• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கோவிட் சிகிச்சையில் மீண்டவர்களை தாக்கும் எலும்பு திசுக்கள் இறப்பு..ஸ்டீராய்டுகள் உட்கொள்வதுதான் காரணம் என ஆய்வு

கோவிட் சிகிச்சையில் மீண்டவர்களை தாக்கும் எலும்பு திசுக்கள் இறப்பு..ஸ்டீராய்டுகள் உட்கொள்வதுதான் காரணம் என ஆய்வு

கொரோனா

கொரோனா

கோவிட் -19 பாதிப்படைந்த நோயாளிகளின் சிகிச்சைக்கு ஸ்டீராய்டுகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன

  • Share this:
ஆஸ்டியோனெக்ரோசிஸ் என்றும் அழைக்கப்படும் அவாஸ்குலார் நெக்ரோசிஸ் என்ற உடல்நலக் கோளாறில், இரத்த ஓட்டம் இல்லாததால் எலும்பு திசுக்களின் இறக்கிறது.தற்போது, கோவிட்டின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது சிகிச்சையின் ஒரு அங்கமாக இருந்த ​​ஸ்டீராய்டுகளின் பயன்பாடு மூலம், அவாஸ்குலார் நெக்ரோசிஸ் (ஏ.வி.என்) என்ற நோய் மற்றொரு பிரச்சினையாக மாறி உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கோவிட் -19 பாதிப்படைந்த நோயாளிகளின் சிகிச்சைக்கு ஸ்டீராய்டுகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன . கார்டிகோஸ்டீராய்டுகளின் நீண்டகால பயன்பாட்டின் விளைவாக (குறிப்பாக அதிக அளவுகளில் பயன்படுத்தப்பட்ட போது), பல நோயாளிகள் மியூகோமைகோசிஸ் போன்ற பூஞ்சை தொற்றுநோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது அவாஸ்குலார் நெக்ரோசிஸ் (ஏ.வி.என்) எனப்படும் எலும்பு திசுக்களின் இறப்பை ஏற்படுத்தும் என்ற நோயை, மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

ஸ்டீராய்டுகள் ஏன் பயன்படுத்தப்படுகின்றன?

ஒருவர் கோவிட் நோய்த்தொற்றால் பாதிக்கப்படும்போது, ​​வைரஸ் உடலில் வளர்ந்து பெருகும் ஆரம்ப கட்டம் ஒன்று உள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் அழற்சி ஏற்படுகிறது. வைரஸ் உடலில் பெருகும் இந்த காலத்தில், வீக்கத்தைக் குறைக்க ஸ்டீராய்டுகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், ஸ்டீராய்டுகளின் அதிகப்படியான மற்றும் நீடித்த பயன்பாடு, ஆக்ஸிஜன் குறைவான அளவைக் கொண்ட நோயாளிகளுக்குப் பயன்படுத்தும்போது இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.



ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்தும் பல நோயாளிகள் அவாஸ்குலார் நெக்ரோசிஸ் (ஏவிஎன்) போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். “இதற்கு முன்பாக, கோவிட் சிகிச்சை பெற்று மீண்ட நோயாளிகளுக்கு மியூகோமிகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டது. இப்போது, ​​ஏ.வி.என் என்பது ஸ்டெராய்டுகளின் பயன்பாடு காரணமாக கோவிட்டின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது காணப்பட்ட மற்றொரு பிரதான பிரச்சினையாக உருவாகி இருக்கின்றது.

ஆஸ்டியோனெக்ரோசிஸ் என்றும் அழைக்கப்படும் அவாஸ்குலார் நெக்ரோசிஸ், இரத்தம் இல்லாததால் எலும்பு திசுக்கள் இறக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும், எலும்புக்கு இடையில் சிறிய இடைவெளிகளை இது உருவாக்கும். அடர்த்தியில்லாத, இடைவெளிகளோடு இருக்கும் எலும்பு, எளிதில் பாதிக்கப்படும். இது எலும்பு உடைத்தல் அல்லது இடம் பெயர்தல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம்.



 

உடைந்த எலும்பு அல்லது இடம்பெயர்ந்த மூட்டு எலும்பின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டத்தை தடைசெய்யக்கூடும்" என்று பூனாவில் உள்ள அப்பல்லோ ஸ்பெக்ட்ரா, எலும்பியல் நிபுணர் மருத்துவர் ஆனந்த் ஜாதவ் கூறினார். அவர் ஒவ்வொரு மாதமும் சுமார் 10-15 அவாஸ்குளார் நெக்ரோசிஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

எலும்பு திசுக்கள் இறப்பு எவ்வாறு வெளிப்படுகிறது?

அவாஸ்குலார் நெக்ரோசிஸ் நோயால் பாதிக்கபப்ட்ட நோயாளிகள், அதன் உறுதியான அமைப்பால், எலும்பின் உள்ளே இருக்கும் ஸ்பைன்க்டருக்குள் அதிகப்படியான அழுத்தத்தை உணர்கிறார்கள்.

அவாஸ்குலார் நெக்ரோசிஸ் எந்த இடங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது?

ஏ.வி.என் தொடர்பான வலியை இடுப்பு, தொடை அல்லது பிட்டம் சுற்றி உணர முடியும் என்று அப்பல்லோ டையக்னோஸ்டிக்ஸ் ஆலோசகர் மற்றும் நோயியல் நிபுணர் டாக்டர் கீர்த்தி பிரகாஷ் கோட்லா கூறினார். “உங்கள் இடுப்புப் பகுதி மட்டுமில்லாமல், உங்கள் தோள்பட்டை, முழங்கால், கை மற்றும் கால் ஆகியவற்றையும் பாதிக்கலாம். எனவே, இடுப்பு மற்றும் தொடை வலி இருக்கும் போது, எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ மற்றும் இடுப்புகளின் எலும்பு ஸ்கேன் மூலம் டயக்னோஸ் செய்யமுடியும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



அவாஸ்குலார் நெக்ரோசிஸ் சிகிச்சைகள் :

ஏ.வி.என் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் இருந்தால், கோர் டிகம்பரஷ்ஷன் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இது பந்துக்குள் இருக்கும் அழுத்தத்தை குறைக்கிறது. ஏ.வி.என் நோயின் மூன்றாவது மற்றும் நான்காவது கட்டங்களில் நிரந்தர வலியைக் குறைப்பதற்கான ஒரே வழி, மூட்டு மாற்று (ஜாயிண்ட் ரீப்லேஸ்மென்ட்) அறுவை சிகிச்சை ஆகும். “இருப்பினும், ஏ.வி.என் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் அறுவை சிகிச்சை தேவையில்லை. ஆகையால், இடுப்பு அல்லது தொடை வலி உள்ள, ஸ்டீராய்டுகளில் எடுத்தக் கொண்ட அல்லது பயன்படுத்தும் கோவிட் நோயாளிகள் இடுப்புப் பகுதியில் ஏ.வி.என் பாதிப்பு இருக்கிறதா என்று சோதிக்க எம்.ஆர்.ஐ அல்லது எக்ஸ்ரே எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று டாக்டர் ஜாதவ் குறிப்பிட்டார்.

நீங்கள் தொடர்ச்சியான தலைவலியால் அவதிப்படுகிறீர்களா..? வாழ்க்கைமுறையில் சில மற்றங்களை செய்து பாருங்கள்..!

அவாஸ்குலார் நெக்ரோசிஸ் பாதிப்பை குறைப்பதற்கான வழிகள் :

மது அருந்துவதை நிறுத்த வேண்டும் அல்லது அளவைக் குறைக்க வேண்டும். கொலஸ்டிரால் அளவை கண்காணிக்க வேண்டும். மருத்துவருக்குத் தெரியாமல், ஸ்டீராய்டுகளை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. மேலும், இந்த நோயை கட்டுக்குள் வைக்க, புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும் மருத்துவர் கோட்டியா தெரிவித்தார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: