Home /News /lifestyle /

உடல் எடையை குறைக்க இடைப்பட்ட விரத முறை பலன் கொடுப்பதில்லை - ஆய்வு

உடல் எடையை குறைக்க இடைப்பட்ட விரத முறை பலன் கொடுப்பதில்லை - ஆய்வு

 இடைப்பட்ட விரத முறை

இடைப்பட்ட விரத முறை

உடல் எடையை குறைக்க எண்ணற்ற வழிமுறைகள் உண்டு என்றாலும் கூட, பிரபலமான நட்சத்திரங்கள் பலர் இடைப்பட்ட விரத முறையை தான் பெரிதும் கடைப்பிடிக்கின்றனர். அதைப் பார்த்து தான் சாமானிய பொதுமக்கள் பலரும் அதே பழக்கத்தை கடைப்பிடிக்க முயற்சி செய்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
உடல் எடையை குறைக்க எண்ணற்ற வழிமுறைகள் உண்டு என்றாலும் கூட, பிரபலமான நட்சத்திரங்கள் பலர் இடைப்பட்ட விரத முறையை தான் பெரிதும் கடைப்பிடிக்கின்றனர். அதைப் பார்த்து தான் சாமானிய பொதுமக்கள் பலரும் அதே பழக்கத்தை கடைப்பிடிக்க முயற்சி செய்கின்றனர்.

எனினும், உடல் எடை குறைப்பு முயற்சிகளை பலரும் முறைப்படி பின்பற்றுவதில்லை என்பதால், எதிர்பார்த்த அளவுக்கான முடிவுகள் நமக்கு கிடைப்பதில்லை. எந்தவொரு உடல் எடை குறைப்பு மாடலிலும் உள்ள நிறை, குறைகளை ஆராய்ந்து பார்க்காமல் கண்ணை மூடிக் கொண்டு நாம் பின்பற்ற தொடங்குகிறோம்.

இடைப்பட்ட விரதம் என்பது ஒருவேளை உணவுக்கும், அடுத்த வேளை உணவுக்கும் அதிக இடைவெளியை கடைப்பிடித்து உணவை தவிர்க்கும் முறை ஆகும். இடைப்பட்ட விரதத்திற்கான கால அளவுகள் என்பது தனிநபரின் விருப்பம், உடல் ஒத்துழைப்பு போன்ற பல்வேறு காரணங்களை மையமாக வைத்து அமைகின்றன.

உதாரணத்திற்கு சாதாரணமாக காலையில் ஒருமுறை உணவும், இரவு ஒருமுறை உணவும் எடுத்துக் கொள்வது இடைப்பட்ட விரத முறையை சேரும். அதேபோல, காலையும், மாலையும் மட்டும் கூட உணவு எடுத்துக் கொள்ளலாம். சிலர் தினசரி ஒருமுறை மட்டும் உணவு உண்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் வாரத்தில் ஓரிரு நாட்கள் எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள்.



இடைப்பட்ட விரதம் குறித்து ஆய்வு

நியூ இங்கிலாந்து மருத்துவர் ஜர்னல் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இடைப்பட்ட விரத முறையில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. சுமார் 135 நபர்களை கொண்டு, ஓராண்டுக்கும் மேலாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உடல் எடையை குறைக்க ஃபுரூட் டயட் : மூன்று வேளையும் சாப்பிட டிப்ஸ்..!

ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன

ஏற்கனவே உடல் பருமனோடு இருப்பவர்கள் இடைப்பட்ட விரத முறையை கடைப்பிடிப்பதன் மூலமாக உடல் எடையை குறைப்பது, கொழுப்பை குறைப்பது போன்ற பலன்களை அடைய முடியாது என்கிறது இந்த ஆய்வு. சுருக்கமாக சொன்னால் கலோரி உட்கொள்ளும் அளவை மட்டுமே குறைக்கலாமாம்.



இடைப்பட்ட விரதம் ஏன் பலன் தருவதில்லை

இடைப்பட்ட விரத முறையில் நீங்கள் சாப்பிடும்போது போதிய ஆற்றல் கிடைக்காமல் உடல் இயக்க நடவடிக்கைகள் குறைந்து விடுகின்றன. எந்தவொரு உடல் எடை குறைப்பு திட்டத்திலும், நமது உடல் இயக்க நடவடிக்கைகள் பாதிக்கப்பட கூடாது. அது உண்மையாகவே நமது உடல் நலனை பாதிக்கும்.

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழ சாறு... உடல் எடையை சீக்கிரமே குறைக்க சிம்பிள் டிப்ஸ்..!

தேர்வு செய்த மாடலை பொறுத்து பலன் கிடைக்கலாம்

நீங்கள் எந்த மாடல் அடிப்படையிலான இடைப்பட்ட விரத முறையை தேர்வு செய்துள்ளீர்கள், உங்கள் உடல் அமைப்பு எப்படி என்பதை பொறுத்து உடல் எடையை குறைப்பதற்கான பலன்கள் கிடைக்கக் கூடும். வாரத்தில் ஒரு நாள் நீங்கள் விரதம் இருக்கலாம் அல்லது இரண்டு நாட்கள் முழு விரதம் இருக்கலாம். உங்கள் உடல் இதை எப்படி ஏற்றுக் கொள்கிறது என்பதைப் பொறுத்து பலன் கிடைக்கும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Fitness, Intermittent Fasting

அடுத்த செய்தி