Home /News /lifestyle /

வாழைப்பழம் சாப்பிட்டால் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாமா..!! ஆய்வில் வெளியான தகவல்..!

வாழைப்பழம் சாப்பிட்டால் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாமா..!! ஆய்வில் வெளியான தகவல்..!

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க பொட்டாசியம் என்ற மினரல் அவசியம். அதிக பொட்டாசியம் நுகர்வு உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற நிலைகளின் குறைந்த ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

உலகளவில் மிகவும் பரவலாக நுகரப்படும் மற்றும் எளிதாக கிடைக்கும் பழங்களில் ஒன்றாக இருக்கிறது வாழைப்பழங்கள். ஒருவரின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் மெக்னீசியம், பொட்டாசியம், மாங்கனீசு, நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின்கள் பி6 மற்று சி உள்ளிட் பல ஊட்டச்சத்துக்கள் வாழைப்பழங்களில் உள்ளன.

எனவே வாழைப்பழங்களை தினசரி சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை குறைக்கும், புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். இது மட்டுமின்றி, வாழைப்பழம் பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. இதனிடையே மாரடைப்பு அபாயத்தை குறைக்க வாழைப்பழங்கள் உதவுவதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பொட்டாசியத்தின் வளமான மூலம்..

நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க பொட்டாசியம் என்ற மினரல் அவசியம். அதிக பொட்டாசியம் நுகர்வு உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற நிலைகளின் குறைந்த ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வாழைப்பழங்கள் பொட்டாசியத்தின் சிறந்த வளமான மூலமாகும். வழக்கமான இதய துடிப்பை பராமரிக்க மற்றும் ரத்த அழுத்தத்தில் சோடியத்தின் தாக்கத்தை குறைக்க பொட்டாசியம் உதவுகிறது.

பொட்டாசியம் மட்டுமல்ல, வாழைப்பழம் நார்ச்சத்து, ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆக்ஸிஜனேற்றங்களின் நல்ல மூலமாகும். இவை அனைத்துமே இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒரு வாழைப்பழத்தில் சுமார் 455 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. ஒவ்வொரு இதய துடிப்பும் பொட்டாசியத்தை சார்ந்துள்ளது. கூடுதலாக சிறுநீரகங்களுக்கு ரத்தத்தை வடிகட்ட உதவுகிறது மற்றும் உடலின் திரவ அளவை பராமரிக்க உதவுகிறது.



ஆய்வு:

ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் எலிகளைப் பயன்படுத்தி ஒரு ஆய்வை மேற்கொண்டனர். குறைந்த உணவு பொட்டாசியம் உட்கொள்ளல் மற்றும் ஆர்ட்டிரியல் கால்சிஃபிகேஷன் மற்றும் பெருந்தமனி விறைப்பு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு இடையே ஒரு தொடர்பை அவர்கள் கண்டுபிடித்தனர். ஏனெனில் மக்களில் இதய நிலை பொதுவாக பெருந்தமனி விறைப்பால் (aortic stiffness) கணிக்கப்படுகிறது. குறைக்கப்பட்ட பொட்டாசியம் உணவை உண்ட எலிகள் அதிக அளவு பெருந்தமனி விறைப்பு தன்மையைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டி காட்டி உள்ளனர். எனவே குறைந்த பொட்டாசியம் உணவுகள் பெருந்தமனி விறைப்பை ஊக்குவிக்கிறது என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்தனர்.

நல்ல கொலஸ்ட்ரால் நிறைந்த டாப் 10 உணவுகள்... இதில் தினம் ஒன்று சாப்பிடுங்கள்...

மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் வாழைப்பழம்...

ஆய்வின்படி, பொட்டாசியம் மிக குறைவாக உட்கொள்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் 50% அதிகமாக உள்ளது. தினசரி வாழைப்பழம் சாப்பிடுவது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கும் என இந்த புதிய ஆய்வு தெரிவிக்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, ஒரு வாழைப்பழம் தினசரி பொட்டாசியம் தேவையில் 10% பூர்த்தி செய்கிறது. மேலும் இது சிறுநீரில் சோடியம் வெளியேற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.



வாழைப்பழத்தின் பிற நன்மைகள்...

இதயம் தொடர்பான அபாயங்களை குறைப்பதைத் தவிர வாழைப்பழம் பல நன்மைகளை நமக்கு வழங்குகிறது.

நினைவாற்றல்:

வாழைப்பழத்தில் காணப்படும் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம், நினைவாற்றலை பாதுகாக்கவும், நினைவாற்றல் திறனை மேம்படுத்த உதவும்.

எடையை குறைக்க உதவும் 7 சுவையான இந்திய உணவு வகைகள்...

செரிமான ஆரோக்கியம்:

வாழைப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம். இவை இரண்டுமே சீரான மற்றும் செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கும் முக்கிய ஊட்டச்சத்துக்கள்.

நீரிழிவு நோயை தடுக்க உதவும்:

வாழைப்பழங்கள் மற்றும் நார்ச்சத்து உள்ள பிற பழங்களை சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். அதிக நார்ச்சத்து கொண்ட உணவு வகை 2 நீரிழிவு அபாயத்தைத் தடுக்க உதவும். எனினும் நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழத்தை அளவோடு சாப்பிட வேண்டும்.



ரத்த அழுத்தம்:

மக்கள் சோடியம் அல்லது உப்பை உட்கொள்வதை குறைக்கும் அதே வேளையில் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது இதய அழுத்தத்தை குறைத்து ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

புற்றுநோயின் ஆபத்தை குறைக்கிறது:

வாழைப்பழத்தில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. வாழைப்பழத்தில் இருக்கும் லெக்டின் எனப்படும் புரதம், லுகேமியா செல்கள் வளர்ச்சியை தடுக்க உதவும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Banana, Heart disease

அடுத்த செய்தி