பெண்கள் தங்களது பிறப்புறுப்பை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக கருத்தரித்தலுக்காக IVF (இன்-விட்ரோ கருத்தரித்தல்) போன்ற சிகிச்சை முறைகளை தேர்ந்தெடுக்கும் பெண்கள் பிறப்புறுப்பு ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ஏப்ரல் 2022ம் ஆண்டு, Nature.com நடத்திய ஆய்வின்படி, ஆரோக்கியமான பெண்களின் யோனி நுண்ணுயிரியானது ஒரே மாதிரியான பல்வேறு வகையான லாக்டோபாகிலஸ் இனங்களை (L. iners, L. crispatus, L. gasseri மற்றும் L. jensenii) கொண்டிருக்கிறது. லாக்டோபாகிலஸ் இனங்கள் யோனியில் லாக்டிக் அமிலத்தை உருவாக்குகின்றன, இது புணர்புழை அமில pH ஐ பாதுகாக்க உதவுகிறது, மேலும் அந்தரங்க பகுதிகளில் நோய் தொற்றை உண்டாக்க கூடிய பாக்டீரியாக்களுக்கு எதிரான பாக்டீரிசைடலாக பயன்படுகிறது” என்பது கண்டறியப்பட்டுள்ளது. பாக்டீரிசைடல் என்பது பாக்டீரியாக்களின் ஆபத்தான விளைவுகளை எதிர்கொள்ளக்கூடிய பூஞ்சை கொல்லியாகும்.
ஆரோக்கியத்தை மேம்படுத்த உங்கள் யோனிக்குள் நேரடி நுண்ணுயிரிகளை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு வழியாக புரோபயாடிக்குகள் உள்ளது. ஹார்வர்ட் கல்வி வலைப்பதிவு அறிக்கையின்படி, "உங்கள் யோனி, உங்கள் செரிமான மண்டலத்தைப் போலவே, நன்மை பயக்கும் பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிரிகளால் நிரம்பியுள்ளது என்பது உண்மைதான். யோனி ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில பொதுவான மகளிர் நோய் நிலைமைகள் யோனிக்குள் பாக்டீரியாவின் சமநிலையின்மையால் ஏற்படுவதாக கருதப்படுகிறது. பெண்கள் புரோபயாடிக்குகளை எடுத்துக்கொள்வதன் மூலமாக அந்தரங்க உறுப்பில் ஏற்படும் பாக்டீரியா வஜினோசி மற்றும் பூஞ்சை தொற்றை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், புரோபயாடிக்குகளை பயன்படுத்தி யோனி ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று ஒரு புதிய ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. ரெப்ரோ ஹெல்த் ரிசர்ச் கன்சோர்டியம் ஜிலாந்து பல்கலைக்கழக மருத்துவமனை நடத்திய ஆய்வு முடிவின் படி, புரோபயாடிக்குகளில் இருந்து வரும் நல்ல பாக்டீரியாக்களுக்குப் பதிலாக தினசரி காப்ஸ்யூல் மூலமாக அந்தரங்க உறுப்புக்குள் செலுத்தப்படும் போது சில ஆரோக்கியமற்ற விளைவுகளை உருவாக்கும்” என கூறப்பட்டுள்ளது.
உடல் எடை குறையவில்லையா..? இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!
பெண் உறுப்பு சமநிலை என்றால் என்ன?
பிறப்புறுப்பில் ஆரோக்கியமான நுண்ணுரிகளின் எண்ணிக்கையில் சமநிலை இல்லாத போது, பாக்டீரியா வஜினோசிஸ் (BV), ஈஸ்ட் தொற்றுகள், ட்ரைக்கோமோனியாசிஸ் மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கு (UTI) வழிவகுக்கும் என மகளிர் நல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
புரோபயாடிக்குகள் எவ்வாறு உதவுகின்றன?
மருத்துவர்களின் கூற்றுப்படி, புரோபயாடிக், எல். அமிலோபிலஸின் ஒரு திரிபு, பாக்டீரியல் வஜினோசிஸ் (பிவி) போன்ற யோனி சமநிலையின்மை பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் என்கின்றனர். புரோபயாடிக்குகளை உட்கொள்வது உங்கள் குடலுக்கு மட்டுமல்ல, யோனிக்கும் கூட நல்லது. புரோபயாடிக்குகளில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன மற்றும் யோனியில் ஏற்றத்தாழ்வை தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் உதவுகின்றன.
மருத்துவர் பரிந்துரைத்தபடி, தினசரி புரோபயாடிக்குகளை சாப்பிடுவது, உடல் முழுவதும் பாக்டீரியாவின் இயற்கையான சமநிலையை மீட்டெடுக்க உங்களை அனுமதிக்கும். இது பிறப்பு உறுப்பின் pH அளவை மீண்டும் சமநிலைப்படுத்தவும், பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகளைச் சமாளிக்கவும் உதவும். நல்ல தனிப்பட்ட சுகாதாரத்தைப் பின்பற்றுவதன் மூலம் பெண்கள் அந்தரங்க உறுப்பை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகும்.
IVF முறையில் கரு வளர்ச்சி தோல்வியுற காரணம் இதுதான்... ஆய்வு முடிவுகள்
புரோபயாடிக் சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்ளலாமா?
சப்ளிமெண்ட்ஸ் அல்லது செறிவூட்டப்பட்ட உணவுகள் எப்போதுமே இயற்கையான உணவுக்கு சரியான மாற்று இல்லை என்றாலும், நிபுணர்களின் வழிகாட்டுதலின் படி குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் எடுத்து கொள்ளலாம். ப்ரோபயாடிக் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது பெண்களுக்கு உதவியாக இருக்கும் மற்றும் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்றாலும், அவற்றை எடுத்துக்கொள்வதற்கு முன் நீங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Infertility, IVF Treatment, Probiotics