தமிழ்நாட்டில் ஐந்தில் இரண்டு பேருக்கு உயர் ரத்த அழுத்தம்!

இந்தியர்களின் இதயம் ஒரு நிமிடத்திற்கு 80 முறை துடிக்கிறது. இது அதிகபட்ச அளவான 72 ஐவிட அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் ஐந்தில் இரண்டு பேருக்கு உயர் ரத்த அழுத்தம்!
இரத்த அழுத்தம்
  • News18
  • Last Updated: August 24, 2019, 5:40 PM IST
  • Share this:
தமிழ்நாட்டில் அவர்களுக்கே தெரியாமல் ஐந்தில் இரண்டு பேர் உயர் ரத்த அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய இதய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இந்த ஆய்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2,293 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அப்போது ஐந்தில் இரண்டு பேருக்கு மருத்துவரை அணுகும்போது ரத்த அழுத்தம் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. இது அவர்களுக்கே தெரியவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது. இதை ஆங்கிலத்தில் white coat hypertension என்று அழைக்கின்றனர். அதாவது பதட்டம் அடையும் போது ஏறும் இரத்த அழுத்தமே இவ்வாறு சொல்லப்படுகிறது. இதுபோல் நடப்பது சாதாரணமானதுதான் என சொல்லப்பட்டாலும் அதன் தீவிரம் நாளடைவில் அதிகரிக்கலாம் என்கிறது ஆய்வு. இதை கண்டுகொள்ளாமல் விட்டால் இதயம், சிறுநீரகம், மூளை பாதிப்புக்குள்ளாக்கப்படலாம் என இதய நோய் நிபுணர் உபெந்த்ரா கவுல் ஆய்வில் கூறியுள்ளார்.

இந்த ஆய்வு தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் 15 மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளது. அதில் 18,918 இரத்த அழுத்த நோயாளிகள் பங்கேற்றுள்ளனர். இதற்காக 1,233 மருத்துவர்கள் ஒன்பது மாதங்களாக பணியாற்றியுள்ளனர்.


இந்தியர்களுக்கு காலையை விட மாலை நேரத்தில்தான் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. அந்த குறிப்பிட்ட நேரத்தின் காரணத்தை கண்டறிவது அவசியம். மேலும் இந்தியர்களின் இதயம் ஒரு நிமிடத்திற்கு 80 முறை துடிக்கிறது. இது அதிகபட்ச அளவான 72 ஐவிட அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது எனவும் அந்த ஆய்வில் விளக்கமளித்துள்ளார்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Loading...


First published: August 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...