முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குளிர்காலம் மட்டுமல்ல... கோடைக்காலத்தில் இதயம் பாதிக்கலாம் : நீங்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை..!

குளிர்காலம் மட்டுமல்ல... கோடைக்காலத்தில் இதயம் பாதிக்கலாம் : நீங்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை..!

இதய பாதிப்பு

இதய பாதிப்பு

கடுமையான வெப்பத்தின் போது இதய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றாலும், கோ-மார்பிடிட்டி உள்ளவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது

  • Last Updated :

பொதுவாகவே, குளிர்காலத்தில் இதய நோய்களால் பாதிப்பு அதிகரிக்கும் மற்றும் இதய நோய் பாதிப்பால் ஏற்படும் இறப்புகள் அதிக அளவில் காணப்படும் என்பது பரவலாக அறியப்படுகிறது. குளிர் காலத்தில், உடலுக்கு உள்ளேயும் வெளியே சுற்றுப்புறத்திலும் போதிய தட்பவெப்பம் இல்லாமல், இதயத்தின் இரத்த நாளங்களில் குறுகி, இதய தசைகளுக்கு குறைவாக சர்குலேட் செய்ய நேரிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருந்தாலும், குளிர்காலத்தில் மட்டுமின்றி, கோடை காலத்தில் வெப்பத்தால் மாரடைப்பு மற்றும் இதய பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது என்று இதயநோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கோடை காலத்தில் எப்படி இதயம் பாதிப்படையும்?

தரம்ஷிலா நாராயணா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குனர் மற்றும் மூத்த ஆலோசகர்-இருதயவியல் நிபுணர், டாக்டர் ஆனந்த் குமார் பாண்டே கூறுகையில், “கோடையில் காணப்படும் அதிக வெப்பத்தால் நமது இதயத்தின் அமைப்பு வெப்பத்தை வெளியேற்றுவதன் மூலம் உடலை குளிர்விக்க முயற்சி செய்கிறது. பொதுவாக வெப்பம் இருக்கும் போது, ரத்த ஓட்டம் / சர்குலேஷன் நன்றாக இருக்கும். எனவே, கோடை வெப்பம் இரத்த நாளங்களை விரிவுபடுத்தி, ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால், இதயம் வேகமாக துடிக்கிறது. சில நேரங்களில், வேகமான இதயத்துடிப்பு, கடுமையான பிரச்சனையை ஏற்படுத்தும்” என்றார்.

குளிர்காலத்தில், குளிர்ச்சி இரத்த நாளங்களை சுருங்கச் செய்து, ரத்த அழுத்தத்தை அதிகரித்து இதயத்தை பாதிக்கிறது, வெயில் காலத்தில் இது இரத்த அழுத்தத்தை குறைத்து, துடிக்கும் வேகத்தை அதிகரித்து இதய பாதிப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.

வெவ்வேறு காலமாக இருந்தாலும், அதிகப்படியான வெப்பம் அல்லது அதிகப்படியான குளிர் ஆகியவை இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை.

வெயில் நேரத்தில் வெளியே செல்கிறீர்களா..? இதெல்லாம் செய்யாமல் போகாதீங்க..!

கோடைக்காலத்தில், இதயம் வழக்கத்தை விட 2-4 மடங்கு அதிகமாக சர்குலேஷன் செய்ய வேண்டும். உடல் சரியாக குளிர்ச்சியடையவில்லை என்றால், அந்த நபர் வெப்ப பக்கவாதத்தால், அதாவது ஹீத் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இணை நோய் உள்ளவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்?

கடுமையான வெப்பத்தின் போது இதய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றாலும், கோ-மார்பிடிட்டி உள்ளவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது. ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட்டின் இயக்குநர் மற்றும் அடல்ட் கார்டியோ-தொராசிக் வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ரித்விக் ராஜ் புயான் "ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், அதிக கொலஸ்டிரால் ஆகிய பாதிப்புகள் உள்ளவர்கள் மற்றும் ஏற்கனவே இதய நோய் அல்லது இதய பாதிப்பை எதிர்கொண்டவர்கள் ஆகியோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.

குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடலில் இருந்து அதிகப்படியான தண்ணீரை இழப்பதால் விரைவாக நீரிழப்புக்கு ஆளாகிறார்கள். நீரிழிவு நோயாளிகள் போதுமான திரவங்களை குடிக்கவில்லை என்றால், இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரித்து, அதைச் சார்ந்த நோயால் தீவிரமாக பாதிக்கப்படுவார்கள். இது இதய ஆரோக்கியத்தை மோசமாக பாதித்து, இரத்த நாளங்களை சேதப்படுத்தும்.

எந்த அறிகுறிகளை எல்லாம் புறக்கணிக்கக் கூடாது?

தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், இதய நிபுணர்களின் கூற்றுப்படி, கோடைக்காலத்தில் பின்வரும் இதய நோய் அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்கக் கூடாது.

* நெஞ்சு வலி

* மூச்சு விடுவதில் சிரமம்

* இதயத்துடிப்பு அதிகரிப்பு

* படபடப்பு

* கால் வீக்கம்

* கை அல்லது தாடை வலி

* நீண்ட நேரமாக சரியாகாத வாயுத் தொல்லை

* மயக்கம்

top videos

    வெப்பம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்டால், உடனடியாக குளிர்ந்த இடத்திற்குச் சென்று குளிர்ந்த நீரை அருந்தவும். அறிகுறிகள் தொடர்ந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

    First published:

    Tags: Heart attack, Heart health, Summer Heat