முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உறைந்த இறைச்சியில் 30 நாட்கள் வரை கோவிட் வைரஸ் உயிர்வாழலாம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

உறைந்த இறைச்சியில் 30 நாட்கள் வரை கோவிட் வைரஸ் உயிர்வாழலாம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இறைச்சி

இறைச்சி

Corona virus : குளிர்சாதன பெட்டியில் நான்கு டிகிரி செல்சியஸில் சேமிக்கப்படும் இறைச்சி அல்லது மீன் மற்றும் ஃப்ரீஸர்களில் -20 டிகிரி செல்சியஸில் ஸ்டோர் செய்யப்படும் இறைச்சி மற்றும் மீன் ஆகிய இரண்டிலுமே கோவிட் வைரஸ் உயிர்வாழலாம் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கோவிட் தொற்று ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் எப்படியெல்லாம் பரவுகிறது, அதை எப்படி எல்லாம் தடுக்கலாம் என்று பல விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுத்தம், சுகாதாரம், சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது மட்டுமன்றி, ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிடுவது அவசியம். வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டால், நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருந்தால் எளிதில் மீண்டு விடலாம்.

அதற்கு, ஆரோக்கியமான உணவுப்பழக்கம் இன்றிமையாதது. எவ்வளவு தான் சுகாதாரமான முறையில் தரமான உணவுப்பொருட்களை வாங்கி சமைத்தாலும், சில நேரங்களில் உணவு நமக்கு விஷமாகி விடுகிறது. உலகை புரட்டி எடுத்த கொரோனா வைரஸ், உறைந்த இறைச்சியில் 30 நாட்கள் வரை உயிர்வாழலாம் என்றும், அதை சாப்பிடும் நம் உடலில் வைரஸ் பல மடங்கு பெருகி, தீவிரமான பாதிப்பு ஏற்படலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.

நாம் சாப்பிடும் இறைச்சியில் கோவிட் வைரஸ் இருந்தால், அது நம்முடைய வயிற்றுப் பகுதியில் குட்டி போட்டு வளர்வதோடு, நுரையீரல் பாதையிலும் வளரத் தொடங்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது நம் உடலே, கோவிட் வைரஸ் உற்பத்தியாகும் இடமாகி விடும்.

SARS-CoV-2 வைரஸ், அதாவது கோவிட் தொற்றை உருவாக்கும் வரியாஸ் குளிர்சாதனப்பெட்டி அல்லது ஃப்ரீசரில் வைக்கப்படும் அனைத்து விதமான இறைச்சி மற்றும் மீன் உணவுகளில் 30 நாட்கள் வரை உயிர்வாழும் என்று அப்ளைட் மற்றும் என்விரான்மெண்டல் மைக்ரோபயாலஜி ஜர்னல் சமீபத்தில் ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளது.

குளிர்சாதன பெட்டியில் நான்கு டிகிரி செல்சியஸில் சேமிக்கப்படும் இறைச்சி அல்லது மீன் மற்றும் ஃப்ரீஸர்களில் -20 டிகிரி செல்சியஸில் ஸ்டோர் செய்யப்படும் இறைச்சி மற்றும் மீன் ஆகிய இரண்டிலுமே கோவிட் வைரஸ் உயிர்வாழலாம் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை... சளி, இருமலை விரட்ட உதவும் 7 ஆயுர்வேத குறிப்புகள்...

அமெரிக்காவில் இருக்கும் கேம்பல் பல்கலைக்கழகத்தின் துணை பேராசிரியர் ஆன எமிலி பெய்லி, 30 நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில், அதாவது வீட்டில் பிரிட்ஜில் இறைச்சியையும், மீனையும் வைக்க மாட்டோம். ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் ஒருவாரம் மட்டும் தான் வைத்திருப்போம். ஆனால் ஃபிரீசரைப் பொறுத்தவரை பதப்படுத்தப்பட்ட உணவுகள், இறைச்சியாக இருந்தாலும் சரி, மீனாக இருந்தாலும் சரி அல்லது சைவ உணவுகளாக இருக்கும் பொழுதும் அவை நீண்ட நாட்கள் ஃப்ரீசரில் வைக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

எனவே 30 நாட்கள் வரை ஃப்ரீசரில் வைக்கப்படும் இறைச்சி பொருட்களில் கூட வைரஸ் வளரும் வாய்ப்பு இருக்கிறது என்று அவர் தெரிவித்திருந்தார். சமூகப் பரவலாக கோவிட் தொற்று தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் பரவுவதற்கு முன்பு இதைப் பற்றிய ஆய்வை ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் வாசிக்கும் அந்த பகுதிகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி பொருட்கள் உற்பத்தியாகி விநியோகிக்கப்படுகிறது. அந்த இடத்திலிருந்துதான் இறைச்சி வழியாக கோவிட் தொற்று மற்றவர்களுக்கும் பரவுகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிடவே கூடாதாம்... மீறினால் என்ன ஆகும்..?

இதே போன்ற சூழலில் வேறு சில வைரஸால் உயிர் வாழ முடியுமா என்பதை கண்டறிவதற்காக இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளோம் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கோவிட் வைரஸ் வயிற்றுக்குள் மல்டிபிளை ஆவதோடு, நுரையீரல் பாதையிலும் அது வளரலாம் என்று கூறப்பட்டிருப்பது தான் இதில் முக்கியமான மற்றும் கொஞ்சம் அச்சுறுத்தக்கூடிய விஷயமாக உள்ளது.

கோவிட் வைரஸ் தொற்றுக்கு பாதுகாப்பாக இருப்பது மட்டுமல்லாமல் உணவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உணவு சுகாதாரம், தரமான உணவு பொருட்கள் பயன்பாடு, மற்றும் உணவு பிராசஸ் செய்யும் இடத்தில் இருக்கும் சுத்தம் என்று உணவு பொருட்கள் தயாரிக்கும் எல்லா இடங்களிலும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வது கோவிட் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு உதவும்.

First published:

Tags: CoronaVirus, Meat