Home /News /lifestyle /

வெவ்வேறு வயதினருக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகளை வெளிப்படுத்திய ஆய்வு!

வெவ்வேறு வயதினருக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகளை வெளிப்படுத்திய ஆய்வு!

இதய நோய்

இதய நோய்

உலகம் முழுவதும் இறப்புக்கான முக்கிய காரணமாக இதயம் சார்ந்த நோய்கள் மாறியுள்ளன. CVD-க்களை உருவாக்கும் அபாயத்திற்கு பல வாழ்க்கை முறை காரணிகள் பங்களிக்கின்றன என்றாலும், இந்த ஆபத்து காரணிகள் வயதுக்கு ஏற்ப மாறுகின்றன.

மன அழுத்தம் நிறைந்த நகர்ப்புற வாழ்க்கை முறை அதிகம் இதயநோய் பாதிப்புகளுக்கு (cardiovascular diseases - CVDs) வழிவகுத்துள்ளது. நாளுக்கு நாள் இதயநோய் அதிகரித்து வருவது நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதை காட்டுகிறது.

உலகம் முழுவதும் இறப்புக்கான முக்கிய காரணமாக இதயம் சார்ந்த நோய்கள் மாறியுள்ளன. CVD-க்களை உருவாக்கும் அபாயத்திற்கு பல வாழ்க்கை முறை காரணிகள் பங்களிக்கின்றன என்றாலும், இந்த ஆபத்து காரணிகள் வயதுக்கு ஏற்ப மாறுகின்றன என்று கூறப்பட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது . தி லான்செட் ரீஜினல் ஹெல்த் வெஸ்டர்ன் பசிபிக் நடத்திய சமீபத்திய ஆய்வு.

இதய நோய்களுக்கான முக்கிய ஆபத்து காரணிகள் வயதுக்கு ஏற்ப எவ்வாறு அதிகரிக்கிறது என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியது. இந்த ஆய்வில் கிட்டத்தட்ட 2,00,000 சீனர்களின் உடல்நல தரவுகள் ஆராயப்பட்டன. இதயநோய் பாதிப்புகளுக்கு (CVD) வழிவகுக்கும் முக்கிய ஆபத்து காரணிகளை கண்டறியும் முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது கொண்டவர்களும் அடங்குவர்.

லோக்கல் கம்யூனிட்டி கிளினிக்குகள் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான கேள்வி தாள்களின் உதவியுடன் ஆய்வுக்கான தரவு சேகரிக்கப்பட்டது. பங்கேற்பாளர்களை 40 முதல் 55, 55 முதல் 65, 65 முதல் 75 மற்றும் 75+ வரை உள்ளவர்கள் என பல வயது குழுக்களாக ஆராய்ச்சியாளர்கள் பிரித்தனர். வயதை ஆபத்து காரணியாக ஆராய்ச்சியாளர்கள் கருதவில்லை, ஆனால் ஆய்வு முடிவுகள் மற்ற ஆபத்து காரணிகளை பாதிப்பதை ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தி உள்ளன. மொத்தத்தில் 12 ஆபத்து காரணிகள் ஆராய்ச்சியாளர்களால் ட்ராக் செய்யப்பட்டன.



இதில் போதிய கல்வியின்மை மற்றும் மனச்சோர்வு போன்ற சமூகப் பொருளாதார மற்றும் உளவியல் காரணிகள் அடங்கும். தவிர உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், டிஸ்லிபிடெமியா மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் போன்ற வளர்சிதை மாற்ற காரணிகள், புகைபிடித்தல், அதிக மது அருந்துதல், உடல் உழைப்பின்மை, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் சீரற்ற தூக்கம் போன்ற வாழ்க்கை முறை காரணிகளும் அடங்கும்.

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா..? அப்போ இந்த வைட்டமின் குறைபாடுதான் காரணம்...

மேற்கண்ட எல்லாவற்றையும் கருத்தில் கொண்ட பிறகு, வெவ்வேறு வயதினருடன் தொடர்புடைய இதய நோய்க்கான 3 முக்கிய ஆபத்து காரணிகளை இந்த ஆய்வு வெளிப்படுத்தியது.

* 40 - 55 வயதிற்குட்பட்டவர்களில், உயர் ரத்த அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை இதய நோய்களுக்கான ஆபத்து காரணிகளாகும்.

* அடுத்து 55-65 வயதிற்குட்பட்டவர்களில் உயர் ரத்த அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு மற்றும் போதிய விழிப்புணர்வின்மை ஆகியவை காரணிகளாக உள்ளன.



* 65 முதல் 75 வயதுக்குட்பட்டவர்களில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் ஆகியவை காரணிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

அதே போல 75 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் முறையற்ற தூக்கம், குறைந்த விழிப்புணர்வு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற முதல் மூன்று ஆபத்து காரணிகளையும் எதிர் கொண்டதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. CVD-க்களை கண்டறியும் குறிப்பிட்ட வயதினருக்கு ஏற்படும் சாத்தியமான ஆபத்து காரணிகளில் கவனம் செலுத்த உதவுவதால் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. மேலும் இவை எல்லாமே நம்மால் மாற்ற கூடிய ஆபத்து காரணிகள் என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Heart disease

அடுத்த செய்தி