மன அழுத்தம் ஒருவிதத்தில் நல்லதுதான்..! ஏன் தெரியுமா..?

நம்பிக்கை : உங்கள் பெற்றோர்களுக்கு நீங்கள் கூறும் நம்பிக்கை வார்த்தைகள்தான் அவர்களுக்கான ஆறுதல். எனவே அவர்களிடம் என்னுடைய சிறந்த பங்களிப்பையே அளித்தேன். பரவாயில்லை அடுத்த முயற்சிகளில் என்னை நிரூபிப்பேன் என நம்பிக்கை வார்த்தைகளைக் கூறுங்கள்.

 • Share this:
  கடுமையான மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்பது உண்மைதான். ஆனால் அதில் ஒரு நல்ல விஷயமும் இருக்கிறது என்று தெரிவிக்கிறது Stress & Health இதழ் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு.

  ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும்போது அவர்களின் நட்பு வட்டாரம் அதிகரிக்கிறது. அவர்கள் அந்த சமயத்தில் மற்றவர்களோடு இணக்கமாக இருக்கின்றனர் என்று கூறியுள்ளது. அதாவது மன அழுத்தத்தின்போது அவர்களின் துயரங்கள், கவலைகளைப் பகிர்ந்துகொள்ள மற்றொருவரை நாடுகின்றனர். அது அவர்களின் நட்பு வட்டத்தை இன்னும் பிணைப்புடன் வைத்துக்கொள்ள உதவுகிறது என்று 1,622 பேரை வைத்து நடத்திய இந்த ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

  மேலும் இதில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மற்றவர்களுடன் பகிர்வதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக இருப்பதிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அதிகம் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் சிறப்பாகச் செயல்படுவதும் பெண்கள்தான் என்கிறது இந்த ஆய்வு முடிவு.  அதேபோல் ”இன்று மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீண்டு வருகிறவர்கள், நாளை மற்றவர்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது அவர்களுக்கு நல்ல ஆதரவாளர்களாக இருக்கின்றனர்” என்கிறார் ஆய்வாளர் அல்மெய்தா

  மேலும் பேசிய அவர் “ மன அழுத்தம் மற்றவர்களோடு இணக்கமாக பழகுவதற்கு உந்துதலாக இருக்கிறது. சாதாரண நாட்களில் வேலைகள் முடிந்ததும் நம்மைச் சுற்றியிருப்பவர்களைக் கடந்துவிடுகிறோம். ஆனால் மன அழுத்தம் வரும்போதுதான், ஆதரவுக்காக நம்மைச் சுற்றி இருப்பவர்களை கண்டுகொள்கிறோம். எனவே மன அழுத்தம் ஒருவிதத்தில் நல்லதுதான் . இதனால் தெரிந்தவர்கள் மட்டுமல்ல புதிய நட்புகள் உருவாவதற்கும் காரணமாக அமைகிறது” என்கிறார் அல்மெய்தா.

   

   
  Published by:Sivaranjani E
  First published: