Home /News /lifestyle /

எச்சரிக்கை... 8 மணி நேரம் உட்கார்ந்தே வேலை பார்த்தால் இதய நோய்க்கான அபாயம் அதிகம்..!

எச்சரிக்கை... 8 மணி நேரம் உட்கார்ந்தே வேலை பார்த்தால் இதய நோய்க்கான அபாயம் அதிகம்..!

8 மணி நேரம் உட்கார்ந்தே வேலை பார்த்தால் இதய நோய்

8 மணி நேரம் உட்கார்ந்தே வேலை பார்த்தால் இதய நோய்

ஆய்வின்படி, ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தங்கள் மேசைகளில் அமர்ந்திருக்கும் ஊழியர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 20% அதிகம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அலுவலகத்தில் 8 மணி நேரத்திற்கு உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கு இருதய நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இது பக்கவாதம் அல்லது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கலாம் என்பது கண்டறியப்படுள்ளது. மேலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையின் ஆபத்துகள் பற்றியும், அதனால் மனித உறுப்புகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் மருத்துவ வல்லுநர்கள் நீண்ட காலமாக மக்களை எச்சரித்து வருகின்றனர்.

சீன மருத்துவ அறிவியல் அகாடமி மற்றும் பீக்கிங் யூனியன் மருத்துவக் கல்லூரி நடத்திய ஆய்வின்படி, ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தங்கள் மேசைகளில் அமர்ந்திருக்கும் ஊழியர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 20% அதிகம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 11 ஆண்டுகளில், 21 நாடுகளை சேர்ந்த 105,677 பேரின் பதிவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

அதனடிப்படையில், 6,200 பேர் இறந்துள்ளதாகவும் 2,300 மாரடைப்பு மற்றும் 3,000 பேருக்கு பக்கவாதம் மற்றும் 700 இதய செயலிழப்பு போன்ற நோய்கள் ஏற்பட்டுள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு ஊழியர் மேசையில் செலவழிக்கும் நேரத்தைக் குறைப்பது மற்றும் உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது, புகைபிடிப்பதை கட்டுப்படுத்துவது போன்றவற்றின் மூலமாக இதயம் சார்ந்த பிரச்சனைகளுக்கான அபாயத்தை குறைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் உடல் செயல்பாடு இல்லாமல், 8.8% இறப்புகளும், 5.8% இதய நோய்களும் ஏற்படுகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், பணியின் இடையிடையே வழக்கமான ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.பிற உடல் நலப்பிரச்சனைகள்:

அதிக நேரம் உட்கார்ந்திருப்பது ஒரு நபரின் தோரணை, மன ஆரோக்கியம் மற்றும் மன அழுத்த நிலைகளையும் பாதிக்கிறது. உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, அதிகரித்த கொழுப்பு மற்றும் கீல்வாதம் போன்ற பிற உடல்நல அபாயங்களும் வழிவகுக்கும். நீண்ட நேரம் மேஜையில் அமர்ந்தபடி வேலை செய்வதால் இதய செயலிழிப்பிற்கான அபாயம் அதிகம் என்பதும் கண்டறிப்பட்டுள்ளது.

உணவே சாப்பிடாமல் உடல் எடையை குறைக்க போறீங்களா..? அப்போ இந்த ஸ்மூதி டயட் டிரை பண்ணி பாருங்க...

நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பதில் இருந்து விடுபட டிப்ஸ்கள்:

1.ஒவ்வொரு மணிநேரமும் உங்கள் நிலையை மாற்றிக்கொண்டே இருங்கள். எடுத்துக்காட்டாக, ஃபோனைப் பயன்படுத்தும் போது சிறிது நேரம் நின்றுகொண்டே அதனை செய்யலாம்.

2.எளிமையான உடல் அசைவுகளை செய்வது, இடைவேளையின் போது அலுவலகத்திற்குள் நடப்பது உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்க உதவும். 

3. பணியாளரின் உயரத்திற்கு ஏற்ப கம்ப்யூட்டர் திரை மற்றும் மவுசை வைப்பது, சாய்வதைத் தடுக்கவும் தோரணையை சரிசெய்யவும் உதவுகிறது.

4.முடிந்தவரை நடக்கவும். லிஃப்ட்களை தவிர்த்துவிட்டு படிக்கட்டுகளை பயன்படுத்தவும்.

“நமக்கு அஜீரணம் தானே“ என அலட்சியமாக இருக்காதீங்க... அது மாரடைப்பின் எச்சரிக்கையாக இருக்கலாம்

5. வேலை செய்யும் போது கால்களுக்கு கீழே ஒரு சிறிய ஸ்டூலை வைக்கவும், கால்கள் இடுப்புக்கு ஆதரவாக இருப்பதையும், முழங்கால்கள் மற்றும் கணுக்கால் 90 டிகிரியில் இருப்பதையும் உறுதிப்படுத்தவும்.

சிம்பிளான சில உடல் அசைவுகள் (stretches) :

1. மார்பை நீட்டிப்பது:

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் கைகளை உங்கள் பின்னால் எடுத்துச் செல்லுங்கள். மார்பில் ஒரு நீட்சியை உணரும் வரை உங்கள் கைகளை சில அங்குலங்கள் உயர்த்தவும். குறைந்தபட்சம் 10 விநாடிகளுக்கு இதே நிலையில் கைகளை வைத்திருங்கள்.2. தோள்பட்டை:

இதை செய்ய, உங்கள் தோள்களை மேலே உயர்த்தி, சில வினாடிகள் அப்படியே வைத்திருங்கள், அவற்றை மீண்டும் கீழே கொண்டு வாருங்கள். இதே போல் 4-5 முறை செய்யவும். வேண்டுமென்றால் தோள்களை முன்னோக்கியும், பின்னோக்கியும் சுழற்றவும் செய்யலாம்.

3. ஸ்பைனல் ட்விஸ்ட்:

உடற்பகுதியை வலதுபுறமாகவும் பின்னர் இடதுபுறமாகவும் திருப்பவும். ஒருவர் தனது கைகளை ஆர்ம்ரெஸ்ட் அல்லது இருக்கையின் மீது பயன்படுத்தி சரியான தோரணையில் உடலை வைத்து இதனை செய்ய வேண்டும்.

கிரீன் டீ கொரோனா வைரஸை கட்டுப்படுத்துமா..? ஆய்வு சொல்லும் முடிவுகள்

4. உடற்பகுதிக்கான அசைவு:

விரல்களை ஒன்றாக இணைத்து, உங்கள் கைகளை கூரையை நோக்கி நீட்டவும். அவ்வாறு செய்யும்போது ஆழ்ந்த மூச்சை எடுத்து கைகளை கீழே கொண்டு வந்து மூச்சை வெளியே விடவும்.

5. கழுத்திற்கான அசைவுகள்:

நிற்கும் நிலையிலும் உட்கார்ந்த நிலையிலும் இதை செய்யலாம், தலையை இடதுபுறமாகவும் பின்னர் வலதுபுறமாகவும் சாய்க்க வேண்டும். நாற்காலியின் பக்கத்தைப் பிடித்து, தோள்பட்டை மற்றும் கழுத்துப் பகுதிகளுக்கான தளர்வை கொடுக்க இதனை செய்ய வேண்டும்.6. முன்கை அசைவு:

வலது கையை முன்னோக்கி நீட்டி, கையை கீழே திருப்பி, மற்றொரு கையால் விரல்களை உங்களை நோக்கி இழுக்க முயற்சிக்கவும். மறுபுற கைக்கும் அதே போல் செய்யவும்.

7. இடுப்பிற்கான பயிற்சி:

உங்கள் வலது கணுக்காலை இடது முழங்காலுக்கு மேல் வைத்து நேராக உட்காரவும். இப்போது, ​​மெதுவாக முன்னோக்கி சாய்ந்து முதுகை நேராக வைத்து, உங்கள் வலது இடுப்பு மற்றும் பின்புறத்தில் நீட்சியை நீங்கள் உணராவிட்டால், உடற்பகுதியுடன் இன்னும் கொஞ்சம் முன்னோக்கி நீட்டவும். மறுபுறம் அதே போல் முயற்சிக்கலாம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Heart disease, Office Work

அடுத்த செய்தி