• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கொரோனாவில் இருந்து மீண்ட பாதிக்கும் மேற்பட்டோருக்கு இதய பாதிப்பு உள்ளது - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கொரோனாவில் இருந்து மீண்ட பாதிக்கும் மேற்பட்டோருக்கு இதய பாதிப்பு உள்ளது - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

மாதிரி படம்

மாதிரி படம்

கொரோனாவில் இருந்து குணமடைந்து, டிச்சார்ஜ் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகும் எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் இதயத்தில் காயம் இருப்பது ?

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களின் இதயம் சேதமடைந்துள்ளதாகவும், அவர்கள் ட்ரோபோனின் எனப்படும் புரதத்தின் உயர்ந்த அளவைக் காட்டியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். ஐரோப்பிய ஹார்ட் ஜர்னலில் (European Heart Journal) கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புதிய கண்டுபிடிப்புகளின்படி, கொரோனாவில் இருந்து குணமடைந்து, டிச்சார்ஜ் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகும் எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் இதயத்தில் காயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் என்ன மாதிரியான இதய பாதிப்பு ஏற்பட்டது என்பதையும் ஆய்வுக்குழு விளக்கியுள்ளது. அவை, இதய தசையின் வீக்கம் (myocarditis), வடு அல்லது இதய திசுக்களின் இறப்பு (infarction), இதயத்திற்கு இரத்த வழங்கல் தடை செய்யப்படுதல் (ischaemia) மற்றும் இவை மூன்றின் சேர்க்கைகளும் ஒன்றாக காணப்படுதல் போன்றவை ஆகும். லண்டனில் உள்ள ஆறு மருத்துவமனைகளில் இருந்து 148 நோயாளிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதயத்தில் ஏற்படக்கூடிய சிக்கலைக் குறிக்கும் ட்ரோபோனின் அளவை உயர்த்திய COVID-19 நோயாளிகளை குணப்படுத்துவதற்கான மிகப் பெரிய ஆய்வாக இது பார்க்கப்படுகிறது.

அதாவது கொரோனா பாதித்த ஒருவருக்கு இதய தசை காயமடையும் போது ட்ரோபோனின் இரத்தத்தில் வெளியிடப்படுகிறது. ஒரு தமனி தடைசெய்யப்படும் போது அல்லது இதயத்தில் வீக்கம் ஏற்படும் போது ட்ரோபோனின் அளவு உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. கொரோனாவுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பல நோயாளிகள் சிக்கலான நோய்க் கட்டத்தில் இருக்கும் போதும், அவர்களின் உடல் தொற்றுநோய்க்கு மிகைப்படுத்தப்பட்ட நோயெதிர்ப்பு சக்தியை ஏற்றும் போதும் ட்ரோபோனின் அளவு உயர்ந்து காணப்பட்டது.

மேலும் இந்த ஆய்வில் பங்கேற்ற அனைத்து நோயாளிகளிலும் ட்ரோபோனின் அளவு உயர்த்தப்பட்டது. பின்னர் சேதத்தின் காரணங்கள் மற்றும் அளவைப் புரிந்துகொள்வதற்காக ட்ரோபோனின் வெளியேற்றத்திற்குப் பிறகு இதய சேதம் எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் பின்பற்றப்பட்டது. இது குறித்து லண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஆலோசகர் இருதயநோய் நிபுணர் டாக்டர் கிரஹாம் கோல் உடன் இணைந்து ஆய்வில் பணியாற்றிய லண்டன் பல்கலைக்கழகத்தின் இருதயவியல் பேராசிரியர் மரியன்னா ஃபோண்டானா கூறியதாவது, "உயர்த்தப்பட்ட ட்ரோபோனின் அளவு கொரோனா நோயாளிகளின் மோசமான விளைவுகளுடன் தொடர்புடையது.

கடுமையான கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பெரும்பாலும் நீரிழிவு நோய், அதிகரித்த இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் உள்ளிட்ட இதய தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும் கடுமையான நோய்த்தொற்றின் போது, ஒருவரின் இதயம் நேரடியாகவும் பாதிக்கப்படலாம். இதயம் எவ்வாறு சேதமடையக்கூடும் என்பதைக் கண்டறிவது கடினம். ஆனால் இதயத்தின் எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் வெவ்வேறு வகையான காயங்களை அடையாளம் காண முடியும். இது மிகவும் துல்லியமான நோயறிதல்களைச் கண்டறியவும் அதற்கான சிகிச்சையை வழங்கவும் உதவுகிறது" என்று கூறியுள்ளார்.

Also read... கர்ப்ப காலத்தில் அதிகமாக ஓய்வெடுப்பது உங்கள் குழந்தைக்கு ஆபத்தானதா?

ஆய்வுக்காக, ராயல் ஃப்ரீ லண்டன் என்.எச்.எஸ். அறக்கட்டளை, இம்பீரியல் கல்லூரி ஹெல்த்கேர் என்.எச்.எஸ் அறக்கட்டளை மற்றும் பல்கலைக்கழக கல்லூரி லண்டன் மருத்துவமனை என்.எச்.எஸ் ஆகிய அறக்கட்டளையை சேர்ந்த 6 மருத்துவமனைகளில் இருந்து 2020 ஜூன் வரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கொரோனா நோயாளிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அசாதாரண ட்ரோபோனின் அளவைக் கொண்ட நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு அவர்களுக்கு இதயத்தின் எம்ஆர்ஐ ஸ்கேன் வழங்கப்பட்டது. மேலும் இந்த ஸ்கேன் கொரோனா இல்லாத நோயாளிகளின் கட்டுப்பாட்டுக் குழுவில் இருந்தவர்களுடன் ஒப்பிடப்பட்டது. அதேபோல் 40 ஆரோக்கியமான தன்னார்வலர்களிடமிருந்தும் ஸ்கேன் ஒப்பிடப்பட்டது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: