Home /News /lifestyle /

ஸ்ட்ரென்த் டிரெய்னிங் vs வெயிட் டிரெய்னிங்... இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? எதில் பலன் அதிகம்..?

ஸ்ட்ரென்த் டிரெய்னிங் vs வெயிட் டிரெய்னிங்... இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? எதில் பலன் அதிகம்..?

ஸ்ட்ரென்த் டிரெய்னிங் vs வெயிட் டிரெய்னிங்

ஸ்ட்ரென்த் டிரெய்னிங் vs வெயிட் டிரெய்னிங்

ஒரு ஜிம் டிரெயினர் வெயிட் டிரெய்னிங் மற்றும் ஸ்ட்ரென்த் டிரெய்னிங்-களை செய்ய சொன்னால் பலர் இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் அடிக்கடி குழப்பமடைவார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
வொர்கவுட் என்பது உடலில் இருக்கும் கூடுதல் எடையை குறைக்க உதவும் அதே நேரத்தில் உங்கள் தசைகளை வலுப்படுத்தவும் செய்கிறது. இதன் காரணமாக உங்கள் உடல் ஃபிட்டாக மற்றும் வலுவாக இருக்கும். ஒரு சீரான வொர்கவுட் செஷன் என்பது கார்டியோவாஸ்குலர் பயிற்சிகள் மற்றும் வெயிட் டிரெய்னிங் பயிற்சிகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.

இதில் வெயிட் டிரெய்னிங் என்பது எடை தூக்குவதன் மூலம் உங்களுக்கு வலிமையான தசைகள்உருவாக உதவுகிறது. கார்டியோ பயிற்சிகள் உங்கள் உடல் கூடுதல் கலோரிகளை எரிக்க உதவி உங்கள் உடலை ஸ்லிம்மாக் வைத்து கொள்ள உதவுகிறது.

இவை தவிர மற்றொரு வகையான பயிற்சி உங்கள் தசைகளை வலுப்படுத்தும் வலிமை பயிற்சி அதாவது ஸ்ட்ரென்த் டிரெய்னிங் ஆகும். ஒரு ஜிம் டிரெயினர் வெயிட் டிரெய்னிங் மற்றும் ஸ்ட்ரென்த் டிரெய்னிங்-களை செய்ய சொன்னால் பலர் இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் அடிக்கடி குழப்பமடைவார்கள். ஏனென்றால் இந்த இரண்டுமே தசைகளை வலிமையாக் உருவாக்குவதால் பலர் இரண்டையுமே ஒன்று தான் என கருதுகின்றனர். எனினும் இது உண்மை அல்ல, இரண்டும் ஒன்றுக்கொன்று எப்படி வேறுபடுகின்றன என்பதை இங்கே பார்ப்போம்.

ஸ்ட்ரென்த் டிரெய்னிங் (Strength training):

பெயருக்கு ஏற்ப ஸ்ட்ரென்த் டிரெய்னிங் என்பது தசையின் நிறையை (Muscle mass) அதிகரிப்பதன் மூலம் வலிமையை அதாவது ஸ்ட்ரென்த்தை வளர்ப்பதாகும். இங்கே தசை நிறை என்பது உங்கள் தசைகளின் அளவை குறிக்கும். எலும்பு தசை. மென்மை தசை மற்றும் கார்டியாக் தசை இதில் அடங்கும். ஸ்ட்ரென்த் டிரெயினிங்கிற்கு எவ்வித உபகரணங்களும் தேவையில்லை. தேவைப்பட்டால் சுவிஸ் பால், ரோப், பெஞ்சுகள் மற்றும் பலவற்றைப் பயன்படுத்தியோ அல்லது எதுவும் இல்லாமலோ இந்த பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.



அடிப்படையில் ஸ்ட்ரென்த் டிரெய்னிங் நீண்ட கால முடிவுகளுக்காக செய்யப்படுகிறது, இதில் ஒரு நபர் சரியான கட் பாடியை உருவாக்குகிறார். மேலும் இந்த முறையில் Muscle mass-ஐ உருவாக்கும் போது தானாகவே எடையும் குறைகிறது. தசையை கட்டியெழுப்புதல், மூட்டுகளின் செயல்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் உடல் சீரமைப்பு போன்ற குறிப்பிட்ட இலக்குகளை கொண்டவர்களுக்கு ஸ்ட்ரென்த் டிரெயினிங் சிறந்த பலன்களை தருகிறது. வெயிட் டிரெய்னிங், ஸ்ட்ரென்த் டிரெய்னிங் மற்றும் கண்டிஷனிங் ஆகியவற்றை உள்ளடக்கிய வொர்க்அவுட் பிளானை கடைபிடிக்க தகுதியான பயிற்சியாளரின் வழிகாட்டுதல் தேவை.

செரிமானம் முதல் மாரடைப்பு வரை...பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 9 நன்மைகள்...

வெயிட் டிரெய்னிங் (Weight Training):

ஸ்ட்ரென்த் டிரெய்னிங் போல இதை உபகரணங்கள் இல்லாமல் செய்ய முடியாது. தம்புல்ஸ், பார்பெல்ஸ், மணல் பைகள், டயர்கள் போன்ற எடைகளை பயன்படுத்தி மட்டுமே வெயிட் டிரெய்னிங்கை செய்ய முடியும். தசை வலிமை மற்றும் அமைப்பை அதிகரிக்க வெயிட் டிரெய்னிங் உதவுகிறது. இந்த டிரெய்னிங்கில் ஹெவி மெஷின்களை பயன்படுத்துவதும் அடங்கும். பொதுவாக வெயிட் டிரெய்னிங் தங்களின் தசை எடையை கட்டியெழுப்ப குறுகிய கால விருப்பங்களை கொண்டவர்களால் அதிகம் செய்யப்படுகிறது.

Fit people doing deadlift exercise in gym. Horizontal indoors shot


தசைகளின் எடை அதிகரித்து அதன் மூலம் உடல் எடையை அதிகரிக்கச் செய்வதால் இத்தகைய பயிற்சிகளை எடை குறைவாக உள்ளவர்களும் தேர்வு செய்கின்றனர். நீங்கள் சிறிய எடையை வைத்து இந்த பயிற்சிகளை மேற்கொள்ள விரும்பினால் கோச் இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம். ஆனால் அதிக எடையை தூக்கி செய்வதாக இருந்தால் காயங்கள் அல்லது பிற அபாயங்கள் ஏற்படுவதை தவிர்க்க சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளரின் மேற்பார்வை கட்டாயம் தேவை.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Exercise, Fitness, Weight loss, Workout

அடுத்த செய்தி