நீங்கள் உண்ணும் உணவுகள் உங்கள் வாழ்க்கையை பல வழிகளில் பாதிக்கலாம். நாள் முழுவதும் உங்களுக்கு எவ்வளவு ஆற்றல் உள்ளது, உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது மற்றும் இரவில் நீங்கள் எவ்வளவு நன்றாக தூங்குகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்க உதவுவது மட்டுமல்லாமல் - அவை உங்கள் மனதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம். உங்களைக் கூர்மையாக வைத்திருக்கும் அல்லது அறிவாற்றலை விரைவுபடுத்தவும் செய்யும். அதிக நார்ச்சத்துள்ள உணவை கண்டறிந்து உண்பது டிமென்ஷியாவிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும் என்று புதிய ஆராய்ச்சி கூறுகிறது.
நியூட்ரிஷனல் நியூரோ சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், சுமார் 20 ஆண்டுகளில் 40-64 வயதுடைய 3,700க்கும் மேற்பட்ட ஜப்பானியர்களை ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்தனர். முடிவில், சுமார் 670 பேர் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அவர்கள் அனைவரும் உணவில் நார்ச்சத்து சேர்க்காதவர்கள் ஆவர். அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளில் டிமென்ஷியா நிலை உருவாகும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க | பல் சுத்தம் முதல் டீடாக்ஸ் வரை… ஆயில் புல்லிங்கின் அசரவைக்கும் நன்மைகள்!
ஃபைபர் நுகர்வு மற்றும் பலவீனப்படுத்தும் டிமென்ஷியா ஆகியவற்றுக்கு இடையேயாக இந்த இணைப்பு இருந்தது. அதாவது, அதிக நார்ச்சத்து சாப்பிடுவது டிமென்ஷியாவிலிருந்து உங்களைப் பாதுகாப்பதில் உதவியாக இருக்கும்.
சமீப ஆண்டுகளில், நார்ச்சத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் சக்திவாய்ந்த ஒன்றாக முன்னணியில் உள்ளது-- குறிப்பாக அறிவாற்றல் ஆரோக்கியத்திற்கு என்று வரும்போது. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் (பீன்ஸ்) போன்ற நார்ச்சத்து நிறைந்த தாவர உணவுகளை உணவில் சேர்த்தல், அத்துடன் நட்ஸ் மற்றும் விதைகளின் நுகர்வு அவசியம் ஆகும். இருப்பினும், உங்கள் உணவில் போதுமான நார்ச்சத்து உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஊட்டச்சத்து உங்கள் செரிமானம், ஆற்றல் அளவுகள், நல்ல கொழுப்பு, தோல் மற்றும் பலவற்றிற்கு உதவும்.
இதையும் படிங்க | ‘வெரிகோஸ் வெயின்ஸ்’ நோய் குறித்து தெரியுமா? மருத்துவர் பகிரும் எச்சரிக்கை தகவல்!
ஃபைபர் நிறைந்த உணவுகளைப் பெறுவதை நோக்கமாகக் கொள்ளுங்கள் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உணவு வழிகாட்டுதல்களின்படி, சராசரியாக 35 வயதை தாண்டியவர்கள் டிமென்ஷியாவைத் தடுக்க 1,000 கலோரிகளுக்கு 14 கிராம் நார்ச்சத்து அல்லது ஒரு நாளைக்கு 25-38 கிராம் பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.