முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பாக்டீரியா மூலம் பரவும் நோய்த்தொற்று பாதிப்பை குறைக்க வேண்டுமா..? இந்த காய்கறிகளை சாப்பிடுங்க போதும்..!

பாக்டீரியா மூலம் பரவும் நோய்த்தொற்று பாதிப்பை குறைக்க வேண்டுமா..? இந்த காய்கறிகளை சாப்பிடுங்க போதும்..!

 காய்கறிகள்

காய்கறிகள்

பொதுவாக நமக்கு வரக்கூடிய நோய்களுக்கு பாக்டீரியா, வைரஸ், ஃபங்கை எனும் பூஞ்சைத் தொற்றுகள் தான் முக்கிய காரணமாக அமைகிறது. குறிப்பாக பாக்டீரியா மூலம் பரவும் நோய்த்தொற்றுகளை குறைக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆன்டிபயாடிக்ஸ் மாத்திரைகளை எத்தனை உட்கொண்டாலும் சில சமயங்களில் நோய் தன்மை குறையவே குறையாது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கீரை, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆன்டிபயாடிக் எதிர்ப்பைக் (ஆன்டிபயாடிக் ரெசிஸ்டென்ட்) குறைப்பதற்கு உதவுவதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக நமக்கு வரக்கூடிய நோய்களுக்கு பாக்டீரியா, வைரஸ், ஃபங்கை எனும் பூஞ்சைத் தொற்றுகள் தான் முக்கிய காரணமாக அமைகிறது. குறிப்பாக பாக்டீரியா மூலம் பரவும் நோய்த்தொற்றுகளை குறைக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆன்டிபயாடிக்ஸ் மாத்திரைகளை எத்தனை உட்கொண்டாலும் சில சமயங்களில் நோய் தன்மை குறையவே குறையாது. இதனை தான் மருத்துவர்கள் ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் ( Antibiotic Resistance) என்று அழைக்கின்றனர்.

அதிக மாத்திரைகள் இல்லாமல் இந்த ஆன்டிபயாடிக் எதிர்ப்பை குறைக்க இயற்கையான உணவுகளை நாம் தேட ஆரம்பிக்கிறோம். இந்நிலையில் தான் காலிஃபிளவர், முட்டைகோஸ், ப்ராக்கோலி, கீரை போன்ற காய்கறிகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதாகவும், இதனை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

சமீபத்தில், நெகேவின் பென்-குரியன் பல்கலைக்கழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 4 கிராம் பாக்டீரியா நோய்க்கிருமியை எடுத்து ஆராய்ந்துப் பார்த்ததில் பச்சை காய்கறிகளில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருந்ததை கண்டறிந்தனர். குறிப்பாக ப்ரோக்கோலி, கீரை மற்றும் காலிஃபிளவர் போன்ற பச்சைக் காய்கறிகளை சமைத்து சாப்பிடும் போது குளுக்கோப்ராசிசின் மற்றும் மைரோசினேஸ் ஆகியவற்றிலிருந்து Indole-3-carbinol உருவாவதும் தெரியவந்துள்ளது. எனவே தான் ஊட்டச்சத்து நிபுணர்கள் பாக்டீரியா மூலம் பரவும் நோய்த்தொற்றுகளை குறைக்க முடியாத ஆன்டிபயாடிக் ரெசிஸ்டென்ட் களுக்கு மாத்திரைகள் பயன்படுத்துவது மட்டுமில்லாமல் ஊட்டச்சத்துகளைக் காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.

மூளைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கொழுப்பு நிறைந்த உணவுகள்... நிபுணர்கள் எச்சரிக்கை

உதாரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் மக்கள் அல்லல்பட்டு வந்தனர். இதனால் ஏற்பட்ட தொண்டை வலியை சரிசெய்ய எரித்ரோமைசினை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் சிலருக்கு இம்மருந்துகளை உட்கொண்டாலும் சரியாகவில்லை. இதற்கு உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பது தான் காரணம் என்றனர் மருத்துவர்கள். இதனை மேற்கோள்காட்டிய ஊட்டச்சத்து நிபுணர்கள், ஏற்கனவே மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது எனவும் சில சமயங்களில் இதன் தன்மைக்குறையும் போது தான் நாம் பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு ஆளாக நேரிடுவதாகக் கூறினர்.

மேலும் டாக்டர் ரோஹத்கி தெரிவிக்கையில், குழந்தைகளுக்கு சில சமயங்களில் நோய்த்தொற்று ஏற்படும் போது, ஆன்டிபயாடிக் மருத்துகள் பழக்கப்படுவதைக் காட்டிலும் தொற்று நோய்களைத் தடுக்கும் வகையில் காய்கறிகளை அவர்களுக்குத் தினமும் கொடுத்து பழக வேண்டும் என கூறினார். இதனை கடைப்பிடிக்கும் போது தான், லேசான நோய்த் தொற்று ஏற்படும் சமயங்களில் உங்களை உடல் தன்னைத்தானே மீட்டெடுக்க அனுமதிக்கும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

இந்த 10 மசாலா பொருட்களை தினமும் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?

எனவே தான் கீரை, முட்டைகோஸ் போன்ற பச்சை காய்கறிகளை அதிகளவில் உட்கொள்ளும் போது நோய் எதிர்ப்புசக்தி அதிகமாகிறது எனவும் ஆன்டிபயாடிக் ரெசிஸ்டென்ட்யை குறைக்க உதவியாக உள்ளது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். பொதுவாக பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் , வைட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Antibiotics, Monsoon