூரிய நமஸ்காரம் செய்யும் பொழுது அதிகாலை நேரத்தில் சுற்றுப்புறத்தில் இருக்கும் தூய்மையான காற்று, யோகா ஆசனங்களை ஒரு சீராக செய்யும் பொழுது நாம் விடும் மூச்சு காற்றின் ரிதம் ஆகிய அனைத்துமே உடலை எந்த வித நோய்களும் அண்டாமல் பாதுகாத்து நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு உதவும்.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் சூரியனை இறைவனாக வழிபடுகிறார்கள். தமிழ்நாட்டில் பொங்கல், வட மாநிலங்களில் சங்கராந்தி என்று ஒவ்வொரு மாநிலத்திலுமே விவசாயத்திற்கு உதவும் சூரியனை இறைவனாக வழிபடுகிறார்கள். எனவே இந்த குறிப்பிட்ட நாளில் யோகா தினமாக அறிவிக்கப்படுவது கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று ஒருமித்த மனதாக 175 நாடுகளும் சர்வதேச யோகா தினமாக ஜூன் 21 ஆம் தேதியை ஐ நா சபையில் ஏற்றுக்கொண்டது.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.