நீண்ட கால கொரோனா பாதிப்பை பொருத்தவரையில், இது யாரை தாக்கும், எவ்வளவு நாட்கள் நீடிக்கும், என்னென்ன அறிகுறிகளைக் காட்டும் என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக வரையறுத்து சொல்லிவிட முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு நபருக்குமான பாதிப்புகள் என்பது பல வேறுபாடுகளைக் கொண்டதாக இருக்கிறது.
மிதமான அளவில் கொரோனா பாதிப்பு ஏற்படும் மக்கள் பொதுவாக ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் குணமடைந்து விடுகின்றனர் என்று அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்கிறது. அதுவே கொரோனா பாதிப்பு மிகுதியாக இருந்தால், அவர்கள் குணம் அடைவதற்கு 6 வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் ஆவதாக இந்த மையம் கூறுகிறது.
அதே சமயம், கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு தீவிரமான பாதிப்புகளை எதிர்கொண்ட மக்களுக்கு 1 அல்லது 2 ஆண்டுகள் வரையிலும் அதன் அறிகுறிகளை எதிர்கொள்வார்கள் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
எப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது?
2020 ஆம் ஆண்டு கொரோனா முதல் அலையின் போது சீனாவில் பாதிக்கப்பட்டவர்களில் 1,192 நோயாளிகளை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதாவது 2020ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி முதல் அதே ஆண்டு மே 29ஆம் தேதி வரையில் பாதிப்புக்கு உள்ளான நோயாளிகள் ஆய்வில் பங்கேற்றனர்.
also read : உடலில் கால்சியம் பற்றாக்குறை இருப்பதற்கான அறிகுறிகள் இவை!
நோயாளிகளை 6 மாதங்கள், 12 மாதங்கள், 2 வருடங்கள் என தனித்தனி குழுவாக பிரித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, நோயின் தீவிரத்தன்மை கொண்ட மக்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரையிலும் ஏதேனும் ஒரு அறிகுறி நீடிப்பது தெரிய வந்தது. நோயின் நீண்ட கால பாதிப்புகளை நோயாளிகள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆய்வு முடிவு சொல்வது என்ன?
கொரோனா தொற்றின் ஆரம்பகால தீவிரத்தன்மை எப்படி இருப்பினும் கூட, நோயாளிகளின் உடல்நலன் மற்றும் மனநலன் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் காணப்பட்டது. இருப்பினும், நோயாளிகளில் 55 சதவீதம் பேருக்கு இரண்டு ஆண்டுகள் வரையிலும் ஏதேனும் ஒரு அறிகுறியாவது தென்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளில் பொது ஜனதத்தை ஒப்பிடுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை சற்று மோசமாக இருக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில் இவர்கள் வழக்கமான பணிகளுக்கு திரும்பிவிட்ட போதிலும், அறிகுறிகளின் தாக்கம் என்பது அதிகமாகவே இருக்கிறது.
also read : பலவீனமாகி கொண்டே போகும் எலும்புகளை சரியாக கையாள்வது எப்படி?
அறியப்பட்டுள்ள நீண்டகால அறிகுறிகள் ?
கொரோனா நோயாளிகளின் உடல் நலன் மற்றும் வாழ்க்கை தரம் ஆகியவை குறைவாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் தலைச்சுற்றல், மூச்சுத்திணறல், தூக்கமின்மை பிரச்சினைகள் போன்றவை நீண்டகால பாதிப்புகளாக நீடிக்கின்றன. ஆய்வில் பங்கேற்ற மொத்த நோயாளிகளில் 31 சதவீதம் பேர் தலைச்சுற்றல் அல்லது தசைவலி அல்லது தூக்கமின்மை பிரச்சினை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Corona Symptoms, Covid-19