சமீபத்திய காலங்களில் பலருக்கும் இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்தது. இளம் வயதினரை கூட இதய நோய் பிரச்சனைகளால் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இந்த பிரச்சனைகளை மனதில் வைத்து இந்த ஆண்டு அக்டோபர் மாதம் யூரோப்பியன் ஹார்ட் ஜார்னல் நடத்திய ஆய்வறிக்கையில் வாரத்திற்கு குறிப்பிட்ட அளவிலான தீவிர உடல் செயல்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கு இதய கோளாறுகள் புற்றுநோய் ஆகியவை ஏற்படும் வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
தீவிர உடல் செயல்பாடு என்றால் என்ன?
இது மிக தீவிரமான உடல் இயக்கங்களை குறிப்பதாகும். மருத்துவ ரீதியாக உடலின் சக்தியை அதிகமாக செலவழித்து ஒரு வேலையை செய்வதை இது குறிக்கிறது. கிட்டத்தட்ட குறைந்தபட்சம் 6 மெட்டாபாலிக் ஈக்குவலன்ஸ் அளவிலான சக்தியை செலவழித்து ஒரு வேலையை செய்யும்போது, அவை இதய நோய் உண்டாகும் வாய்ப்பை கணிசமாக குறைக்கின்றன.
ஆய்வறிக்கை :
இதைப்பற்றி 40 முதல் 69 வயதுக்குட்பட்ட 71893 நபர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் அளவீடுகளை அழைப்பதற்காக மணிக்கட்டுகளில் ஆக்சலோமீட்டரை சாதனங்கள் கட்டப்பட்டன. இதில் 55 சதவீத்திற்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வறிக்கையில் தான் வாரத்திற்கு 15 முதல் 20 நிமிடம் வரையிலான தீவிர உடல் செயல்பாடு செய்வது உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தி புற்றுநோய் மற்றும் இதயத்தில் நோய் தாக்கம் அபாயத்தை 40% வரை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாரத்திற்கு ஒரு மணி நேரம் வரை தீவிர செயல்பாட்டை மேற்கொள்ளும் போது இன்னும் அதிக சதவீத நேர்மறையான முடிவுகளை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாரத்திற்கு 15 நிமிடம் தீவிர செயல்பாட்டின் மூலம் 18 சதவீதம் வரையில் புற்றுநோய் வாய்ப்பு குறைவதாகவும், வாரத்துக்கு 20 நிமிடம் தீவிர உடல் செயல்பாட்டில் இடுபவர்களுக்கு 40% வரையும் புற்றுநோய் தாக்குவதற்கான அபாயம் குறைவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இதில் குறிப்பிட்டுள்ள கால அளவீடுகள் மற்றும் உடல் செயல்பாட்டிற்கான அளவீடுகள் அவர்களின் பாலினம், வயது மற்றும் உடல ஆரோக்கியமாகியவற்றை பொறுத்து மாறுபடலாம்.
என்னதான் தீர்வு?
கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தீவிர உடல் செயல்பாட்டின் மூலமே நம்மால் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை சரி செய்து விட முடியும். மேலும் வாரத்திற்கு குறிப்பிட்ட அளவிலான தீவிர உடல் செயல்பாட்டை கடைப்பிடித்து வரும்போது அவை மிகப்பெரும் அளவிலான நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. சுறுசுறுப்பாக இயங்குவதற்கும், இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கவும் செய்கிறது.
இதயநோய் மற்றும் புற்றுநோய் உயிரிழப்புகள் :
உலக சுகாதார நிறுவனம் அளித்த அறிக்கை படி ஒரு ஆண்டுக்கு இதய நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை 17.9 மில்லியன் ஆக உள்ளது. இதுவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டின் கணக்கீட்டின் படி 9.6 மில்லியன் ஆகும்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, குறிப்பிட்ட அளவிலான தீவிர உடல் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் இந்த இறப்பு விகிதங்கள் குறையலாம் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Physical exercise, Workout