• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மாதவிடாயின் போது புளிப்பான உணவுகளை அதிகமாக சாப்பிடுகிறீர்களா..? அதனால் உண்டாகும் விளைவுகளை விளக்கும் மருத்துவர்..!

மாதவிடாயின் போது புளிப்பான உணவுகளை அதிகமாக சாப்பிடுகிறீர்களா..? அதனால் உண்டாகும் விளைவுகளை விளக்கும் மருத்துவர்..!

மாதவிடாய் பிரச்சனைகள்

மாதவிடாய் பிரச்சனைகள்

புளிப்பான உணவுகளை மாதவிடாய் நேரத்தில் சாப்பிட்டால் வயிற்று வலி மேலும் அதிகமாகும்என நம்புகின்றனர்.

  • Share this:
பெண்களின் வாழ்க்கை சுழற்சியில் அதிகம் வெறுக்க கூடிய ஒன்று இந்த மாதவிடாய் தான். ஒவ்வொரு மாதமும் அழையா விருந்தாளியை போன்று வந்துவிட்டு, படாதபாடு படுத்திவிட்டு செல்லும். மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று பிடிப்பை பற்றி வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பொதுவாக பெண்கள் வயதுக்கு வந்துவிட்டாலே ஏராளமான கட்டுக்கதைகளை சொல்லி விடுவார்கள்.

இதை செய்ய கூடாது, அதை சாப்பிட கூடாது, இங்கு செல்ல கூடாது, அதை பார்க்க கூடாது... போன்ற பல விஷயங்களை எந்த வித அறிவியல் பூர்வ சான்றுகள் இல்லாமலே காலம் காலமாக நம்மை சுற்றி இருப்பவர்கள் பின்பற்றி வருவதை நம்மீது திணித்து விடுவார்கள். இது போன்று தான் பலர் மாதவிடாயின் போது புளிப்பான உணவுகளை சாப்பிட கூடாது என்று சொல்லி வைத்துள்ளனர்.

புளிப்பான உணவுகளை மாதவிடாய் நேரத்தில் சாப்பிட்டால் வயிற்று வலி மேலும் அதிகமாகும் என நம்புகின்றனர். இதை பற்றி மகப்பேறு மருத்துவர் தான்யா (‘Dr Cuterus’ என்பது அவரது இன்ஸ்டா ஐடி) அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாதவிடாயின் போது பின்பற்றி வரும் சில மூடநம்பிக்கைகள் பற்றி விரிவாக பேசி உள்ளார்.

"மாதவிடாய் பற்றிய ஏராளமான புரளிகள், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறும் ஆதாரமற்ற தகவல்கள் என பல உள்ளன. ஆனால் உண்மை என்னவென்றால் மாதவிடாய் நேரத்தில் நம்மை சந்தோஷமாக வைக்கும் எதை வேண்டுமானாலும் நாம் செய்யலாம். அதே போன்று நீங்கள் சுவைக்கும் உணவிற்கும் உங்களின் கர்ப்பப்பைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எனவே மாதவிடாயின் போது புளிப்பான உணவுகளை சாப்பிடுவதால் உங்கள் வயிற்று வலி அதிகமாகாது. உங்களின் கர்ப்பப்பைக்கு அவற்றை சுவைக்கும் தன்மை கிடையாது" என்று அந்த வீடியோவில் விளக்கியுள்ளார்.



நீங்கள் எதை செய்தாலும் மாதவிடாய் வயிற்று வலி இருக்க தான் போகிறது. எலுமிச்சை, புளிப்பான மிட்டாய்கள், ஊறுகாய் ஆகியவற்றை சாப்பிடுவதனால் உங்களின் வலி அதிகமாக போவதில்லை. எனவே மாதவிடாய் பற்றிய போலியான செய்திகளை எப்போதும் நம்ப வேண்டாம். உங்களை மகிழ்ச்சியாக வைக்கும் எதை வேண்டுமானாலும் நீங்கள் சாப்பிடலாம் என்பது இதன் மூலம் நமக்கு தெரிகிறது.

குளிர்காலத்தில் சருமத்தை பாதுக்காக்க நீங்கள் பயன்படுத்த வேண்டிய ஃபேஸ் பேக்குகள்!

இருப்பினும் சில முக்கிய உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பொறித்த உணவுகள், பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள் போன்றவற்றை மாதவிடாயின் போது தவிர்க்கலாம். இதிலுள்ள அதிக உப்பு மற்றும் சோடியம் நீர் தேக்கத்தை ஏற்படுத்தி வயிற்று உப்பசத்தை உண்டாக்கும். இத்துடன் காபி மற்றும் மதுபானங்களை தவிர்ப்பதும் நல்லது.

மாதவிடாய் நேரத்தில் பிறர் கூறும் தவறான தகவல்களை நம்பி உங்கள் வயிற்றி வலியை அதிகப்படுத்தி கொள்ளாதீர்கள். 4 முதல் 5 நாட்கள் இருக்கும் மாதவிடாய் வலியை மன வலிமையுடன் எதிர்கொள்ள பழகுங்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: