ஆல்கஹால் பழக்கம் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றே நாம் அறிந்திருக்கிறோம். ஏனெனில், அவை ஒருவரை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்குவதோடு, ஒருவரது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும், பியர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில் சில உண்மைகளும் உள்ளது. ஆனால், இங்கு ஒரு ஆய்வு ஆல்கஹால் குடிப்பதால் ஒரு முக்கியமான ஆரோக்கிய நன்மை இருப்பதாக தெரிவித்துள்ளது.
அதாவது, எதையுமே அளவோடு எடுத்துக்கொண்டால் அது ஆரோக்கியம் தான் அந்த வகையில், தினசரி ஒரு குறிப்பிட்ட அளவு ஆல்கஹாலை எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருமாம். வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு பிண்ட் அளவு மது அருந்துவது இருதய நோயின் (CVD) அபாயகரமான விளைவுகளைத் தடுக்க உதவும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. வாஷிங்டனின் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் ஏவலுஷன் நிறுவனத்தின் மேம்பாட்டு மற்றும் பயிற்சியின் மூத்த இயக்குனர் இமானுவேலா காகிடோ கூறியதாவது, "இந்த ஆய்வு ஏற்கனவே CVD பிரச்சனை உள்ளவர்களுக்கும் பொருந்தும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஆராய்ச்சியாளர் செங்கி டிங்கின் கூற்றுப்படி, "CVD நோயாளிகள் அதிக
மாரடைப்பு, பக்கவாதம் அல்லது ஆஞ்சினா போன்ற பிரச்சனைகள் வருவதை தவிர்ப்பதற்கு குடிப்பழக்கத்தை கைவிட வேண்டிய அவசியமில்லை என்று எங்கள் கண்டுபிடிப்புகள் குறிப்பிடுகின்றன. ஆனால் வாரம்தோறும் அவர்கள் எடுத்துக்கொள்ளும் ஆல்கஹாலின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அதிக ஆல்கஹால் எடுத்துக்கொண்டால் அவர்கள் மற்ற இணை நோய்களைப் பெறுவதற்கான அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேபோல, குடிப்பழக்கம் இல்லாத CVD பிரச்சனை உள்ளவர்களை ஆல்கஹால் குடிக்கும்படி வற்புறுத்தவும் கூடாது." என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து லண்டன் பல்கலைக்கழக கல்லூரி வல்லுநர்களின் கூற்றுப்படி, வாரத்திற்கு 105 கிராம் வரை ஆல்கஹால் உட்கொள்வது CVD உள்ளவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம், ஆஞ்சினா அல்லது இறப்பு ஏற்படும் அபாயம் குறைவு என தெரிவித்துள்ளனர். இந்த அளவு 13 யூகே யூனிட் ஆல்கஹாலுக்கு சமம். அதாவது ஆறு பிண்ட்ஸ் நடுத்தர வலிமை கொண்ட பீர்-க்கு சமம் அல்லது ஒரு பாட்டில் ஒயினை விட சற்று அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Must Read |
‘இனியும் தயங்காதீங்க’ | பெண்களே… மெனோபாஸ் குறித்து நீங்கள் தயங்காமல் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!
ஆய்வுக்காக, இங்கிலாந்தின் பயோபேங்க், இங்கிலாந்திற்கான சுகாதார ஆய்வு, ஸ்காட்டிஷ் சுகாதார கணக்கெடுப்பு மற்றும் 12 முன் ஆராய்ச்சி ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட 48,423 CVD பாதிப்புள்ள நோயாளிகளின் தரவைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் அவர்களின் மாரடைப்பு ஆபத்தை கணக்கிட்டனர். அதில் ஆல்கஹால் உட்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு 62 கிராம் வரை ஆல்கஹால் உட்கொள்பவர்களில் மீண்டும் மீண்டும் மாரடைப்பு அல்லது இறப்பு போன்ற அபாயம் ஏற்படுவது மிக குறைவு என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அப்படியிருந்தும், CVD நோயாளிகள் குடிப்பழக்கத்தைத் தொடங்கலாம் என்று அவர்கள் ஊக்குவிக்கவில்லை. CVD பாதிப்புள்ள மதுப்பழக்கம் இல்லாதவர்கள் கட்டாயம் புதிதாக குடிப்பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளக்கூடாது என்பதை மீண்டும் ஆய்வுக்குழு சுட்டிக்காட்டியது. இது மதுப்பழக்கம் உள்ள CVD நோயாளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.