காற்று மாசு இல்லாத இடமே இல்லை. காற்றில் ஏற்படும் மாசைக் குறைக்க பல விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளியில் சென்றால் தான் மாசுபாடு, அதனால் ஏற்படும் அலர்ஜி தொந்தரவு, வீட்டுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று பலரும் நினைக்கலாம். ஆனால், தலைவலி, அரிப்பு, ஜலதோஷம், அலர்ஜி உள்ளிட்ட பல விதமான நோய்கள் வீட்டுக்குள் இருக்கும் மாசுபாட்டால் வருகிறது என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று வெளியிட்டுள்ளது.
வீடு மிகவும் சுத்தமாக இருக்கிறது என்று நினைத்திருக் கொண்டிருப்போம். ஆனால், நமக்கே தெரியாமல் வீட்டில் பலவிதமான பிரச்சனைகள் உடல் நலத்தை பாதிக்கலாம். உதாரணமாக, தலைவலி, சரும அரிப்பு, மூக்கடைப்பு ஆகியவை. இவை அனைத்துமே காய்ச்சல் அல்லது தீவிரமான ஜலதோஷத்தின் அறிகுறியாக இருக்கலாம். ஆனால், வீட்டுக்குள் சுத்தமில்லாமல் இருப்பது தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்று சமீபத்தில் லக்னோவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இசபெல்லா தொபர்ன் கல்லூரி மற்றும் லக்னோ பல்கலைகழகத்தின் கெமிஸ்ட்ரி துறை ஆசிரியரான அல்ஃபிரட் லாரன்ஸ் மற்றும் அவரது ஒரு குழுவினர் ஒரு ஆய்வை மேற்கொண்டார். இதில், வீட்டில் ஏற்படும் அல்லது இருக்கும் காற்று மாசுபாடால், கண்களில் நீர் வடிதல், மூச்சுத்திணறல், வறண்ட தொண்டை, வீசிங் ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம் என்று கண்டறியப்பட்டது.
மூன்று வெவ்வேறு விதமான மைக்ரோ-என்விரான்மெண்ட்களில் இருந்து 560 பெண்கள் ஆய்வில் பங்கேற்றனர். இவற்றில் 77% குடியிருப்புப் பகுதிகளில் இருந்தும், 19% தொழில்துறை இருக்கும் பகுதிகளிலும், 3% கமர்ஷியல் பகுதியிலும் வசிக்கின்றனர்.
ஆய்வில் பங்கேற்ற பெண்கள் வசிக்கும் இடங்களில், ஒரு ரியல்-டைம் போர்ட்டபிள் ஏர் ஸாம்ப்ளர் வைக்கப்பட்டது. இந்த சாதனம் கதவுகள், சுவர்களில் இருந்து 2 மீட்டர்கள் தள்ளி வைக்கப்பட்டன. மாசு ஏற்படுத்தும் காரணிகள், உலக சுகாதார மையம் குறிப்பிட்ட அளவுகளை விட 2.5. அதிக அடர்த்தியாக உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் முடிவுகள் அனைத்தும் சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் பல்கலைகழத்தின் சர்வதேச மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில், 60% பெண்களுக்கு தலைவலி இருப்பதாகவும் 62% சதவிகிதம் குழந்தைகளுக்கு மூக்கடைப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதில் வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், வீட்டில் இந்த பிரச்சனை இருக்கிறது என்பதையே பலரும் அறிந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட 51% பெண்களுக்கு வீட்டுள் ஏற்படும் காற்று மாசுபாடு மற்றும் அதனால் உண்டாகும் அறிகுறிகள் ஆகியவற்றை பற்றி எந்த விதமான விழிப்புணர்வும் இல்லை.
Also Read : துரித உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை நமக்குள் தூண்டப்படுவது ஏன்?
காற்று மாசால் ஏற்படும் அறிகுறிகள் பெரும்பாலும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதங்களில் அதிகமாக இருப்பதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டுக்குள் இருக்கும் காற்று மாசால், குழந்தைகள் கவனச்சிதறல் நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Air pollution, Indoor pollution