பக்கவாதம் என்பது மூளைக்கு போகும் இரத்தம் தடைப்பட்டு, மூளை இயங்குவதற்கு தேவையான சக்தி இல்லாமல், மூளையின் செல் தசைகள் பாதிப்படைவது தான். மூளையின் எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளதோ, அதைப் பொறுத்து நமது உடலின் பாகங்களில் குறைபாடுகள் ஏற்படும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் பக்கவாதத்தில் இருந்து மீண்டு வருவது கிடையாது. 2021 ஆம் ஆண்டு வெளியான ஆய்வின் முடிவின் படி, 1 கோடியே 45 லட்சம் மக்கள் பக்கவாதம் ஏற்படக்கூடும் என்றும், அதில் 55 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் என்றும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
18 முதல் 55 வயதுக்குட்பட்டவர்களில் 15 சதவீதம் பக்கவாதம் ஏற்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. பக்கவாதம் இஸ்கிமிக் மற்றும் ரத்தக்கசிவு என இரண்டு முக்கிய வகைகளை கொண்டுள்ளது. இஸ்கிமிக் என்பது பொதுவானது, இந்த பாதிப்பு 87 சதவீதம் ஆகும். இது தமனிகளில் இரத்தம் உறைதல் அல்லது பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியின் காரணமாக தமனிகள் சுருங்குவதால் ஏற்படுகிறது.
மறுபுறம், மூளையில் உள்ள தமனியில் ரத்தம் கசியும் போது அல்லது சிதைவு ஏற்படும் போது ரத்தக்கசிவு பக்கவாதம் ஏற்படுகிறது. தமனியில் இருந்து வெளியேறும் ரத்தம் மண்டை ஓட்டில் அழுத்தத்தை உருவாக்கி மூளையை வீங்க வைத்து, செல் சேதத்திற்கு வழிவகுக்கிறது. இந்த வகை பக்கவாதம் 13 சதவீதம் பேருக்கு ஏற்பட்டுள்ளது.
உயிருக்கே ஆபத்தான பக்கவாதம் நோயிலிருந்து தப்பிக்க, அதன் அறிகுறிகளை முன்னதாகவே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. அதனை கண்டறிவது எப்படி என விரிவாக பார்க்கலாம்.
பக்கவாதத்தின் அறிகுறிகளை கண்டறிவது எப்படி?
பக்கவாதத்தின் அறிகுறிகளைக் கண்டறிவது, சரியான நேரத்தில் சரியான மருத்துவ கவனிப்பைப் பெற உதவும், இது ஒரு உயிரைக் காப்பாற்றத் தேவைப்படுகிறது. பக்கவாதத்தின் அறிகுறிகளை நினைவில் வைத்துக்கொள்ள பி.இ. எப்.ஏ.எஸ்.டி என்ற வார்த்தை பயன்படுகிறது. இதில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் பக்கவாதத்தின் ஒவ்வொரு அறிகுறிகளை குறிக்கிறது.
B- Balance - உடல் சமநிலை இழத்தல் அல்லது பலவீனமான கால்கள்
E- Eyes - எதையும் தெளிவாக பார்ப்பதில் சிக்கல்
F- Face - முகம் ஒரு புறமாக இழுத்து கொள்ளுதல் அல்லது உணர்வின்றி போதல்
A-Arms - கைகளை உயர்த்துவதில் சிரமம் அல்லது பலவீனமாக உணர்தல்
S- Speak - பேச இயலாமல் போவது அல்லது வாய் குளறுதல்
T - Time - இந்த அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது
கட்டுப்பாடில்லாத நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் உடல் உறுப்புகள் என்னென்ன..? உயிருக்கே ஆபத்தாகலாம்.!
மற்றவர்களைப் புரிந்துகொள்வதில் குழப்பம் அல்லது சிக்கல்,
எந்த காரணமும் இல்லாமல் கடுமையான தலைவலி, மயக்கம் போன்றவையும் பக்கவாதத்தின் பிற அறிகுறிகள் ஆகும்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளவர்கள் யார்?
பக்கவாதம் வயதானவர்களுக்கு வரக்கூடும் என்றாலும், இளம் தலைமுறையினருக்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.
இது போன்ற நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களிடையே ஆபத்து அதிகமாக உள்ளது:
உயர் இரத்த அழுத்தம்
அதிக கொழுப்புச் சத்து
உடல் பருமன்
இதய கோளாறுகள்
இதய வால்வு குறைபாடுகள்
சிக்கிள் செல் அனீமியா
நீரிழிவு நோய்
இரத்த உறைதல் கோளாறு
குடும்பத்தில் யாருக்காவது பக்கவாதம் இருந்த வரலாறு
நாம் தினமும் குளிக்கும்போது தவிர்க்காமல் சுத்தம் செய்ய வேண்டிய 3 உடல் பாகங்கள்..!
பக்கவாதம் ஏற்பட பிற காரணங்கள் எவை?
பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் பிற காரணிகள் பின்வருமாறு:
உடல் உழைப்பின்மை, அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்ளல்,
புகைபிடித்தல், உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்பு நிறைந்த உணவு, குடும்பத்தில் யாருக்காவது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் போன்றவை பக்கவாதம் ஏற்படக்காரணமாக அமைகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Stroke