Home /News /lifestyle /

IVF மூலம் பிறக்கும் குழந்தைகள் பதின்பருவத்தில் புத்திசாலிகளாக இருக்கின்றனர் - ஆய்வில் தகவல்!

IVF மூலம் பிறக்கும் குழந்தைகள் பதின்பருவத்தில் புத்திசாலிகளாக இருக்கின்றனர் - ஆய்வில் தகவல்!

IVF சிகிச்சை

IVF சிகிச்சை

ல ஆய்வுகள் ART மூலம் பிறந்த குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், வளர்ச்சி மற்றும் உளவியல் நலம் ஆகியவற்றை இயற்கை முறையில் பிறந்த குழந்தைகளுடன் ஒப்பிட்டு உள்ளன.

சமீபத்திய ஆய்வின்படி, IVF போன்ற அசிஸ்டட் ரீப்ரொடக்ட்டிவ் டெக்னலாஜி (ART) மூலம் உருவாக்கப்படும் குழந்தைகள், அவர்களின் அடல்ட்ஹூட் அதாவது முழுமையாக வளர்ந்த பருவத்தில் (பொதுவாக 20 அல்லது 21 வயதிற்கு மேற்பட்ட காலம்) அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் சில நன்மைகளை கொண்டிருக்கலாம் என தெரிகிறது.

புதிய ஆய்வின் முடிவுகள் ‘Human Fertility’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன. ART மூலம் கருத்தரித்தவர்கள் மற்றும் இதனை பயன்படுத்த போகிறவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை இந்த ஆய்வு வெளிப்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தின் முதன்மை எழுத்தாளர் மாறும் ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவருமான ஹம்மர்பெர்க் இதுப்பற்றி கூறுகையில், "எங்கள் ஆய்வின் கண்டுபிடிப்புகள், ART மூலம் பிறந்த குழந்தைகளின் இளமைப் பருவத்தில், அவர்களின் வாழ்க்கை தரத்தில் சில நன்மைகள் கிடைக்கும் என்று கூறுகின்றன என்றார்.

இயற்கையாக பிறந்த குழந்தைகள் அடல்ட்ஹூட்டில் இருப்பதை போலவே ஒத்த உடல் ஆரோக்கியத்தை ART மூலம் பிறந்த குழந்தைகள் தங்கள் அடல்ட்ஹூட் பருவத்தில் கொண்டுள்ளனர் என்பதற்கு முந்தைய சான்றுகள் உள்ளன என்றார். 1978-ல் முதன் முதலாக IVF மூலம் முதல் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து சுமார் 40 வருடங்களில் ART-ன் விளைவாக சுமார் 8 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இதுவரை பிறந்துள்ளனர்.



பல ஆய்வுகள் ART மூலம் பிறந்த குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், வளர்ச்சி மற்றும் உளவியல் நலம் ஆகியவற்றை இயற்கை முறையில் பிறந்த குழந்தைகளுடன் ஒப்பிட்டு உள்ளன. ஆனால் தற்போது வரை ART மூலம் பிறந்த குழந்தைகளினுடைய முழுமை வளர் பருவத்தில் அவர்களின் உடல்நலம் மற்றும் வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கிறது என்பது பற்றி குறைவாகவே அறியப்படுகிறது.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சிட்ரஸ் பழங்கள் சாப்பிடலாமா..? அதனால் பாதிப்புகள் வருமா..?

இதனிடையே சமீபத்திய ஆய்வில் இயற்கையாக பிறந்தவர்கள் மற்றும் ART மூலம் பிறந்தவர்கள் என மொத்தம் 193 இளைஞர்கள் பங்கேற்க வைக்கப்பட்டனர். இவர்கள் 18-28 வயதில் வாழ்க்கைத் தரம் ( T1) மற்றும் 22-35 வயதிற்குள் வாழ்க்கைத் தரம் (T2) எப்படி என்பதை உள்ளடக்கிய கேள்விகளுக்கு பதில் அளித்தனர். இதில் உடல், உளவியல், சமூக தொடர்புகள் மற்றும் சுற்றுச்சூழல் என வாழ்க்கை தரத்தின் 4 களங்கள் மதிப்பிடப்பட்டது.



இரு பிரிவினரும் பதில் அளித்த T1 மற்றும் T2-வை நன்கு ஆராய்ந்த ஆய்வாளர்கள் இளமைப் பருவத்தில் இருக்கும் பிற உளவியல் காரணிகளைக் கணக்கில் கொண்டு புள்ளியியல் மாற்றங்களைச் செய்த பிறகு, T2-ல் உள்ள சமூக உறவுகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டிலும் ART மூலம் பிறந்தவர்கள் அதிக மதிப்பெண்களுடன் அதாவது சிறந்த வாழ்க்கைத் தரத்துடன் வலுவாக இணைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

ART மூலம் பிறந்த நபர் தான் எவ்வாறு பிறந்தோம் என்பதைப் பொருட்படுத்தாமல், பெற்றோருடன் சிறந்த உறவு கொண்டிருந்தனர். மேலும் குறைவான உளவியல் துன்பம் மற்றும் இளமை பருவத்தில் சிறந்த குடும்ப நிதி நிலைமை ஆகியவற்றை பெற்றனர். இது அவர்களின் சிறந்த அடல்ட்ஹூட் வாழ்க்கைத் தரத்திற்கு பங்களித்தன என்று ஹம்மர்பெர்க் கூறி இருக்கிறார்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: IVF Treatment, Pregnancy care, Teenage

அடுத்த செய்தி