குறட்டை தானே என அலட்சியம் வேண்டாம் பெண்களே..!

குறட்டை தானே என அலட்சியம் வேண்டாம் பெண்களே..!
குறட்டை
  • News18
  • Last Updated: August 23, 2019, 10:53 PM IST
  • Share this:
சமீபத்தில் ஐரோப்பிய சுவாச இதழ் நடத்திய ஆய்வில் பெண்கள் தூக்கத்தில் குறட்டை விடுவது மற்றும் மூச்சுத் திணறல் இருந்தால் அவருக்கு புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம் என தெரிவித்துள்ளது.

இதை ஆங்கிலத்தில் ஸ்லீப்பிங் அப்னியா என அழைக்கின்றனர். இந்த ஆய்வில் தீவிர குறட்டை மற்றும் மூச்சித் திணறல் பிரச்னை கொண்ட 20,000 பேரை ஆய்வுக்கு உள்ளாக்கியுள்ளது. அதில் 2 சதவீதம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதற்கு முன் அவர்கள் சில மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொண்டதிலும் மருத்துவர்கள் புற்றுநோய் வரும் ஆபத்து இருப்பதாக கூறியுள்ளர்.

ஆய்வாளர்கள் இந்த புற்றுநோய், குறட்டையால் மட்டுமே வருகிறதா அல்லது அதோடு சேர்ந்து வயது, பாலினம், புகைப்பிடித்தல், மதுப்பழக்கம் போன்றவையும் காரணமாக இருக்குமா என்று ஆய்வு நடத்தியுள்ளனர். ஆனால் அப்படி எதுவுமில்லை..


குறட்டை விடும் பழக்கம் மட்டுமே இருந்தாலே அவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது. அதேசமயம் குறட்டை மற்றும் மூச்சுத் திணறல் அதிகம் இருக்கும் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் அல்லது உடல் எடை அதிகமாக உள்ள பெண்களுக்கு குறட்டை, மூச்சித் திணறல் இருக்கும் என தெரிவித்துள்ளது.

இதை ஆண்களுக்கும் சோதித்ததில் அத்தனை வீரியத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் தீவிரமான குறட்டை மற்றும் மூச்சுத் திணறல் , பகல் நேர சோர்வு கொண்ட ஆண்களுக்கு இதயப் பிரச்னைகளை உண்டாக்கும் என தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு செக்ஸ் ஹார்மோன்ஸ், அதிகப்படியான மன அழுத்ததால் உண்டாகும் ஹார்மோன், குறட்டை, மூச்சுத் திணறலின் போது வெளியேறும் நாக்டர்னல் ஹைபோக்ஸியா ( nocturnal hypoxia ) ஆகியவை புற்றுநோய் வளர்ச்சியைத் தூண்டும் காரணிகளாக இருக்கும். மேலும் அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலவீனமாக்கிவிடும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: August 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...