• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Work from home : கடுமையான தோள்பட்டை வலிக்கு இந்த ஸ்ட்ரெச்சஸுகளை செய்யுங்கள்..!

Work from home : கடுமையான தோள்பட்டை வலிக்கு இந்த ஸ்ட்ரெச்சஸுகளை செய்யுங்கள்..!

தோள்பட்டை வலி

தோள்பட்டை வலி

மூட்டு தேய்மானம், சதை கிழிவு, காயம் உள்ளிட்டவைகளால் ஏற்படக்கூடிய இந்த வலி ஒருவருக்கு வந்துவிட்டால், ஆடை அணிந்து கொள்வது முதல் தலை சீவிக்கொள்வது கூட கடினமாக இருக்கும்.

  • Share this:
நம்முடைய உடலில் அதிக பணிகளை செய்யக்கூடிய ஒரு பகுதி என்றால், அது தோள்பட்டை. பொருட்களை தூக்க, இழுக்க, தாங்கிச் செல்ல, பிடிக்க என அனைத்து பணிகளையும் தோள்பட்டை செய்கிறது. இதனால், குறிப்பிட்ட கால இடைவெளியில் அல்லது வயதான பருவத்தில் தோள்பட்டைகளில் கடுமையான வலி ஏற்படும், வீங்கும். மூட்டு தேய்மானம், சதை கிழிவு, காயம் உள்ளிட்டவைகளால் ஏற்படக்கூடிய இந்த வலி ஒருவருக்கு வந்துவிட்டால், ஆடை அணிந்து கொள்வது முதல் தலை சீவிக்கொள்வது கூட கடினமாக இருக்கும். இப்படியான, பொறுக்க முடியாத அளவில் என்னென்ன வலிகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ரோட்டேட்டர் கஃப் டெண்டோனிடிஸ் (Rotator cuff tendonitis) :  ரோட்டேட்டர் கஃப் என்பது தோள்பட்டைக்கு சப்போர்ட்டாக இருக்கும் மற்றும் அசைப்பதற்கு உதவும் நான்கு தசைகளின் தொகுப்பாகும். தசை நார்கள் கை எலும்புடன் இணையும் தோள்பட்டை பிளேடுக்கு பின்னால் அமைந்திருக்கும் டெண்டோனிடிஸில் அழற்சி ஏற்பட்டால், கடுமையான வலியை எதிர்கொள்ள நேரிடும்.

பைசெப்ஸ் தசைநாண் அழற்சி (Biceps tendonitis) : பைசெப்ஸ் தசைநார், தோள்பட்டையும், கையின் மேல் பகுதியையும் இணைக்கும் பகுதி. தோள்பட்டை மற்றும் உடற் பகுதியில் ஏற்படும் அழுத்தம் காரணமாக இந்தப் பகுதி பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அப்போது, இந்த இடத்தில் வலி ஏற்படும்.



உறைந்த தோள்பட்டை (Frozen shoulder) : வாத நோய் பாதிப்பின்போது தோள்பட்டை செயழில்லாமல் இருக்கும் நிலை. பல்வேறு பிரச்சனைகளின் விளைவாக, உடல் செயலிழப்பை சந்திக்கும்போது, தோள்பட்டையும் செயலிழக்கும். இதற்கு பல்வேறு சிகிச்சைகள் எடுக்க வேண்டியிருக்கும். கேள்விப்படும்போது, மிகவும் ஆபத்தானவையாக தோன்றும் தோள்பட்டை பிரச்சனைகளைப் பொறுத்தவரை எளிய பயிற்சிகளின் வழியாக குணப்படுத்திவிட முடியும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதைக் காட்டும் அறிகுறிகள் : இந்த 5 விஷயங்களில் கவனமாக இருங்கள்..

கைகளை இழுத்தல் : தோள்பட்டை வலி இருப்பவர்கள் செய்யக்கூடிய எளிமையான உடற்பயிற்சி. வலது கையை உங்கள் முன்னால் நீட்டிக் கொள்ளுங்கள். இடது கையைக் கொண்டு வலது கையின் முழங்கையைப் பற்றி, இடதுபுறம் நோக்கி, உங்களால் முடிந்தளவிற்கு இழுக்க முயற்சி செய்யுங்கள். இதேபோல், வலது கையைக் கொண்டு இடது கையை இழுக்க வேண்டும். 30 முதல் 60 நொடி என 5 செட்கள் வரை இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.



கழுத்துப் பயிற்சி : மன அழுத்தம், கோபம் அதிகமாக இருக்கும் சமயங்களில் கழுத்துப் பகுதி மிகவும் இறுக்கமாக இருக்கும். அப்போது, தாடை, நெஞ்சில் உரசுமாறு சாய்க்கும்போது, பின்புற கழுத்து ரிலாக்ஸாக மாறுவதை உங்களால் உணர முடியும். மேலும், கழுத்தை இடதுபுறமாக சாய்த்து, வலது புற கையை நேராக நீட்டும்போது, தோள்பட்டையில் இருக்கும் இறுக்கும் சரியாகும். இதேபயிற்சியை இடதுபுறத்துக்கும் செய்ய வேண்டும். ஒரு நிமிடம் வரை இடது புறமாகவும், ஒரு நிமிடம் வரை வலதுபுறமாகவும் தலையை சாய்த்து அதே நிலையில் இருக்க முயற்சி செய்யலாம்.

மார்பை விரித்தல் : தோள்பட்டை இறுக்கம் மற்றும் வலியை குறைப்பதற்கான மிகச்சிறந்த பயிற்சி. தண்டாள் எடுப்பதன் மூலம் மார்பு விரிவடையும். நிலம், பார் கம்பிகள் உள்ளிட்ட பல்வேறு முறைகளில் மார்பை விரிக்க முடியும். இதனால், தோள்பட்டை பகுதி மிகவும் இலகுவான நிலையை அடைந்து, வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து மீள்வதற்கு உதவியாக இருக்கும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: