மக்கள் அதிகம் விரும்பி வளர்க்கும் செல்லப் பிராணிகளில் நாய்க்கு தான் முதலிடம் இருக்கும். தாங்கள் வளர்க்கும் நாய் தங்களிடம் எவ்வளவு பாசமாக இருக்கிறது என்பது குறித்தும், எந்த அளவுக்கு விசுவாசமாக உள்ளது என்பது குறித்தும் பலர் பேசுவதை நீங்கள் பார்த்திருக்க முடியும். நாய் வளர்ப்பதன் மூலமாக கிடைக்கும் மகிழ்ச்சி தான் அவர்களது உடல் நலனை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இப்போது நீங்கள் நாய் வளர்த்தால் உங்கள் இதய நலன் மேம்படும் என்றும், உங்களுக்கு ஹார்ட் அட்டாக் என்பது வராது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகெங்கிலும் மக்கள் அதிகம் பேர் இதயம் சார்ந்த நோய்களால் உயிரிழக்கின்றனர். இந்நிலையில், உலகில் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்பவர்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், அவர்களது ஆரோக்கியத்திற்கு பின் வரும் காரணங்கள் கண்டறியப்பட்டன.
- தினசரி உடற்பயிற்சி
- ஒரு நோக்கத்துடன் வாழ்வது
- மன அழுத்தம் குறைக்க நடவடிக்கை
- மிதமான கலோரி உள்ள உணவுகளை சாப்பிடுவது
- தாவரங்கள் சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்வது
- மிதமான அளவுக்கு மட்டும் மது அருந்துவது, பல சமயங்களில் ஒயின் மட்டும் எடுத்து கொள்வது.
- மத நம்பிக்கை கொண்டிருப்பது
- குடும்ப வாழ்க்கையில் ஈடுபாட்டுடன் இருப்பது
- சமூக சேவை செய்வதை வாழ்வியல் பழக்க வழக்கமாக கொண்டிருப்பது
ஒரு மனிதன் நீண்ட காலத்திற்கு, ஆரோக்கியமாக வாழுவதற்கு இவை தான் காரணமாக இருக்கின்றன. ஆனால், இதில் சொல்லப்படாத மற்றொரு விஷயம் இருக்கிறது. ஸ்வீடனைச் சேர்ந்த பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு குறித்த தகவல் அது. வீட்டில் வளர்ப்புப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கும் ஆயுள் கூடுகிறதாம். இதயம் சம்பந்தமான நோய்கள் எதுவும் வருவதில்லையாம்.
Also Read : வயிற்று வலி கூட கொரோனா அறிகுறியா.?
நாய் வளர்ப்பதால் கிடைக்கும் பலன்கள்
உங்கள் மன அழுத்தத்தை போக்கி, நீங்கள் நிம்மதியாக உறங்கும் சூழலை நாய்கள் ஏற்படுத்தும். நீங்கள் அதிக உற்பயிற்சி செய்ய, அது ஊக்கமாக அமையும். அதாவது நாயை பராமரிக்க வேண்டும் என்பதற்காகவே நீங்கள் நடைபயிற்சி செய்வீர்கள். அதுவே தினசரி கடமைகளில் ஒன்றாகும் போது உங்களுக்கு டூ இன் ஒன் பலன் கிடைத்து விடுகிறது.
நாயை அழைத்துக் கொண்டு வெளியே செல்லும்போது புதுப்புது நபர்களின் அறிமுகம் மற்றும் அவர்களுடன் நட்புறவு கிடைக்கிறது. மனதுக்கு பிடித்த விஷயங்களை அவர்களுடன் பேசுவதை நீங்கள் வழக்கமாக கொண்டிருப்பீர்கள். ஆகவே, உங்கள் மன அழுத்தம் வெகுவாக குறைகிறது.
Also Read : பெண்களிடம் காணப்படும் சிறுநீரக நோய் அறிகுறிகள்
நாய் வளர்ப்பவர்களில் 40 வயது முதல் 80 வயது வரையிலான நபர்களை தேர்வு செய்து, 12 ஆண்டுகளுக்கு ஆய்வு நடத்தப்பட்டது. இதில், அவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் கட்டுக்குள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.