குழந்தைகள் பெரும்பாலும் வீட்டில் இருப்பவர்களைப் பார்த்து தான் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறார்கள். என்னென்ன வார்த்தைகளை பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், பல் துலக்குவது, சாப்பிடுவது, பெரியவர்களுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்பது உட்பட வீட்டுப் பெரியவர்கள் என்ன செய்கிறார்களோ குழந்தைகள் அதை அப்படியே பிரதிபலிக்கும். அதே போல, வீட்டில் நடக்கும் பிரச்சினைகளும், குழந்தைகள் சந்திக்கும் மோசமான அனுபவங்களும் அவர்கள் வளர வளர அவர்களின் மன நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அபாயம் உள்ளது என்று ஒரு சமீபத்தில் ஆய்வு தெரிவித்துள்ளது.
இளம் வயதிலேயே ஏற்படும் மன அழுத்தம் குழந்தைகள் வளர்ந்த பிறகு, நீண்ட காலத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். Child Abuse and Neglect என்ற பத்திரிக்கையில் ஆக்லாந்து பல்கலைக் கழகம் ஆய்வின் முடிவுகளை வெளியிட்டது. இந்த ஆய்வில் 2019 நியூசிலாந்து குடும்ப வன்முறை சர்வேயில் பங்கேற்ற 2,888 நபர்களின் அனுபவங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வாளர்கள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய எட்டுவிதமான பிரச்சினைகளை ஆராய்ச்சி செய்தனர். வீட்டுக்குள்ளேயே சண்டைகள் மற்றும் வன்முறை, போதைப்பொருள் பழக்கம், மன ரீதியான பாதிப்பு, விவாகரத்து குடும்ப நபர்களுக்கான பாதிப்பு ஆகியவற்றோடு உடல் ரீதியான, பாலியல் ரீதியான மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்களை கணக்கிலெடுத்து ஆய்வை மேற்கொண்டனர்.
மக்கள் தொகை ஆரோக்கியம், மருத்துவ மற்றும் சுகாதார அறிவியல் பள்ளியின் இணை பேராசிரியரான ஜேனட் ஃபேன்ஸ்லோ, "குழந்தை பருவத்தில் ஏற்படக்கூடிய எதிர்மறையான அழுத்தங்கள் நம்முடைய ஆரோக்கியத்தை பல விதங்களில் நீண்டகாலத்துக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இது உடல் ரீதியான பாதிப்பாகவும் மாறலாம். அல்லது மன ரீதியான பிரச்சனையாகவும் ஏற்படலாம். ஆனால், இதன் விளைவுகள் நம்முடைய சமூகம் முழுவதும் எதிரொலிக்கின்றன. நம்முடைய குடும்பங்கள், நம் சுகாதார அமைப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் கணிசமான அளவு அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன" என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | ‘நீர்ச்சத்து எனும் உயிர்ச்சத்து’- உடம்பில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க இவற்றை செய்தால் போதும்!
ஆய்வில் பங்கேற்றவர்களில் நாற்பத்தி ஐந்து சதவீதத்தினர், தங்களது குழந்தைப் பருவத்தில் எந்த விதமான எதிர்மறையான அனுபவங்களையும் சந்திக்கவில்லை என்று தெரிவித்தனர். மீதம் இருப்பவர்களில், நான்கு அல்லது அதற்கு மேலான எதிர்மறையான மோசமான அனுபவங்களை எதிர்கொண்டவர்களுக்கு எதிர்காலத்தில் மனநலப் பிரச்சனைகள் ஏற்படும் பாதிப்பு உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அது மட்டுமின்றி எந்த அளவுக்கு எதிர்மறையான விஷயங்களை இளம்வயதில் சிறுவர்கள் பார்க்கிறார்களோ அல்லது அவர்களுக்கு ஏற்படுகிறதோ, அதே அளவுக்கு அவர்களின் மன ஆரோக்கியம் பாதிக்கும் எதிர்காலத்தில் பாதிக்கக் கூடும். தீவிரமான மன அழுத்தம், அதீதமான கோபம், யாரிடமும் பழக முடியாத தன்மை, எபோதுமே பதற்றமாக இருப்பது, மாறிக் கொண்டே இருக்கும் மனநிலை, போன்ற பாதிப்புகள் ஏற்படுத்தலாம்.
ஒரு குழந்தையை மோசமான நிகழ்வுகளிலிருந்து எப்போதுமே பாதுகாக்க முடியாது என்றாலும், முடிந்த வரையில் பாதுகாப்பான ஆரோக்கியமான சூழலில் குழந்தையை வளர்ப்பது பெற்றோரின் கடமைகளில் அதுவும் ஒன்று.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Child Care, Mental Health