• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Immunity Booster : நோய் எதிர்ப்பு மண்டல செல்களுக்கு பயிற்சி அளிக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் : நோய் தொற்றுகளை தவிர்க்க புதிய திட்டம்..!

Immunity Booster : நோய் எதிர்ப்பு மண்டல செல்களுக்கு பயிற்சி அளிக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் : நோய் தொற்றுகளை தவிர்க்க புதிய திட்டம்..!

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு செல்களுக்கு பயிற்சி அளிப்பது என்பது டி.என்.ஏவை செல் எப்படி மூடியிருக்கிறது என்பதை பொறுத்தே அமையும். அதிகபட்சமாக 6 அடிக்கு மேல் செல்லின் கருவுக்குள் டி.ஏன்.ஏ பொருந்த வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

  • Share this:
தொற்றுகளுக்கு எதிராக போராடக்கூடிய வகையில் நோய் எதிர்ப்பு மண்டல செல்களை பயிற்றுவிக்க முடியும் என அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக இயற்கையாகவே போராடக்கூடிய ஆற்றல் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு இருக்கிறது. இது குறித்து கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், சில விநோதமான முடிவுகள் கிடைத்துள்ளன. அதாவது, நோய் எதிர்ப்பு மண்டலத்தை தொற்றுகளுக்கு எதிராக தீவிரமாக போராடக்கூடிய வகையில், பயிற்சியளிக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். சயின்ஸ் இதழில் வெளியாகியுள்ள ஆய்வில், தாங்கள் கண்டுபிடித்ததை அவர்கள் விளக்கியுள்ளனர்.

கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், நோய் எதிர்ப்பு மண்டலத்தில் மேக்ரோபேஜூகளுக்குள் இருக்கும் முக்கிய மூலக்கூறு செல்களை, தொற்றுகளுக்கு எதிராக போராடக்கூடிய வகையில் பயிற்சியளிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சி குறித்து பேசிய பிரபல மருத்துவ எழுத்தாளர் மற்றும் பேராசிரியரான குவென் செங், நோய் எதிர்ப்பு மண்டலம் பற்றியான இதுபோன்ற கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தில், நோய் எதிர்ப்பு உயரணுக்களை பயிற்றுவிப்பதற்கான செயல்முறையை அறிவதற்கு உதவும் எனத் தெரிவித்துள்ளார்.



மேலும், இப்போது வெளியாகியிருக்கும் ஆய்வுகளைவிட, இதற்கு மேலான ஆய்வுகள் முன்பே வெளியாகியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நோய் எதிர்ப்பு செல்களுக்கு பயிற்சி அளிப்பது என்பது டி.என்.ஏவை செல் எப்படி மூடியிருக்கிறது என்பதை பொறுத்தே அமையும். அதிகபட்சமாக 6 அடிக்கு மேல் செல்லின் கருவுக்குள் டி.ஏன்.ஏ பொருந்த வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த செல்களை வெறும் கண்களில் பார்க்க முடியாது. டி.என்.ஏ குரோமோசோம்களில் தேர்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே இதனை மேற்கொள்ள முடியும் எனக் கூறியுள்ள ஆய்வாளர்கள், அவை அணுகக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என விளக்கியுள்ளனர்.

Immunity Booster Nutrients : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த ஊட்டச்சத்துகளில் கவனம் செலுத்துவது அவசியம்..!

அணுகக்கூடிய வகையில் உள்ள டி.என்.ஏ குரோமோசோம்களின் மரபணுக்களில் மட்டுமே தொற்று நோயை எதிர்த்து போராடக்கூடிய பயிற்சியை கொடுக்க முடியும் என நுண்ணுயிரியல் பேராசிரியர் எம்.ஆஷர் தெரிவித்துள்ளார். நோய் எதிர்ப்பு மண்டலங்களை தொற்றுநோய்களுக்கு எதிராக பயிற்றுவிப்பது குறித்து பேசும்போது, மேக்ரோபேஜூக்குள் ஒரு தூண்டுதலை அறிமுகப்படுத்துவதன் மூலம் சுருக்கப்பட்ட டி.ஏன்.ஏ பகுதிகளை அவிழ்க்க முடியும் எனக் கூறியுள்ளார். அதாவது, தடுப்பூசி போன்ற நுண்ணுயிர் அல்லது நோய்க் கிருமியில் இருந்து பெறப்பட்ட பகுதிகளை செலுத்தி மேக்ரோ பேஜூகளில் தூண்டுதல் ஏற்படுத்தினால், புதிய மரபணுக்கள் அங்கு உருவாகும்.



இவை உயிரணுக்களுடன் இணைந்து தொற்று நோயை எதிர்த்து போராட செல்களை பயிற்றுவிக்கும் என விளக்கமளித்துள்ளார். என்.எப்.பி எனப்படும் மேக்ரோபேஜில் இருக்கும் நோய் எதிர்ப்பு மூலக்கூறின் துல்லியமான இயக்கவியல், மரபணுக்கள் அவிழ்ப்பதும், வெளியிடப்படுவதும் நிகழ்கிறதா? இல்லையா? என்பதை தீர்மானிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: