Home /News /lifestyle /

வயது அதிகரிக்கும்போது மூளைக்கு பாலின வேறுபாடு தெரியாது : புதிய ஆய்வு

வயது அதிகரிக்கும்போது மூளைக்கு பாலின வேறுபாடு தெரியாது : புதிய ஆய்வு

மூளை ஆரோக்கியம்

மூளை ஆரோக்கியம்

குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, மூளைக்கு பாலியல் வேறுபாடுகள் தெரியாது, பாலினங்களை நியூட்ரலைஸ் செய்கிறது என்று ஆய்வு முடிவில் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
நம்முடைய உடல் எவ்வாறு செயல்படுகிறது என்றும், உடலில் உள்ள செரிமான அமைப்புகள், நரம்பு மண்டலம், மூளை அமைப்பு, எலும்பு மற்றும் திசுக்கள் ஆரோக்கியம், எல்லாவற்றையும் மேம்படுத்த பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, மனிதர்களின் மூளை மிகவும் சிக்கலான அமைப்பாகும். நரம்புகளின் கூட்டமைப்பில் மூளையின் இயக்கம், செயல்பாடு பற்றி எவ்வளவு ஆய்வு செய்தாலும் தெரிந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்பதே மருத்துவர்களின் கருத்தாகும்.

தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மருத்துவ ஆய்வுகளில் சமீபத்தில் நடத்தப்பட்ட மூளை சம்மந்தப்பட்ட ஆராய்ச்சில், வியப்பில் ஆழ்த்தும் முடிவுகள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, மூளைக்கு பாலியல் வேறுபாடுகள் தெரியாது, பாலினங்களை நியூட்ரலைஸ் செய்கிறது என்று ஆய்வு முடிவில் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வு பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

ஒவ்வொரு நபரின் பாலியல் நடத்தை, செயல்பாடுகளை மூளை தான் இயக்கி, கட்டுப்படுத்துகிறது. ஒவ்வொரு உயிரினத்திலும் மூளையின் செயல்பாடு வேறுபாடும். உதாரணமாக ஃப்ரூட் ஃபிளை என்று கூறப்படும் ‘பழ ஈக்கள்’ வயதாகும் போது, ஆண், பெண் என்ற பாலின வித்தியாசத்தை இழக்கிறது. ஆண் மூளையில் பெண்மைத் தன்மை அதிகரித்து, பெண் மூலையில் ஆண் தன்மை அதிகரிக்கிறது. இந்த ஆய்வு, லின்கோபிங் யூனிவர்சிட்டியில் ஒரு ஆய்வுக்குழுவால் மேற்கொள்ளப்பட்டது.



ஆரோக்கியமான நபர்களுடன் ஒப்பிடும் போது, பலவீனமான நபர்கள், பாலியல் ரீதியான நடவடிக்கைகளில் விரும்புவது போல ஈடுபட முடியாது. ஆனால், வயது அதிகரிக்கும் போது, அது அனைவரையும் பலவீனமாக்குகிறது, மற்றும் பாலியல் ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபாடு குறைவதாகவும் கூறப்படுகிறது. இந்த மாற்றங்கள் மனிதர்களிடத்தில் காணப்படுவதால், ஏற்கனவே இந்த மாற்றம் இயல்பாகக் காணப்படும் பழ ஈக்களின் திசுக்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இத்தாலியில் உள்ள ரெஜ்ஜியோ கேலாப்ரியா யூனிவர்சிட்டியில் பணியாற்றும் இந்த ஆய்வு பிரதான ஆய்வாளரான மருத்துவர் அண்டானியோ மலாக்ரின், “எங்களுடைய ஆய்வு முடிவுகள் ஆண் மற்றும் பெண் மூளையில், வயது அதிகரிக்கும் போது காணப்படும் மரபணு வெளிப்பாடு ஒரே மாதிரியாக இருப்பதை காண்பிக்கிறது” என்று தெரிவித்தார்.

இறந்த பின்பு மீண்டும் உயிர்த்தெழுவது சாத்தியமா..? ஆய்வில் வெளியான சுவாரஸ்யம்...

இளம் ஆண்களின் மூளையை விட, இளம் பெண்களின் மூளையில் மரபணுவின் வெளிப்பாடு அதிகமாக இருந்தால், வயதான பெண்களின் மூளையில் மரபணுவின் வெளிப்பாடு குறைந்து, ஆண்களுக்கு வயதாகும் போது அதிகரிக்கிறது என்பதை ஆய்வு நிரூபித்துள்ளது. மேலும் இளம் ஆண்களின் மூளையில் மரபணு வெளிப்பாடு அதிகம் இருந்தால், அது மேலே குறிப்பிட்டவற்றுக்கு நேர்மாறாக உள்ளது. அது மட்டுமில்லாமல், இந்த மரபணு வெளிப்பாடு மாற்றங்கள், ஆண்களை விட பெண்களிடம் தான் அதிகம் காணப்படுகின்றன.



பாலியல் நடத்தைகளில் ஈடுபாட்டுடன் நடந்து கொள்வதும், பெண்கள் இனப்பெருக்கத்தில் வெற்றி பெறுவதும், ஆண்களை விட பெண்கள் மெதுவாக தான் மூப்பு அடைகிறது. ஒரு பெண் பழ ஈக்கு இனப்பெருக்கம் செய்வதற்கு தன்னிடம் எவ்வளவு ஆற்றல் இருக்கிறது என்பதைத் தேர்வு செய்தால் மட்டும் போதும். ஆனால், ஆண் பழ ஈயைப் பொறுத்தவரை, தனக்கான இணையைத் தேட மற்ற ஆண் ஈக்களுடன் போட்டி போட்டு, வெற்றி பெற வேண்டும். இனப்பெருக்கம் மற்றும் அதைச் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட, இரண்டு பாளினத்துக்குமே, குறைவான ஆதாரங்கள் உள்ளன என்பதை வயது நிர்ணயிக்கிறது. இதனால் தான், ஒரு ஆண் ஈக்கு மற்றொரு ஆண் ஈ உடன் நடக்கும் போட்டியின் காரணமாக ஆண்கள் அதிக செயல்பாடுகளில் ஈடுபட வேண்டியுள்ளது.

ஈக்கள் மீது மட்டுமல்லாமல், மனிதர்கள் மற்றும் வேறு சில விலங்குகள் மீதும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. வயது சார்ந்த மாற்றங்கள் ஒரு நபரின் பாலியல் மரபணுவை எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்ற ஆய்வு, மேலே உள்ள அதே மாதிரியான முடிவுகளை நோக்கித் தான் செல்கிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Brain Health

அடுத்த செய்தி