இதய நோய், அதிக இறப்பு விகிதத்துக்கு வழிவகுக்கும் மோசமான கார்போஹைட்ரேட் உணவுகள்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

மாதிரி படம்

கார்போஹைட்ரேட் உடலுக்கு நல்லது என்றாலும், அதிகமாக அல்லது குறைவாக எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

  • Share this:
மோசமான கார்போஹைட்ரேட் உணவுகளை அன்றாட உணவில் எடுத்துக்கொள்பவர்கள் அதிகளவில் இதயநோய், பக்கவாதம் மற்றும் உயிரிழக்கும் விகிதம் அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கார்போஹைட்ரேட் உடலுக்கு நல்லது என்றாலும், அதிகமாக அல்லது குறைவாக எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். நியூ இங்கிலாந்து மருத்துவ இதழில் வெளியாகியுள்ள ஆய்வில், மோசமான அளவு கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை நாள்தோறும் உணவில் சேர்த்துக்கொண்டால் இதயநோய், பக்கவாதம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், சிலர் இறக்கவும் காரணமாக இவை இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதாவது அதிக கிளைசெமிக் உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது இத்தகைய பிரச்சனைகள் எழக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவில் இருந்து இரத்தத்தில் கலக்கும் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அளவுகளை வைத்து லோ கிளைசெமிக் மற்றும் அதிக கிளைசெமிக் உணவுகள் என ஆய்வாளர்கள் பட்டியலிடுகின்றனர். இது தொடர்பாக, சுமார் 9.5 ஆண்டுகள் இடைவெளியில் 35 முதல் 75 வயதுக்குட்பட்ட ஒரு லட்சத்துக்கு 37 ஆயிரத்து 851 பேரை எம்சி மாஸ்டர் (McMaster) மற்றும் ஹாமில்டன் (Hamilton) பல்கலைக்கழங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்காணித்துள்ளனர். இதில், டையட்டில் அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகளை தன்மையை கணக்கிட கிளைசெமிக் குறியீடு மற்றும் கிளைசெமிக் எண்ணிக்கையை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டனர்.

பனீர் அல்லது பாலாடைக்கட்டியில் இட்லி செய்யலாமா? ட்ரை பண்ணிப்பாருங்க சூப்பரா இருக்கும்..

ஆய்வின்போது, 8,780 இறப்புகளும், 8, 252 மிகப்பெரிய அளவிலான இதயநோய் பாதிப்புகளும் பதிவானதாக தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், குறிப்பிட்ட வகை கார்போஹைட்ரேட்டுகள் இரத்த சர்க்கரைகளை மற்றவர்களை விட அதிகரித்ததா என்பதைப் பொறுத்து கார்போஹைட்ரேட்டுகளின் உணவு உட்கொள்ளலை வகைப்படுத்தினர். இதனடிப்படையில், இருதய நோய் பாதிப்பு மற்றும் இறப்புகளை ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது, கிளைசெமிக் குறியீட்டின் மிக உயர்ந்த 20 சதவிகிதத்தில் உணவு உட்கொள்ளும் நபர்களில் 50 விழுக்காட்டினர் இருதய தாக்குதல், பக்கவாதம் அல்லது இறந்தது தெரியவந்ததாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதநோய் இருப்பவர்களுக்கு மேலும் அதிகமாகவும், இதய நோய் இல்லாதவர்கள் புதிதாக பாதிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டதாகவும் அவர்கள் ஆய்வில் கூறியுள்ளனர்.இது தொடர்பாக பேசியுள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல்வகை ஊட்டச்சத்து நிபுணர் டேவிட் ஜென்கின்ஸ் (David Jenkins), அதிக கிளைசெமிக் உணவு டையட் குறித்து பல தசாப்தங்களாக படித்து வருவதாக கூறினார். மேலும், மோசமான கார்போஹைட்ரேட் உணவுகள் மிகப்பெரிய பாதிப்பை உலக அளவில் ஏற்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். டையட் உணவுகளில் இருக்கும் மோசமான கார்போஹைட்ரேட்டுகள் வாழ்நாள் குறைப்பை ஏற்படுத்துவதை PURE ஆய்வுக் கட்டுரை வெளியிட்டத்தை சுட்டிக்காட்டிய அவர், பழங்கள், காய்கறிகளை டையட்டாக எடுத்துக்கொள்ளும்போது எந்த பிரச்சனையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வில் பங்கேற்ற மஹ்ஷித் தேஹான் பேசும்போது, பலதரப்பட்ட மக்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறைவான டையட்டில் குறைவான இருதய பாதிப்புகள் மட்டுமே இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பழங்கள், காய்கறிகள், பீன்ஸ் மற்றும் முழு தானியங்கள் ஆகியவை குறைவான கிளைசெமிக் உணவுகள், வெள்ளை ரொட்டி, அரிசி, உருளைக் கிழங்கு ஆகியவை அதிக கிளைசெமிக் உணவுகள் ஆகும்.

 
Published by:Sivaranjani E
First published: