64 சதவீத இந்தியர்கள் உடற்பயிற்சி செய்வதில்லை - ஆய்வில் தகவல்

போதுமான நேரமின்மை இதற்கான காரணமாக உள்ளது.

news18
Updated: July 4, 2019, 12:46 PM IST
64 சதவீத இந்தியர்கள் உடற்பயிற்சி செய்வதில்லை - ஆய்வில் தகவல்
உடற்பயிற்சி
news18
Updated: July 4, 2019, 12:46 PM IST
எல்லோருக்கும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும்.  ஆனாலும், அது எண்ணமாக மட்டுமே இருக்கும். இருப்பினும் முட்டி மோதி ஜிம்முக்குச் சென்று பணம் கட்டி சேர்ந்தால் அதிகபட்சம் ஒரு வாரம் தாக்கு பிடித்து செல்வார்கள். அதன் பிறகு ஜிம் எந்த பக்கம் இருக்கிறது என்பதையே மறந்துவிடுவர்கள். இதில் பணம் செலவானதுதான் மிச்சம். இந்த கேட்டகரியில் 64 சதவீதம் இந்தியர்கள் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

market intelligence agency நடத்திய இந்த ஆய்வில் 18 வயதிற்கு மேற்பட்ட 3000 இந்தியர்கள் பங்குபெற்றுள்ளனர். அதில் மூன்றில் இரண்டு அதாவது 64 சதவீதம் இந்தியர்கள் உடற்பயிற்சி செய்வதில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் 46 சதவீதத்தினர் உடற்பயிற்சி இல்லாமலேயே உணவு , வாழ்க்கை முறை மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதாகத் தெரிவித்துள்ளனர். இதில் வெறும் 37 சதவீதத்தினர் மட்டுமே உடற்பயிற்சி செய்கின்றனர்.
இதற்கான காரணத்தை ஆராயும் போது, போதுமான நேரமின்மை என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒருவேளை உடற்பயிற்சி செய்தாலும் அடிப்படையான உடற்பயிற்சிகளை மட்டுமே மேற்கொள்கின்றனர்.

67 சதவீதத்தினர் நடப்பதை உடற்பயிற்சியாக மேற்கொள்கின்றனர். 26 சதவீதம் மக்கள் யோகா போன்ற பயிற்சிகளை செய்கின்றனர். 11 சதவீதத்தினர் கார்டியோ பயிற்சி, கால்பந்து , கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் மூலம் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்கின்றனர். மீதம் 10 சதவீதத்தினர் மட்டுமே உடல் எடை குறைக்க தீவிரமாக உடற்பயிற்சி செய்கின்றனர்.

உடற்பயிற்சி மட்டுமன்றி ஸ்போர்ட்ஸ் நியூட்ரீஷியன் பொருட்களை வாங்குவதிலும் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 69 சதவீதத்தினர் தசை மற்றும் உடல் எடை அதிகரிக்க இந்த பொருட்களை வாங்குகின்றனர். 45 சதவீதத்தினர் எனர்ஜிக்காகவும் 22 சதவீதத்தினர் இம்யூனிட்டி வளர்ச்சிக்காகவும் இந்த நியூட்ரீஷியன் பொருட்களை வாங்கு சாப்பிடுவதாகக் கூறியுள்ளனர்.

Loading...

இதையும் படிக்க :

உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

ஆண்களே ஃபிட்டான உடல் வேண்டுமா ? தினமும் இந்த உடற்பயிற்களை கடைபிடியுங்கள்!
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...