முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / "சளி பிடித்ததைப் போல தான் இருந்தது.." - மலக்குடல் புற்றுநோயின் அறிகுறிகளை பகிர்ந்து கொண்ட நபர்.!

"சளி பிடித்ததைப் போல தான் இருந்தது.." - மலக்குடல் புற்றுநோயின் அறிகுறிகளை பகிர்ந்து கொண்ட நபர்.!

மலக்குடல் புற்றுநோய்

மலக்குடல் புற்றுநோய்

அந்த நபருக்கு ஒட்டுமொத்த தண்டு வடத்திலும் தொற்று ஏற்பட்டிருந்தது. தண்டுவடம் மற்றும் நரம்புகளை சுற்றியிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சதை மற்றும் எலும்புகளை காக்கும் வகையில் தொற்றுகளை வெளியேற்றுவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அது முடியாமல் போகவே, தண்டுவட செயல்பாடு முழுமையாகப் பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உங்களுக்கு புற்றுநோய் இருக்கிறது என்றால், உங்கள் உடலில் சில செல்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்துள்ளன அல்லது வளர்ந்து கொண்டு வருகின்றன என்று அர்த்தம். உடலின் பிற பகுதிகளுக்கும் இது பரவக் கூடும். பொதுவாக புற்றுநோயின் அறிகுறிகள் மிதமான அளவில் இருப்பதால், இது பெரிய அளவுக்கு தீவிரத்தன்மை கொண்டது அல்ல என்று நீங்கள் அலட்சியப்படுத்தக் கூடும்.

மைக்கேல் மில்லர் என்ற நபரின் அனுபவமும் இப்படித்தான் இருக்கிறது. ஆரம்பத்தில் இவருக்கு சளி பிடித்திருப்பதைப் போன்ற அறிகுறிதான் ஏற்பட்டதாம். அதை அவர் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு காய்ச்சல் மற்றும் சளி போன்ற தொந்தரவுகள் தான் ஏற்பட்டன.

ஆனால், நான் அவற்றை அலட்சியம் செய்து விட்டேன். பிறகு பின் முதுகு வலிக்கத் தொடங்கியது. இதையடுத்து மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று வந்தேன். இதற்கிடையே, இடுப்பு வலியால் தரையில் மயங்கி விழுந்து விட்டேன்.

நிபுணர்களின் உதவியை நாடினார் 

மில்லருக்கு உள்ள அறிகுறிகளை வைத்து அவருக்கு இ-கோலி பாக்டீரியா தாக்குதல் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதினர். தொடக்க கால பரிசோதனைகளில் பெருமளவிற்கு நோயை கண்டுபிடிக்க முடியவில்லை. அதே சமயம், மில்லருக்கு இருந்த செப்சிச் பிரச்சினை அவரது ஸ்பைனல் காலமன் பகுதி வரைக்கும் பரவி விட்டது.

ஸ்பைனல் தொற்றுக்கு சிகிச்சை

ஒட்டுமொத்த தண்டு வடத்திலும் தொற்று ஏற்பட்டிருந்தது. தண்டுவடம் மற்றும் நரம்புகளை சுற்றியிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சதை மற்றும் எலும்புகளை காக்கும் வகையில் தொற்றுகளை வெளியேற்றுவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அது முடியாமல் போகவே, தண்டுவட செயல்பாடு முழுமையாகப் பாதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையை தொடர்ந்து, எங்கும் நகர முடியாத அளவுக்கு மில்லர் செயலிழந்து போனார்.

அடுத்தகட்ட பரிசோதனைகள்

மில்லரின் உடல்நிலை மோசம் அடைந்ததைத் தொடர்ந்து எண்டோஸ்கோபி, சிடி இமேஜின் போன்ற மேம்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஏனெனில் அவருக்கு மலக்குடல் புற்றுநோய் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. எதிர்பார்த்ததைப் போலவே அவருக்கு மலக்குடல் புற்றுநோய் 4ஆம் நிலையில் இருப்பது தெரிய வந்தது.

ஹீமோதெரஃபி சிகிச்சை

நோய் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மில்லருக்கு பல கட்டமாக ஹீமோதெரஃபி சிகிச்சை அளிக்கப்பட்டது. 6 சுழற்சியாக இந்த சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நோய் அதற்கு கட்டுப்பட தொடங்கியது. இதையடுத்து மேலும் 6 சுழற்சிக்கு ஹீமோதெரஃபி சிகிச்சையை தொடருவதற்கு முடிவு செய்யப்பட்டது.

குணமடைந்த மில்லர்

ஹீமோதெரபி சிகிச்சை மற்றும் வெளிப்புற ரேடியோதெரஃபி சிகிச்சை போன்றவற்றின் மூலமாக மில்லர் தொடர்ந்து குணமடையத் தொடங்கினார். நோய் கண்டறியப்பட்ட நாளில் இருந்து சுமார் 11 மாதங்கள் சிகிச்சை தொடர்ந்த நிலையில், தொற்றுகளில் இருந்து முழுமையாக குணமடைந்தார்.

Also Read : டாய்லெட் பயன்படுத்தும் முறையினாலும் குடல் புற்று நோய் வர வாய்ப்பு? அதிர்ச்சி தகவல்.!

மலக்குடல் புற்றுநோயின் இதர அறிகுறிகள்

மலம் கழிக்கும் நடவடிக்கைகளில் மாற்றங்கள் தென்படும். மலத்துடன் ரத்தம் வெளியேறும். தொடர்ச்சியாக வயிறு வலி ஏற்படும். உடல் சோர்வு அல்லது பலகீனம் ஆகியவற்றை உணருவீர்கள். திடீரென்று உடல் எடையை இழப்பீர்கள்.

First published:

Tags: Bowel Cancer, Colon Cancer