முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / காய்கறி சாப்பிடாத குழந்தைகளை ட்விஸ்ட் கொடுத்து சாப்பிட வைப்பது எப்படி? ஆய்வு கொடுக்கும் டிப்ஸ்

காய்கறி சாப்பிடாத குழந்தைகளை ட்விஸ்ட் கொடுத்து சாப்பிட வைப்பது எப்படி? ஆய்வு கொடுக்கும் டிப்ஸ்

குழந்தைகளுக்கு நிறைய காய்கறிகளை பரிமாறுவது எந்தளவிற்கு முக்கியமோ அதே போல அவர்கள் விரும்பும் உணவுகளை பரிமாறுவதும் முக்கியம்.

குழந்தைகளுக்கு நிறைய காய்கறிகளை பரிமாறுவது எந்தளவிற்கு முக்கியமோ அதே போல அவர்கள் விரும்பும் உணவுகளை பரிமாறுவதும் முக்கியம்.

குழந்தைகளுக்கு நிறைய காய்கறிகளை பரிமாறுவது எந்தளவிற்கு முக்கியமோ அதே போல அவர்கள் விரும்பும் உணவுகளை பரிமாறுவதும் முக்கியம்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

குழந்தைகளை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் பெற்றோர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது அவர்களுக்கு காய்கறிகள் மூலம் முறையான ஊடச்சத்துக்களை கொடுப்பது. வயதில் பெரியவர்களே ஒரு சில காய்கள் தங்களுக்கு பிடிக்காது என்று சாப்பிடாமல் ஒதுக்கும் போது, குழந்தைகளை கட்டாயப்படுத்தி காய்கறிகளை சாப்பிட வைப்பது என்பது இயலாத காரியம். காய்கறிகளை சாப்பிட சொல்லி பெற்றோர்கள் வற்புறுத்தினால் சாப்பிடுவதற்கே முரண்டு பிடிக்க துவங்கி விடுவார்கள் குழந்தைகள். காய்கறிகள் குழந்தைகளுக்கு ஆற்றல், வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஃபைபர் மற்றும் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை தருகின்றன.

இதய நோய், பக்கவாதம் மற்றும் சில வகை புற்றுநோய்கள் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க காய்கறிகள் உதவுகின்றன. எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் நாள்தோறும் குறிப்பிட்ட அளவு காய்கறிகளை தவறாமல் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுத்துகின்றனர். ஆரோக்கியமான உணவு முறை என்றால் ஏராளமான காய்கறிகளைச் சாப்பிடுவதும் அதில் அடங்கும். குழந்தைகள் அதிக காய்கறிகளை சாப்பிடுவது எவ்வளவு முக்கியம் என்பதை பெற்றோர்கள் அறிந்திருந்தாலும் அதற்கு பதிலாக சிப்ஸ்கள், குளிர்பானங்கள், பர்கர்கள் அல்லது பீட்ஸாக்கள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளையே அதிகம் விரும்பும் நிலை காணப்படுகிறது.

இதனிடையே குழந்தைகளை காய்கறிகளை அதிகமாக சாப்பிட வைப்பது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், "பிற உணவுகளுக்கு பதில் அவர்களது பிளேட்டில் அதிக காய்கறிகளை சேர்ப்பது" அவர்களை அதிக காய்களை உட்கொள்ள வைக்க நல்ல வழி என்பது தெரிய வந்துள்ளது. ஒரு உணவில் சோளம் மற்றும் ப்ரோக்கலியின் அளவை 60 கிராமிலிருந்து 120 கிராம் வரை இரட்டிப்பாக்கிய போது, குழந்தைகள் 68% காய்கறிகளை அல்லது கூடுதலாக 21 கிராம் சாப்பிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

ஊட்டச்சத்து அறிவியலில் பட்டதாரி மாணவர் ஹனிம் டிக்தாஸ் என்பவர் இது பற்றி குறிப்பிடுகையில், சிறு குழந்தைகளுக்கு தினசரி பரிந்துரைக்கப்பட்ட காய்கறிகளின் அளவில் 12% அதிகரிப்பை ஆய்வின் போது கவனித்ததாக குறிப்பிட்டுள்ளார். எனவே குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் காய்கறிகளின் அளவை இரட்டிப்பாக்கியோ அல்லது அதிகரித்தோ கொடுப்பது அவர்களை காய்கறி சாப்பிட ஊக்குவிக்கும் முயற்சிக்கான பலனை தரும் என்றார்.

Must Read | உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன? கண்டறிவது எப்படி?

அமெரிக்க வேளாண்மை மற்றும் சுகாதாரம் மற்றும் மனித சேவை அமைப்புகளால் (US Departments of Agriculture and Health and Human Services) நிர்ணயிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கான உத்தியோகபூர்வ உணவு வழிகாட்டுதலின் படி, குழந்தைகளுக்கான தினசரி பரிந்துரைக்கப்பட்ட காய்கறிகளின் அளவு ஒரு நாளைக்கு சுமார் 1.5 கப் ஆகும். ஆனால் அமெரிக்க குழந்தைகள் தேவையான அளவு காய்கறிகளை சாப்பிடுவதில்லை. எனவே இந்த விவகாரத்தில் பகுதியளவு மாற்றங்களை செய்யும் போது என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க ஆராய்ச்சியாளர்கள் 'portion size effect'-ஐ பயன்படுத்தினர்.

3 முதல் 5 வயதுக்குட்பட்ட 67 குழந்தைகள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த ஆய்வின் போது 4 வாரங்களில் வாரத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட குழந்தைகளுக்கு 4 வெவ்வேறு காய்கறிகளுடன் கூடிய மதிய உணவு வழங்கப்பட்டது. வழக்கமாக கொடுக்கப்படும் அளவிலான வெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்த கார்ன் மற்றும் ப்ரோக்கலி மற்றும் வழக்கத்தை விட ஒரு மடங்கு அதிகமான அளவிலான வெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்த கார்ன் மற்றும் ப்ரோக்கலி வழங்கப்பட்டது. பிஷ் ஸ்டிக்ஸ், அரிசி, ஆப்பிள் சாஸ் மற்றும் பால் ஆகியவற்றுடன் இந்த அளவிலான காய்கறிகளும் வழங்கப்பட்டன.

இந்த ஆய்வின் முடிவுகள் அமெரிக்க வேளாண்மை துறையின் மைபிளேட் வழிகாட்டலை ஆதரிக்கின்றன. இது பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக உணவை பரிந்துரைக்கிறது. குழந்தைகளுக்கு நிறைய காய்கறிகளை பரிமாறுவது எந்தளவிற்கு முக்கியமோ அதே போல அவர்கள் விரும்பும் உணவுகளை பரிமாறுவதும் முக்கியம். புதிய காய்கறிகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் போது அவர்களின் சுவைகேற்ப அவற்றை சமைத்து அவர்களின் தட்டில் பரிமாறுவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

அவர்களுக்கு கொடுக்க விரும்பும் காய்கறிகளை வெவ்வேறு டிஷ்கள் மூலம் சிறந்த சுவையுடன் தயாரித்து குழந்தைகளுக்கு கொடுப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். இப்படி செய்வதால் குழந்தைகளுக்கு காய்கறிகள் மீதான அலுப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் ​என்று அறிவுறுத்துகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். காய்கறிகளை அதிகமாக அவர்களது பிளேட்டில் சேர்ப்பது நல்ல வழிதான் என்றாலும், அவர்களுக்கு வழங்கப்படும் பிற உணவுகளை வீணாக்கும் சாத்தியமும் இருக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

First published:

Tags: Children, Healthy Life, Vegetables