முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை தவிர்த்தாலே இதய பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம் - ஆய்வு

உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை தவிர்த்தாலே இதய பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம் - ஆய்வு

இதய நோய்

இதய நோய்

அதாவது, போதுமான அளவு உடலில் நீர்ச்சத்து இருந்தால், உங்களுக்கு நீரிழிவு, உடல் பருமன் அல்லது இதய செயலிழப்பு போன்றவற்றை தடுக்க முடியும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

’ஐரோப்பிய ஹார்ட் ஜர்னல்’ என்ற ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உடலில் நீர்ச்சத்து போதுமான அளவுக்கு இருந்தால், இதயம் செயலிழப்பதற்கான அபாயத்தை தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலுக்கு போதுமான அளவுக்கு தண்ணீர் மற்றும் இதர திரவ சத்துக்களை வழங்குவதன் மூலமாக உடல் இயக்கம் நன்றாக இருக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், இதய நலன் காக்கவும் அது உதவிகரமாக இருக்கும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த செய்தியை விரிவாக பார்ப்பதற்கு முன்னதாக இதய செயலிழப்பு என்றால் என்னவென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ரத்தம் ஆகிய இரண்டையும் இதயம் தான் விநியோகம் செய்கிறது. இதில், ரத்த விநியோக செயல்பாடு நீண்ட காலமாக பாதிக்கப்படுவதே இதய செயலிழப்பு எனப்படுகிறது. அமெரிக்காவில் இந்த நோயால் சுமார் 6.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இது அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதம் ஆகும். குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களிடம் இத்தகைய பாதிப்பு மிக அதிகமாகும்.

இதுகுறித்து, இதய நோய் சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறுகையில், “உப்பின் அளவை நாம் குறைத்துக் கொள்வதைப் போல, போதுமான தண்ணீர் அருந்தி, உடலில் நீர்ச்சத்தை சீராக வைத்துக் கொண்டால், நீண்ட கால இதய நோய்களை தவிர்க்க முடியும்’’ என்று தெரிவித்தார். தொடக்கநிலை மருத்துவ ஆய்வுகளை மெற்கொண்டதில், உடலில் நீர்ச்சத்து குறைவதற்கும், இதய தசைகள் இறுக்கம் அடைவதற்கும் தொடர்பு இருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆய்வை விரிவான அளவில் மேற்கொண்டு, இதற்கு அடுத்த நிலை பாதிப்புகளை கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக இதய நலன் குறித்து மருத்துவக் குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் 1,500 பெரியவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவருமே 45 முதல் 66 வயது உடையவர்கள் ஆவர். இவர்களுக்கான மருத்துவ ஆய்வு என்பது கடந்த 1987 - 1989 கால கட்டத்தில் தொடங்கியது. சுமார் 25 ஆண்டு காலம் ஆய்வு செய்த பிறகு, உடலில் நீர்ச்சத்து எந்த அளவுக்கு முக்கியம் வாய்ந்தது என்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

வெயில் காலத்தில் ஐஸ் வாட்டர் குடிப்பது நல்லதா..? மீறி குடித்தால் என்ன பாதிப்புகள் வரும்..?

அதாவது, போதுமான அளவு உடலில் நீர்ச்சத்து இருந்தால், உங்களுக்கு நீரிழிவு, உடல் பருமன் அல்லது இதய செயலிழப்பு போன்றவற்றை தடுக்க முடியும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஏறக்குறைய 11,814 பெரியவர்களை கொண்டு இறுதி கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்களில், உடலுக்கு போதுமான அளவு நீர்ச்சத்து கொடுக்காத 1,366 (11.56 சதவீதம் பேர்) நபர்களுக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

First published:

Tags: Dehydration, Heart disease, Heart health