பொதுவாக மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்பது நம் அனைவருக்கும் தெரியும். மது பழக்கம் கல்லீரல் பாதிப்பு முதல் இதய கோளாறுகள் வரை பல உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது. தீவிர உடல்நல பாதிப்புகள் மட்டுமின்றி இறப்பிற்கும் காரணமாகிறது மது பழக்கம்.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கேன்சர் பாதிப்புகள் மற்றும் கேன்சர் இறப்புகளுக்கு மதுப்பழக்கம் முக்கிய காரணமாக இருக்கிறது. எனினும் ஆல்கஹால் நுகர்வு மிகவும் பொதுவானதாகிவிட்டதால் உடலில் ஏற்படும் பல பாதக விளைவுகளை பெரும்பாலானோர் புறக்கணிக்கிறார்கள். ஆனால் அதிகப்படியான மது பழக்கம் ஒருவரது கல்லீரல், இதயம் மற்றும் சிறுநீரகங்களை பாதிப்பதோடு டிஎன்ஏவை-யும் சேதப்படுத்தும் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது ஓர் ஆய்வு.
NIMHANS-ன் ஆய்வாளர்கள் கூற்றுப்படி அதிக ஆல்கஹால் நுகர்வு டிஎன்ஏ-வில் மீண்டும் மாற்ற முடியாத மாற்றங்களை ஏற்படுத்துகிறது. DNA-வில் ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால் மது அருந்துவதை கட்டுப்படுத்திவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என நீங்கள் நினைத்தால் அது தவறு. மதுவை கைவிட்டாலும் அல்லது கட்டுப்படுத்தினாலும் கூட DNA-வில் ஏற்படும் மாற்றங்கள் தொடரும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது அதிக ஆல்கஹால் நுகர்வால் DNA-வில் ஏற்படும் ரசாயன மாற்றங்களை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுக்க முடியாது என்பதை குறிக்கிறது.
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் ஜெனெடிக்ஸின் வெப்சைட்டில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், மது குடிக்கும் ஒருவரின் உடல் விரைவாக ஆல்கஹாலை (எத்தனால்) உடைக்கிறது, மேலும் அதன் 2 கார்பன் அணுக்களை (CH3CH2 அல்லது எத்தில்), ஒற்றை அணுக்களாக (CH3 அல்லது மெத்தில்) மாற்றுகிறது. இது DNA உட்பட பல பொருட்களுடன் தொடர்பு கொள்ள கூடியது. இதன் விளைவு என்ன தெரியுமா? எத்தனை மரபணுக்கள் தங்களை வெளிப்படுத்துகின்றன என்பதை மெத்திலேஷன் மாற்றும் அல்லது தீங்கு விளைவிக்க கூடும். அதிக ஆல்கஹால் நுகர்வால் டிஎன்ஏ-வில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களை மீண்டும் சரி செய்ய முடியாது என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வில் நாளொன்றுக்கு சராசரியாக 10 ட்ரிங்க்ஸ் என்ற அளவில் 10 ஆண்டுகளாக அதிகம் குடித்த நபர்களின் டிஎன்ஏ-வின் கெமிக்கல் மாற்றங்களை ஆய்வு செய்தனர். பிறகு இவர்களில் சிலர் படிப்படியாக குடிப்பதை நிறுத்தினர் மற்றும் கட்டுப்படுத்தினர். 3 மாதங்களுக்கு பின் மீண்டும் அவர்களின் டிஎன்ஏ மாற்றங்களை ஆய்வாளர்கள் மதிப்பிட்னர். அதிகமாக மது அருந்துபவர்களின் உடலில் மெத்திலேஷன் அளவு குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருப்பதை ஆய்வு காட்டியது. எனினும் 3 மாதத்திற்கு பிறகும் மெத்திலேஷன் அளவு குறைந்ததே தவிர முற்றிலும் மறையவில்லை.
இதற்கு அர்த்தம் என்னவென்றால் அதிகமாக மது குடிப்பவர்கள் அவர்கள் 3 மாதங்களுக்கு குடிப்பதை நிறுத்திய போதும் கூட, மெத்திலேஷன் குடிக்காதவர்களுக்கு இருக்கும் இயல்பு நிலைக்கு வரவில்லை. இது மதுவுடன் தொடர்புடைய டிஎன்ஏ-வில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் தற்காலிகமானவை அல்ல, நிரந்தரமானவை என்பதை குறிக்கிறது.
Also Read : சர்க்கரை நோய் உள்ளவர்கள் மது அருந்தலாமா..? எந்த அளவோடு நிறுத்திக்கொள்வது நல்லது..?
கூடுதலாக இளம் வயதிலேயே குடிக்க தொடங்கியவர்கள் அதன் விளைவுகளை மிகவும் வலுவாக அனுபவித்ததையும் இந்த ஆய்வில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மிகவும் சீக்கிரமாகவே குடிப்பழக்கத்தை துவக்கியவர்களின் மூளை தொடர்பான மரபணுக்கள் உட்பட பல்வேறு மரபணுக்களை உடல் ரீதியாக பாதிக்கப்படலாம் என்பதை இது குறிக்கிறது. டிஎன்ஏ சேதத்தின் மற்றொரு வடிவமான ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் ஆல்கஹால் உருவாக்குகிறது என்கிறர்கள் நிபுணர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Alcohol, Alcohol consumption, Drunkard