மனஅழுத்தம் காரணமாக பல மனநலப் பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். அதனால் உடல் எடையும் கூடுகிறது என்பது பலரும் அறிந்ததுதான். ஆனால் இப்போது வந்துள்ள தகவல் ஆச்சரியத்தை தருகிறது.
மன அழுத்தம் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஆழமாக பாதிக்கிறது. இதனால் சிலருக்கு உடல் எடை கூடும். இது பற்றி ஆய்வில் ஒரு ஆச்சரியமான விஷயம் கண்டறியப்பட்டுள்ளது. அதில், அதிக மன அழுத்தம் காரணமாக, பலருக்கு உடல் எடையையும் குறையலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் மற்றும் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு ஆபத்தானது என்பது பற்றி சில முக்கியமான விஷயங்களை விரிவாகத் தெரிந்து கொள்வோம்.
ஆய்வு
மெடிக்கல் நியூஸ் டுடேயின் அறிக்கையின்படி, மன அழுத்தம் காரணமாக நமது ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாகவும், இதன் காரணமாக நடத்தை மாற்றங்கள் வரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தம் சிலருக்கு உடல் எடையில் மாற்றங்களை ஏற்படுத்தும். மன அழுத்தம் காரணமாக, ஒருவரின் உணவுப் பழக்கம் மாறுகிறது. இது எடை இழப்பு அல்லது அதிகரிப்புக்கு காரணமாகிறது. நல்ல செய்தி என்னவென்றால், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம், உங்கள் எடையையும் கட்டுப்படுத்தலாம். மன அழுத்தம் அதிகரிக்கும் போது வளர்சிதை மாற்ற செயல்முறையை பாதிக்கிறது.
இது மன அழுத்தத்தின் விளைவு
மன அழுத்தம் காரணமாக, நமது உடலின் அனுதாப நரம்பு மண்டலம் எபிநெஃப்ரைனைத் தூண்டுகிறது. இது உடலின் எதிர்வினை அமைப்பை தூண்டுகிறது. இந்த நிலையில் நமது இதயம் வேகமாக துடிக்கிறது மற்றும் சுவாசத்தின் வேகம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக, உடல் அதிக கலோரிகளை எரிக்கிறது. இதன் காரணமாக உணவின் செரிமானம் மற்றும் இரத்த சர்க்கரை அளவும் மாறுகிறது. இதனால் எடை இழப்பு ஏற்படலாம்.
தைராய்டு இருப்பதால் உடல் எடை கட்டுப்பாட்டில் இல்லையா..? உங்களுக்கான சில வழிகள்...
இது தவிர, மன அழுத்த சூழ்நிலைகளில், நமது பிட்யூட்டரி சுரப்பி கார்டிசோலை வெளியிட அட்ரீனல் சுரப்பிக்கு சமிக்ஞை செய்கிறது. இந்த ஹார்மோன் கல்லீரலில் இருந்து கொழுப்பு அமிலங்கள் மற்றும் குளுக்கோஸை வெளியிடுவதன் மூலம் உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது. இது எடையையும் பாதிக்கிறது.
அதோடு , மன அழுத்தம் காரணமாக மூளை-இரைப்பை குடல் தொடர்பும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக நெஞ்செரிச்சல், விழுங்குவதில் சிரமம், வாயு, வயிற்று உப்புசம், வயிற்று வலி, வாந்தி, பசியின்மை, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த எல்லா நிலைகளிலும், உணவை சாப்பிடுவதும் , தண்ணீர் குடிப்பதும் கடினமாகி, உடல் எடை வேகமாக குறைகிறது. இருப்பினும், இது உடலுக்கு மிகவும் ஆபத்தான நிலையாகவும் இருக்கலாம். எனவே, ஒரு பிரச்சனை இருந்தால், உடனடியாக ஒரு மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.