சமீபத்தில் வெளியான ஆய்வின் முடிவின்படி உலகளாவிய டிமென்ஷியா பாதிப்புகள் 2050-ஆம் ஆண்டிற்குள் தற்போது இருப்பதை விட மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாஷிங்டன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் முடிவில் உலகளவில் டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்து வரும் 2050-ஆம் ஆண்டில் 152 மில்லியனை எட்டும் என்று கணித்துள்ளனர். டிமென்ஷியா என்பது நினைவாற்றல் இழப்பு, மொழி இழப்பு, சிக்கல் தீர்க்கும் திறன் இழப்பு மற்றும் அன்றாட வாழ்க்கையில் தலையிடும் அளவுக்கு கடுமையானதாக இருக்கும் பிற சிந்தனை திறன்களை இழப்பதை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான சொல் ஆகும்.
சுருக்கமாக சொல்வதென்றால் முதுமை மறதி நோய் என்றும் இதை குறிப்பிடலாம். கிழக்கு சப்-சஹாரா (Eastern Sub-Saharan), வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு போன்ற பகுதிகள் அதிக எண்ணிக்கையிலான டிமென்ஷியா பாதிப்புகளை பதிவு செய்துள்ளன. உலகளாவிய கல்வி அணுகலில் ஏற்பட்டுள்ள நேர்மறையான போக்குகள் காரணமாக 2050-ஆம் ஆண்டளவில் உலகளவில் டிமென்ஷியா பாதிப்பு சுமார் 6.2 மில்லியன் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அதே நேரத்தில் டிமென்ஷியா வருவதற்கான ஆபத்து காரணிகளாகக் கருதப்படும் புகைப்பழக்கம் மற்றும் உயர் உடல் நிறை குறியீட்டெண் (Body Mass Index - BMI) மற்றும் உயர் ரத்த சர்க்கரை போன்றவற்றின் அடிப்படையில் டிமென்ஷியா பரவல் அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆபத்து காரணிகளில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் காரணமாக 2019 மற்றும் 2050 ஆண்டுகளுக்கு இடையில் உலகளவில் 6.8 மில்லியன் டிமென்ஷியா கேஸ்கள் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். 2050-க்குள் டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து 152 மில்லியனாக உயரும் என்று இந்த புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் உள்ள பெரியவர்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் கல்விக்கான அணுகலை அதிகரித்தல் மற்றும் இதய ஆரோக்கிய பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்துதல் உள்ளிட்டவை சமீபத்திய ஆண்டுகளில் டிமென்ஷியா பாதிப்புகளை குறிப்பிடத்தக்க வகையில் மிக வேகமாக அதிகரிக்காமல் வைத்திருக்க உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Must Read | வெங்காயத்தின் இந்த 5 நன்மைகளை தெரிந்துகொண்டால் இனி உணவில் இருந்து ஒதுக்க மாட்டீர்கள்..!
இளம் வயதினருக்கும் டிமென்ஷியா ஆபத்து:
டிமென்ஷியா என்னும் மறதி நோய்க்கு வயது அதிகரிப்பு அல்லது முதுமை ஒரு அறியப்பட்ட வலுவான ஆபத்து காரணியாக இருக்கிறது. அல்சைமர் நோய் அல்லது பக்கவாதம் போன்ற மூளையை முதன்மையாக அல்லது இரண்டாவதாக பாதிக்கும் பலவிதமான நோய்கள் மற்றும் காயங்களாலும் டிமென்ஷியா ஏற்படலாம். என்றாலும் கூடுதலாக உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறைகளை கொண்ட இளம் வயதினருக்கு இந்த முதுமை நோய்க்கான ஆபத்து காரணிகள் விரைவாக அதிகரித்து வருகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் நிபுணரான எம்மா நிக்கோல்ஸ் இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கினார். உலகளவில் டிமென்ஷியா பாதிப்புகளின் எண்ணிக்கை சீரான விகிதத்தில் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, நோய்களை மாற்றியமைக்கும் சிகிச்சைகள் மற்றும் டிமென்ஷியா தொடங்குவதைத் தடுக்க அல்லது தாமதப்படுத்த குறைந்த விலை தீர்வுகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுவது மிக முக்கியம் என்று குறிப்பிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முழுவதும் டிமென்ஷியா (முதுமை மறதி நோயால்) கிட்டத்தட்ட 50 மில்லியன் மக்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 10 மில்லியன் புதிய பாதிப்புகள் பதிவாகி வருவதாகவும் WHO அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.