சோசியல் மீடியாவில் தினசரி 2 மணி நேரம் செலவழிப்பது மனசோர்வுக்கு வழிவகுக்கும்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

சோசியல் மீடியாவில் தினசரி 2 மணி நேரம் செலவழிப்பது மனசோர்வுக்கு வழிவகுக்கும்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

மாதிரி படம்

ஆறு மாதங்களுக்குள் 2.8 மடங்கு மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.

  • Share this:
இன்றைய காலத்தில் மக்கள் அதிக நேரம் சமூக ஊடங்கங்களில் (Social Media) மூழ்கியுள்ளனர். அதிலும், தற்போதைய ஊரடங்கு காரணமாக மக்கள் செய்வதறியாது சமூக வலைத்தளத்தில் தங்களது நேரத்தை செலவழித்து வருகின்றனர். ஆனால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் அல்லது ட்விட்டர் போன்ற தளங்களை தினசரி பயன்படுத்துவது மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி, சமூக வலைப்பின்னல்களில் செலவழித்த நேரத்திற்கும் மனச்சோர்வின் (Depression) ஆபத்துக்கும் இடையிலான தொடர்பைக் எடுத்துக்காட்டியுள்ளது.

குறிப்பாக இளைய பயனர்கள் சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை செலவிடுவதால் எளிதில் மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர். ஒருவர் சமூக ஊடகங்களில் செலவழிக்கும் நேரத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வது இது ஒன்றும் முதல் முறை அல்ல. இருப்பினும், முந்தைய ஆய்வுகள் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவழிக்க மனச்சோர்வு காரணமாக இருந்ததா? அல்லது மனச்சோர்வு அறிகுறிகளுக்கு சமூக ஊடகங்களே காரணமாக இருந்ததா? என்பதை எந்த ஆய்வுகளும் நிறுவவில்லை.

இது குறித்து ஆர்கன்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிரையன் ப்ரிமேக் கூறியதாவது, "முன்பு இந்த ஆய்வுக்காக நடத்தப்பட்ட பணிகள் கோழியில் இருந்து முட்டை வந்ததா? இல்லை , முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்ற கேள்விக்கு எங்களை விட்டுச் சென்றன. மனச்சோர்வு மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு ஆகியவை ஒன்றாகச் செல்ல முனைகின்றன என்பதை மற்ற பெரிய ஆய்வுகளிலிருந்து நாங்கள் கண்டறித்தோம். ஆனால் முதலில் எது காரணமாக அமைந்தது என்பதை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. தற்போது இந்த புதிய ஆய்வு இந்த கேள்விகளுக்கு வெளிச்சம் போட்டு தந்துள்ளன. ஏனென்றால் அதிக ஆரம்ப சமூக ஊடக பயன்பாடு மன அழுத்தத்தின் விகிதங்களை அதிகரிக்க வழிவகுத்தது.இருப்பினும், மக்களின் ஆரம்ப மனச்சோர்வு சமூக ஊடக பயன்பாட்டில் எந்த மாற்றத்திற்கும் வழிவகுக்கவில்லை." என்று கூறினார். அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ப்ரீவென்டிவ் மெடிசினில் (American Journal of Preventive Medicine) வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, 18 முதல் 30 வயதிற்குட்பட்ட 1,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை மாதிரியாகக் கொண்டிருந்தது. ஒரு குறிப்பிட்ட கேள்வித்தாளைப் பயன்படுத்தி அவர்களின் மனச்சோர்வு அளவிடப்பட்டது. பங்கேற்பாளர்கள் பேஸ்புக், ட்விட்டர், ரெட்டிட், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்திய நேரம் குறித்தும் கேட்கப்பட்டது.

Work From Home கடுமையான மன உளைச்சலை உண்டாக்குகிறதா..? அப்போ நீங்கதான் இதை படிக்கனும்

அதில், சமூக ஊடகங்களை ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகப் பயன்படுத்திய பங்கேற்பாளர்களுடன் ஒப்பிடும் போது, ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக சமூக ஊடகத்தில் செலவழித்த இளைஞர்கள், ஆறு மாதங்களுக்குள் 2.8 மடங்கு மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். மேலும் மனசோர்வுக்கான பல காரணங்களை இந்த கண்டுபிடிப்புகள் விளக்கியுள்ளது.அதில் ஒன்று, சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுபவர்கள், உறவுகளை உருவாக்குவதற்கும், தனிப்பட்ட அல்லது தொழில்முறை இலக்குகளை அடைவதற்கும் அல்லது தனிப்பட்ட பிரதிபலிப்பின் மதிப்புமிக்க தருணங்களைக் கொண்டிருப்பதற்கும் செலவழிக்கக்கூடிய நேரத்தை இடமாற்றம் செய்யக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும், முந்தைய ஆய்வுகளில் தூண்டப்பட்டதைப் போல, சமூக ஊடகங்கள் மக்களின் வாழ்க்கையின் நேர்மறையான அம்சங்களைக் காண்பிப்பதில் இருந்து திசைதிருப்பப்படுகின்றன என்பதையும், இந்த வகையான சமூக ஒப்பீடு சுயமரியாதையை பாதிக்கும் என்பதையும் அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.

மேலும் இது குறித்து மருத்துவர் பிரையன் ப்ரிமேக் கூறியதாவது, "கொரோனா காலகட்டத்தில் இந்த கண்டுபிடிப்புகளை கருத்தில் கொள்வது மிகவும் முக்கியமானது. இப்போது சமூக ரீதியாக நேரில் சந்திப்பது கடினம் என்பதால், நாம் அனைவரும் சமூக ஊடகங்களைப் போன்ற அதிக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். அந்த தொழில்நுட்பங்கள் நிச்சயமாக மதிப்புமிக்கதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் எந்த தொழில்நுட்ப அனுபவங்கள் உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும், எந்த தொழில்நுட்பங்கள் வெறுமையான உணர்வை தரும் என்பதைப் பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும்" என அவர் பரிந்துரைத்துள்ளார்.
Published by:Sivaranjani E
First published: