ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இந்த அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து... பக்கவாதம் குறித்து எச்சரிக்கும் மருத்துவர்கள்..!

இந்த அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து... பக்கவாதம் குறித்து எச்சரிக்கும் மருத்துவர்கள்..!

பக்கவாதம்

பக்கவாதம்

பக்கவாதத்தின் ஆரம்ப கால அறிகுறிகள் பெரிதாக வெளியில் தெரியாது என்பதால், யாரும் அதனை கண்டுகொள்வது இல்லை எனத் தெரிவிக்கும் மருத்துவர்கள், இதனால் சரியான சிகிச்சை இன்றி பக்கவாதம் மற்றும் மரணம் போன்ற விஷயங்கள் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பக்கவாதம் , மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு, அதனால் இயங்க முடியாமல் மூளையின் செல் தசைகள் பாதிக்கப்படுவதாலோ அல்லது மூளையில் இரத்தக் குழாய் வெடிக்கும் போதோ ஏற்படுகிறது. பக்கவாதம் உடல் பாகங்களை முடக்குவது மட்டுமின்றி மரணத்திற்கு கூட வழிவகுக்கக்கூடும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டால் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவது என்பது இயலாத காரியமாகும்.

ஆனால் சரியான சிகிச்சைகளாலும், முறையான பயிற்சிகளாலும் ஒரு அர்த்தமான வாழ்க்கையை வாழ மட்டுமே இயலும். எனவே பக்கவாதம் வருவதை ஒரு சில அறிகுறிகள் மூலமாக முன்கூட்டியே அறிந்து சிகிச்சை பெறுவது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பக்கவாதத்திற்கான அறிகுறிகள்:

பக்கவாதத்தின் ஆரம்ப கால அறிகுறிகள் பெரிதாக வெளியில் தெரியாது என்பதால், யாரும் அதனை கண்டுகொள்வது இல்லை எனத் தெரிவிக்கும் மருத்துவர்கள், இதனால் சரியான சிகிச்சை இன்றி பக்கவாதம் மற்றும் மரணம் போன்ற விஷயங்கள் ஏற்படுவதாக கூறுகின்றனர். தலைச்சுற்றல்,சோர்வு போன்ற ஆரம்ப கால அறிகுறிகள் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கு சில வாரங்கள் அல்லது நாட்களுக்கு முன்பு ஏற்படக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே இதுபோன்ற லேசான அறிகுறிகள் தென்பாட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

2. தலைச்சுற்றல் பிசிஎஸ் அறிகுறியா?

வெர்டெப்ரோபாசிலர் தமனி, மெடுல்லா, சிறுமூளை, போன்ஸ், நடுமூளை, தாலமஸ் மற்றும் ஆக்ஸிபிடல் கோர்டெக்ஸ் ஆகிய பகுதிகளில் ரத்தம் உறைவது அல்லது ரத்த ஓட்டம் தேங்குவது போஸ்டீரியர் சர்க்குலேஷன் ஸ்டோக் எனப்படும் பிசிஎஸ் (PCS) பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. இது ரத்த ஓட்ட தடையால் ஏற்படும் திடீர் பக்கவாதத்தை உருவாக்க 25 சதவீத காரணமாக அமைகிறது.

இந்த அரிதான பக்கவாதமானது வெர்டிகோ, தலைசுற்றல் போன்ற பக்கவாதத்திற்கான பொதுவான அறிகுறிகள் மட்டுமின்றி வேறு சில குழப்பமான அறிகுறிகளையும் உருவாக்கக்கூடும். அதேபோல் பிற வகை பக்கவாதத்துடன் ஒப்பிடும் போது விரைவில் நோய்க்கான அறிகுறிகளைக் கண்டறியாவிட்டால் மரணம் நிகழ்வதற்கான வாய்ப்பும் அதிகமுள்ளது.

Also Read : டிஜிட்டல் ஸ்கிரீன்களில் மூழ்கியிருக்கும் உங்கள் கண்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

3. வெஸ்டிபுலார் சின்ட்ரோம் என்றால் என்ன?

மயக்கம், நினைவாற்றல் குறைபாடு, உடல் சமநிலையை இழப்பது, தலைவலி உள்ளிட்டவை வெஸ்டிபுலார் சின்ட்ரோம் என அழைக்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு ஸ்ட்ரோக் இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தலைச்சுற்றல் மற்றும் வெர்டிகோ வெஸ்டிபுலர் சிண்ட்ரோம் (EVS) ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்றும், இதனால் தலைசுற்றல், நிலையற்றத்தன்மை, குமட்டல் போன்ற ஆரம்ப கட்ட அறிகுறிகள் சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை நீடிக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

4. முக்கியமான பக்கவாத அறிகுறிகள்:

தலைசுற்றலைத் தவிர பக்கவாதம் ஏற்படுவதை உணர்த்தக்கூடிய முக்கியமான அறிகுறிகள் இதோ...

- கைகளை உயர்த்துவதில் சிக்கல் அல்லது பலவீனமாக உணர்வது

- கால்கள் மற்றும் பாதங்களில் பலவீனம் அல்லது செயலிழப்பை உணர்வது

- பேச இயலாமல் போவது அல்லது வாய் குளறுதல்

- கடுமையான தலைவலி

- பார்வை குறைபாடு

- நினைவாற்றலில் மந்தம்

இந்த அறிகுறிகள் சில மணி நேரங்களிலேயே தானாக சரியாகக்கூடும் என்றாலும், முறையான சிகிச்சை இல்லை என்றால் தீவிரமான பக்கவாதமாக மாறக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Also Read : கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டால் உடலில் என்னென்ன அறிகுறிகள் தென்படும்..?

5. விரைவான சிகிச்சை:

ஒருவரது முகம் ஒரு பக்கமாக இழுப்பது, சிரிக்கும் போது வாய் கோணலாக செல்வது, கை மற்றும் கால்களில் பலவீனம், வார்த்தைகள் குளறுவது இதுபோன்ற பக்கவாத அறிகுறிகளுடன் யாரையாவது கவனித்தால் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். ஏனெனில் இதுபோன்ற அறிகுறிகளுடன் உள்ள நபர்களின் ஒவ்வொரு நிமிடமும் மதிப்பு மிக்கதாக கருத வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Heart disease, Stroke