ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

எண்ணற்ற நன்மைகள் அளிக்கும் மீன் எண்ணெய் : அன்றாடம் எடுத்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்!

எண்ணற்ற நன்மைகள் அளிக்கும் மீன் எண்ணெய் : அன்றாடம் எடுத்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்!

வைட்டமின் D சத்துக் குறைபாடு பலருக்கும் உண்டு என்பதால் இந்த மாத்திரை பலருக்கும் பரிந்துரைக்கப்படும். இந்த வைட்டமின் D யானது உணவில் உள்ள மற்ற ஊட்டச்சத்துகளை உறிஞ்சி உறுப்புகளுக்கு அனுப்ப உதவுகிறது.

வைட்டமின் D சத்துக் குறைபாடு பலருக்கும் உண்டு என்பதால் இந்த மாத்திரை பலருக்கும் பரிந்துரைக்கப்படும். இந்த வைட்டமின் D யானது உணவில் உள்ள மற்ற ஊட்டச்சத்துகளை உறிஞ்சி உறுப்புகளுக்கு அனுப்ப உதவுகிறது.

மீன் எண்ணெய்யில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :

  பொதுவாக கொழுப்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என ஏராளமானோர் கூற கேள்வி பட்டிருப்போம். ஆனால் கொழுப்பில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என்ற இரண்டு வகைகள் உள்ளன. அவற்றில் நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை நாம் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது அவசியம். ஒமேகா -3 ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் ஒன்றாகும். ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைவுறா கொழுப்பின் ஒரு வடிவம்.

  இது நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க வல்லது. இந்த ஒமேகா - 3 கொழுப்பு குறிப்பாக மீன் போன்ற கடல் உணவுகளில் அதிகம் காணப்படுகிறது. பிற உணவுகளை விட கடல் உணவுகளில் காணப்படும் சத்து சிறந்தவை என்று கூறப்படுகிறது. எனவே நீங்கள் மீன் எண்ணெய் வடிவில் கூட எடுத்து கொள்ளலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

  மீன் எண்ணெய் உண்மையிலேயே ஆரோக்கியமானதா? அனைவருக்கும் மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ் சேர்த்து கொள்ளாமா? என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

  மீன் எண்ணெய் என்றால் என்ன?

  மீன் எண்ணெய் மற்றும் மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ் சால்மன், மீன், மத்தி உள்ளிட்ட சில வகை கடல் உணவுகளில் காணப்படும் கொழுப்பு திசுக்களில் இருந்து பெறப்படுகிறது. இந்த மீன் எண்ணெய் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க வல்லது. ஏனெனில் இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது.

  உங்கள் உணவில் மீன் எண்ணெய்யை சேர்ப்பதன் ஆரோக்கிய நன்மைகள் :

  1. கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கிறது :

  ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் எண்ணெய்யை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதன் மூலம், மற்ற கொழுப்புகளைப் போலல்லாமல், இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கவும், இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். ஆய்வுகளின்படி, வாரத்திற்கு இரண்டு முறை மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய்கள் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு குறையும் என தெரியவந்துள்ளது.

  2. மூளைக்கு ஊட்டமளிக்கிறது :

  மீன் எண்ணெய் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மீன் எண்ணெய்யில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மேலும் அல்சைமர் அல்லது டிமென்ஷியாவின் அபாயத்தை குறைப்பதில் ஒமேகா -3 நிறைந்த மீன் எண்ணெய் உதவுகிறது. ​​சில ஆய்வுகள் ஒமேகா -3 சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வோர் அறிவாற்றல் அதிகரிப்பதாகவும் சுட்டி காட்டுகிறது. மேலும் மீன் எண்ணெய்யை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மன அழுத்தம் நீங்கி, மனச்சோர்வு அறிகுறிகளைத் தணிக்கவும் உதவும்.

  3. மூட்டுகளில் வீக்கம் குறைகிறது :

  எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது மூட்டுகள் மற்றும் தசைகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும் முடக்குவாதம் போன்ற பிரச்னைகளால் ஏற்படும் வலியை குறைக்கவும் மீன் எண்ணெய் உதவுகிறது.

  4. மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது :

  தற்போது மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு ஒரு பொதுவான பிரச்சினையாகிவிட்டது. வாரம் மூன்று முறை ஒமேகா -3 நிறைந்த மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ்களை உணவை உட்கொள்வது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் பக்கவாதம் மற்றும் இதய நோய் உருவாவதற்கான வாய்ப்புகளையும் குறைகிறது.

  சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் குண்டாகாமல் இருக்க இது தான் காரணமாம்..

  5. எடை குறைய உதவுகிறது :

  உடல் எடையை குறைப்பது ஒரு எளிய விஷயம் அல்ல, அதே நேரத்தில் மீன் எண்ணெய் மற்றும் பிற ஒமேகா -3 நிறைந்த உணவுகள் உண்மையில் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், டயட் இருப்பவர்களுக்கு உதவுகிறது. வீக்கத்தைக் குறைப்பதன் மூலமும், உடற்பயிற்சியை மேம்படுத்துவதன் மூலமும் எடை இழப்பை ஊக்குவிக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

  6. பார்வை மேம்பட :

  கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் மீன் எண்ணெய் மாத்திரை உட்கொள்வது மிக நன்மை தரும். ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாகவே கண்பார்வை திறன் குறைகிறது.இதில் உள்ள வைட்டமின் ஏ கண்களில் திசு வளர்ச்சியை கட்டுப்படுத்தி கண்பார்வையை பாதுகாக்கிறது. நரம்புகளின் அழுத்தங்களால் ஏற்படும் கண் அழுத்த நோயையும் தொடர்ந்து மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால் போக்கி விட முடியும்

  7. அல்சரை குணப்படுத்த :

  அல்சர் புண்களை குணமாக்குவதற்கு ஒரு சிறந்த மருந்தாக மீன் எண்ணெய் இருக்கிறது. மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ்களை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிறு மற்றும் குடல் பகுதியில் ஏற்பட்டிருக்கின்ற அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்களை விரைவில் ஆற்றும். செரிமானத்தை தூண்டுவதற்கு மீன் எண்ணெய் உதவுகிறது.

  மீன் எண்ணெய் யாரெல்லாம் எடுத்து கொள்ளலாம் :

  மீன் எண்ணெய் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்கவல்லது என்றாலும், மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ் அனைவருக்கும் தேவையில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மட்டுமே இதனை எடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ் எடுத்து கொள்வதற்கு பதிலாக அனைத்து வயதினரும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த மீன் மற்றும் கடல் உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சைவ உணவு உண்பவர்கள் ஒமேகா -3 நிறைந்த காய்கறிகள், நட்ஸ் மற்றும் விதைகளை உட்கொள்வதை அதிகரிக்கலாம். குறிப்பாக வால்நட், பீன்ஸ், சோயா போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்புகள் நிறைந்துள்ளது.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Food, Nutrition, Vitamins