பணியில் மனச்சோர்வு பெண்களுக்கு நீரிழிவு நோயை உண்டாக்கும்?

சக ஊழியர்கள், பெண்களுக்கு பணி நீதியான உதவிகளை செய்தால் இந்த பிரச்னையைக் குறைக்கலாம்

news18
Updated: March 15, 2019, 8:06 PM IST
பணியில் மனச்சோர்வு பெண்களுக்கு நீரிழிவு நோயை உண்டாக்கும்?
மாதிரிப் படம்
news18
Updated: March 15, 2019, 8:06 PM IST
மனதளவில் சோர்வை ஏற்படுத்தக் கூடிய வேலையைச் செய்வதால் பெண்கள் நீரிழிவு நோய்க்கு உள்ளாவதாக யூரோப்பியன் ஜர்னல் ஆஃப் எண்டோக்ரினாலஜி (European Journal of Endocrinology)  நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வில் உடல் உழைப்பு மட்டுமன்றி மனதளவிலும் அதிகமாக உழைக்கக் கூடிய வேலைகளைச் செய்தால் நீரிழிவு நோய் ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் மனதளவில் அவர்கள் செய்யும் வேலை மனச்சோர்வை ஏற்படுத்துகிறதெனில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி பெண்கள் மற்றும் ஊழியர்கள் அந்த வேலையை விடுமாறும் அறிவுறுத்துகிறது.

இன்று நீரிழிவு நோய் பெருமளவு அதிகரித்துள்ளது. இதுவே சமூகத்திற்கு பெரும் கேடாகும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம், கண் பார்வை பறிபோதல், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களும் தொடரும் என்கிறது.

பொதுவாக இந்த நீரிழிவு நோய் என்பது உடல் எடை அதிகரிப்பு, உணவுக் கட்டுப்பாடு, புகைப்பிடித்தல், குடும்ப மரபணு போன்ற காரணங்களால் ஏற்படக் கூடியது. தற்போது பணி ரீதியான அழுத்தம் மற்றும் சோர்வும், நீரிழிவு நோயை அதிகரிக்கிறது. குறிப்பாக பெண்கள்தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் இதுகுறித்த ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது.

22 வயதிற்கு உட்பட்ட 70,000 பெண்களிடம் நடத்திய ஆய்வில் வேலை அழுத்தத்தால் மனச்சோர்வு அடைந்துள்ளதாகக் கூறியுள்ளனர். அந்தப் பெண்கள் அனைவருக்கும் நீரிழிவு நோய் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. அதில் 74 சதவீதம் பேர் ஆசிரியர் வேலை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆய்வில் உடன் இருந்த கய் ஃபகிரஸி (Guy Fagherazzi ) பேசுகையில், “பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, வேலையின் காரணமாக ஏற்பட்ட மனச்சோர்வால்தான் நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்று உறுதியாகக் கூற முடியாது. நீரிழிவு நோய் ஏற்பட இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அதை உறுதிபடுத்த நீண்ட ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

இறுதியாக “சக ஊழியர்கள், வேலை ரீதியாக பெண்களுக்கு உதவிகளைச் செய்தால் இந்தப் பிரச்னையைக் குறைக்கலாம்” என்று கூறியுள்ளார்.

இந்தக் குழு அடுத்தகட்டமாக மனச்சோர்வு கொண்ட மற்றும் நீரிழிவு நோய் கொண்ட நோயாளிகள் குறித்தும், அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், இதனால் அவர்களுடைய வாழ்கை எப்படி இருக்கிறது போன்ற கேள்விகளை முன் வைத்து ஆய்வு நடத்தவுள்ளது.

Also watch

First published: March 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...