சமீபத்தில் பெரியவர்களை அதிகமாக தாக்கும் "அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைபர் ஆக்டிவிட்டி டிஸார்டர்” அதாவது ஏடிஎச்டி (ADHD) என்ற நோய்க்கும் மனக்கவலைக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது முதலில் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிசார்டர் என்ற நோயை அடிப்படையாகக் கொண்டே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு ஆய்வு துவங்கப்பட்டது. ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக யூகேவை சேர்ந்த பல்கலைக்கழக உளவியல் நிபுணர்கள் திடுக்கிடும் பல தகவல்களை அளித்துள்ளனர்.
அதாவது ஏடிஎச்டி என்ற நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் ஏஎஸ்டி என்ற ஆட்டிசம் நோயைவிட மிக அதிக அளவில் மன கவலையையும், மன அழுத்தத்தையும் அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி 11 ஆம் தேதி தான் இந்த ஆய்வை பற்றிய முழு அறிக்கையை அவர்கள் வெளியிட்டனர். இந்த ஏடிஎச்டி என்ற கவனக்குறைவு ஹைப்பர் ஆக்டிவிட்டி கோளாறால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஏஎஸ்டி நோயால் பாதிக்கப்பட்ட நபர்களை விட மிக அதிக அளவில் மன அழுத்தத்தை உணர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏடிஎச்டி என்பது ஒரு நரம்பியல் சம்பந்தப்பட்ட கோளாறு ஆகும். அதிகளவு கவனக்குறைவு அல்லது ஹைபர் ஆக்டிவாக செயல்படுவதும் இந்த நோயின் அறிகுறிகள் ஆகும். உலக மக்கள் தொகையில் 3%-9% மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆராய்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கேள்விகள் அடங்கிய ஒரு தொகுப்பு அளிக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சியில் தான் ஏடிஎஸ்டி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிக அதிக அளவிலான மன அழுத்தத்தையும், மனக்கவலையையும் உணர்வதாக தெரியவந்துள்ளது. ஏடிஎச்டி ஒருவருக்கு பாதித்துள்ளதாக தெரிந்தால் அது ஆட்டிசத்தை விட மனக்கவலையும், மன அழுத்தத்தையும் தான் அதை அதிகமாக கொண்டு இருப்பார்கள் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த நோயைப் பற்றிய முழு விவரமும், இதன் தாக்கத்தை பற்றிய முழு விவரமும் தற்போது வரை போதுமான அளவில் கிடைக்கவில்லை. எனவே ஆய்வாளர்கள் இதைப்பற்றி மேலும் அறிவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இதைப் பற்றி பேசிய மருத்துவர் ஒருவர் கூறுகையில், தற்போது இந்த ஏடிஎச்டி நோய்கள் ஒருவர் எந்த அளவிற்கு மனதளவில் பாதிக்கப்படுகிறார் என்பதை புள்ளி விவரங்களோடு தெரிந்து கொள்வது எங்களது முக்கிய நோக்கமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
Also Read : குளிர்காலத்தில் முதியவர்கள் இதையெல்லாம் கடைப்பிடிப்பது அவசியம்..!
மேலும் இதைப் பற்றி பேசிய மருத்துவர் புனித ஷா என்பவர் கூறுகையில் ஏடிஎச்டி என்ற நோயானது எவ்வாறு மன அழுத்தம், மன கவலைகளுடன் தொடர்பு கொள்ளுங்கள் என்பதையும், அவர்கள் என்ன விதமாக மனக்கவலைகளை அனுபவிக்கின்றார்கள் என்பதையும் அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anxiety, Depression, Health