Home /News /lifestyle /

பகலில் குட்டித் தூக்கம் போட்டால் ஸ்டிரோக் ஏற்பட வாய்ப்பு : அதிர்ச்சியளிக்கும் ஆய்வு

பகலில் குட்டித் தூக்கம் போட்டால் ஸ்டிரோக் ஏற்பட வாய்ப்பு : அதிர்ச்சியளிக்கும் ஆய்வு

மதிய நேர தூக்கம்

மதிய நேர தூக்கம்

அவ்வப்போது குட்டித் தூக்கம் போடுகிறவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும், ஸ்டிரோக் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இது அதிர்ச்சியூட்டும் விஷயமாக இருக்கலாம். நாம் குட்டி தூக்கத்தை விரும்புகிறவர்கள் என்றாலும், அடிக்கடி அதை செய்வதில்லை. குட்டித்தூக்கம் என்பது பலருக்கு போதுமானதாக இருக்காது. அதே சமயம், முழுமையான தூக்கம் மற்றும் குட்டித்தூக்கம் ஆகிய இரண்டுமே உடல் நலனுக்கு நல்லது என்ற கருத்தை தான் நாம் இதுவரையிலும் கேள்விப்பட்டிருப்போம்.

இருப்பினும், அடிக்கடி குட்டி தூக்கம் போடுவது குறித்து நாம் அதிர்ச்சி அடையும் வகையிலான சில ஆய்வு முடிவுகளும் வெளிவந்திருக்கின்றன. இதுதொடர்பாக அமெரிக்க இதய நல ஜர்னல் ஒன்றில் வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரை பல விஷயங்களை எடுத்துரைக்கின்றன.

ஆய்வு சொல்வது என்ன?

அவ்வப்போது குட்டித் தூக்கம் போடுகிறவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும், ஸ்டிரோக் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. பொதுவாக குட்டித்தூக்கம் என்பது பகல் பொழுதில் மேற்கொள்ளும் விஷயமாக இருக்கிறது. இரவு தூக்கத்தை போல அல்லாமல் எளிதில் விழித்துக் கொள்ளக் கூடியதாக குட்டித்தூக்கம் இருக்கிறது.

குட்டித்தூக்கம் நல்லதா, கெட்டதா?

குட்டித்தூக்கம் நல்லது என்றாலும் கூட, நீங்கள் பகலில் தூங்கி எழுவதால் இரவில் போதுமான தூக்கம் வராமல் இருப்பதே பிரச்சனைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், இரவில் மோசமான தூக்கம் என்பது ஒருவரது தனிப்பட்ட உடல் நலனை பாதிக்கிறது.



ஆய்வின் விவரங்கள்

பிரிட்டனை சேர்ந்த 3.58 லட்சம் நபர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒருபோதும் குட்டித்தூக்கம் போடாதவர்கள், அவ்வபோது குட்டித்தூக்கம் போடுபவர்கள் ஆகிய இரு பிரிவுகளாக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அடிக்கடி தூங்குபவர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் ஸ்டிரோக் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

நல்ல கொலஸ்ட்ரால் அளவு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எவ்வளவு (HDL) இருக்க வேண்டும்..? தெரிந்துகொள்ளுங்கள்...

குட்டித்தூக்கத்தின் அபாயம்

பகலில் தினசரி குட்டித்தூக்கம் போடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உடல் இயக்கமின்மை காரணமாக உடல் உறுப்புகளின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது.

எப்போது குட்டித்தூக்கம் தேவை?

பகல் பொழுதில் மணிக் கணக்கில் தூங்குவதைக் காட்டிலும் ஒரு சில நிமிடங்கள் தூங்கி எழுந்தால் உடல் சோர்வு நீங்கும், மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். குறிப்பாக குட்டித் தூக்கம் என்பது 30 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.



மக்கள் பகலில் தூங்குவது ஏன்?

மக்கள் மிகுதியாக சோர்வடைகின்றனர் என்பதே பகல் தூக்கத்திற்கான காரணம் ஆகும். இரவில் போதுமான அளவு தூக்கம் இல்லை என்பதே பகலில் சோர்வு அதிகரிக்க காரணமாக இருக்கிறது.

மொபைல் ஃபோன் பயன்பாடு, போதைப் பொருள் பயன்பாடு, அதிக மன அழுத்தம், மிகுதியாக மது அருந்துவது போன்ற காரணங்களால் இரவில் தூக்கம் கெட்டு, பகலில் சோர்வடைகின்றனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: High Blood Pressure, Sleep, Stroke

அடுத்த செய்தி