ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மரணத்திற்கு வழிவகுக்கும் வைட்டமின் டி குறைபாடு.... ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

மரணத்திற்கு வழிவகுக்கும் வைட்டமின் டி குறைபாடு.... ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

சமீப காலங்களாக வைட்டமின் டி குறைபாட்டில் பல்வேறு பிரச்சனைகளை மக்கள் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. இந்த குறைபாடு எலும்புகளுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துமா?

சமீப காலங்களாக வைட்டமின் டி குறைபாட்டில் பல்வேறு பிரச்சனைகளை மக்கள் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. இந்த குறைபாடு எலும்புகளுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துமா?

சமீப காலங்களாக வைட்டமின் டி குறைபாட்டில் பல்வேறு பிரச்சனைகளை மக்கள் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. இந்த குறைபாடு எலும்புகளுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துமா?

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  “அய்யோ.. பயங்கர வெயில் அடிக்குது.. பரவாயில்லை கொஞ்ச நேரம் நின்னா தப்பில்லை“.. வைட்டமின் டி ஈஸியா கிடைக்கும் என்ற வார்த்தையை நிச்சயம் நம்மில் அனைவரும் கேட்டிருப்போம். ஆம் வெயிலின் மூலம் மட்டும் அதிகம் பெறக்கூடிய வைட்டமின்களில் ஒன்று தான் வைட்டமின் டி. எலும்புகளுக்கு வலுச்சேர்ப்பதோடு உடல் வளர்ச்சியிலும் இந்த வைட்டமின்கள் மிக முக்கியப் பங்காற்றுகிறது. பொதுவாக மனிதர்களுக்கு சராசரியாக உடலில் வைட்டமின் டி 30 நானோகிராம் அளவிற்கு இருக்க வேண்டும். ஒரு வேளை 30 நானோ கிராமுக்குக் குறைவாக இருந்தால், போதிய வைட்டமின் டி இல்லை என்று அர்த்தம். அதுவே 20 நானோ கிராமுக்கும் குறைவாக இருக்கும் நிலையைத் தான் வைட்டமின் டி குறைபாடு என்கிறோம்.

  இந்நிலையில் தான் சமீப காலங்களாக வைட்டமின் டி குறைபாட்டில் பல்வேறு பிரச்சனைகளை மக்கள் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. இந்த குறைபாடு எலும்புகளுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துமா? இல்லை மக்களுக்கு வேறு என்ன உடல் நலப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஜுலை 2010 வரை 14 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 3,07,601 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவைத் தான் சமீபத்தில் அன்னல்ஸ் ஆஃப் இன்டர்னஸ் மெடிசினில் வெளியிட்டது. அதன் படி, வைட்டமின் டி குறைபாடு அதிகம் உள்ளவர்களுக்கு பல்வேறு உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படுவதோடு இறுதியில் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டது என அதிர்ச்சித் தகவலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 18,700 வரை இறப்புகள் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

  வைட்டமின் டியின் அறிகுறிகள்…

  ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள தகவலையடுத்து அச்சம் கொள்ள வேண்டாம். அனைவருக்கும் வைட்டமின் டி பாதிப்பு ஏற்படும் என்று கூற முடியாது. ஆனால் அடிக்கடி நோய் ஏற்படுதல், நிலையான சோர்வு, மனநிலை மாற்றங்கள், பதட்டம், மனச்சோர்வு, முடி உதிர்தல், தோல் வெடிப்பு, முகப்பரு, எலும்புகள் பலவீனமடைதல், மூட்டுப்பகுதிகளில் வலி, தலை இழுப்பு, தீவிர கால் வலி போன்ற பிரச்சனைகள் எல்லாம் வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளாக உள்ளது. எனவே இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே அதற்காக சிகிச்சைப் பெறுவதற்கு முயலுங்கள்.

  Also Read : உங்கள் உடலில் வைட்டமின் குறைபாட்டை உணர்த்தும் அறிகுறிகள்!

  இதோடு மட்டுமின்றி வைட்டமின் டி கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உடலில் உறிஞ்சி தக்க வைத்து கொண்டு எலும்புகளைப் பாதுகாக்கிறது. ஒருவேளை உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்படும் போது தான், பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தையும், இருதய ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். எனவே தான் சராசரி அளவை விட வைட்டமின் டி குறையும் போதும் தான் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

  இப்பிரச்சனையைத் தவிர்ப்பதற்கு வேறு எந்தவிதமான மருந்துகளும் நிரந்த தீர்வு அளிக்காது. மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் நீங்கள் மருந்துகள் உட்கொண்டாலும் சூரிய ஒளியின் மூலம் பெறுவது உங்களுக்கு சிறந்த தீர்வாக அமையக்கூடும். எனவே காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலான வெயிலில் வைட்டமின் டி அதிகமாகக் கிடைக்கும். எனவே குறைபாடு அதிகமாக உள்ளவர்கள் இந்த நேரங்களில் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பது நன்மை பயக்கும்.

  Published by:Josephine Aarthy
  First published:

  Tags: Vitamin D, Vitamin D Deficiency, Vitamins