Home /News /lifestyle /

கர்ப்பகாலத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் : மனம் திறந்த நடிகை சோனம் கபூர்..!

கர்ப்பகாலத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் : மனம் திறந்த நடிகை சோனம் கபூர்..!

சோனம் கபூர்

சோனம் கபூர்

பாலிவுட் நடிகர் அணில் கபூரின் மூத்த மகளான சோனம் கபூரின் விமரிசையான திருமணம் இன்று வரையிலும் பாலிவுட்டில் வியப்பாகப் பேசப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதாக சோனம் கபூர் அறிவித்திருந்தார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
கர்ப்பகாலம் என்பது மனம் முழுவதும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ஏற்படும் காலம். கர்ப்பம் உறுதியானது முதல், குழந்தை பிறக்கும் காலம் வரை, மசக்கை, சில உணவுகள் பிடிக்காமல் போவது, முதுகு வலி, கால் வீக்கம் உள்ளிட்ட பல்வேறு அசௌகரியங்களும் ஏற்படும். எல்லா பெண்களையும் போலத் தான் நடிகைகளும்.

பாலிவுட் நடிகர் அணில் கபூரின் மூத்த மகளான சோனம் கபூரின் விமரிசையான திருமணம் இன்று வரையிலும் பாலிவுட்டில் வியப்பாகப் பேசப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதாக சோனம் கபூர் அறிவித்திருந்தார். சமீபத்தில், ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட சோனம் கபூர், கர்ப்ப காலத்தில் பொதுவாக பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

தற்பொழுது மூன்றாம் ட்ரைமஸ்டரில் இருக்கும் சோனம் கபூரிடம் கர்ப்பகாலம் எவ்வாறு இருந்தது என்ற கேள்விக்கு பலருக்கும் உபயோகப்படும் வகையில் மிகவும் விரிவான விளக்கத்தை கொடுத்துள்ளார். கர்ப்ப காலம் எவ்வளவு சவால்கள் நிறைந்திருந்தாலும் குழந்தை வளரும் ஒவ்வொரு கட்டத்தையும் மகிழ்ச்சியுடன் அனுபவித்ததாகவும் புதுமையான உணர்வாக இருந்ததாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.



முதல் மூன்று மாதங்கள் – 0 முதல் 13 வாரங்கள் வரை

கர்ப்பம் உறுதியான பிறகு முதல் 2 – 3 மாதங்களுக்கு பல பெண்களுக்கு மசக்கை உண்டாகும். ஒரு சில குறிப்பிட்ட சுவை உணவு மட்டுமே ஏற்றுக் கொள்ளும் மற்ற சுவைகளும், உணவின் வாசம் கூட குமட்டல் மற்றும் வாந்தி உணர்வை ஏற்படுத்தும். இதனால் நாள் முழுவதும் சோர்வாக தலை சுற்றலாக, அவதிப்படுவார்கள். அதேபோலத்தான் சோனம் கபூரும். முதல் மூன்று மாதங்கள் கொஞ்சம் கடினமாக இருந்ததாகவும் அதன் பிறகு அடுத்தடுத்த மாதங்களை நாள் முழுவதும் ஓய்வெடுத்து, தூங்கி, விரும்பியதையெல்லாம் செய்து மகிழ்ச்சியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.



குழந்தை வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக வளரத் துவங்குகையில், பெண்களுக்கு உடலில் மாற்றங்கள் காணப்படும். மார்பகம் வீக்கம், நெஞ்செரிச்சல், பதற்றமாக உணர்வது, குறிப்பிட்ட உணவை அதிகளவில் விரும்பி சாப்பிடுவது, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் உள்ளிட்ட உடல் ரீதியான மாற்றங்களை சரியாக எதிர்கொள்ள முடியாமல் பெண்கள் முதல் சில வாரங்களில் தடுமாறலாம்.

வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதுதான் பெண்களுக்கு PCOS -ஐ அதிகரிக்கிறதா..?

இரண்டாம் மூன்று மாதங்கள் –14 முதல் 26 வாரங்கள் வரை

இந்த இரண்டாவது ட்ரைமெஸ்டரின் பொழுது சிசு ஓரளவுக்கு உருவாக்கி, குழந்தையாக வளரத் துவங்கி இருக்கும். அதுமட்டுமல்லாமல் முதல் சில வாரங்களில் இருந்த அசௌகரியம் கர்ப்பிணிகளுக்கு குறைந்திருக்கும். போதுமான அளவு தூங்க முடியும். மற்றும் இந்த காலகட்டத்தில் தான், குழந்தை வளர வளர வயிறு மேடிடத் துவங்கும். இரண்டாவது ட்ரைமெஸ்டர் கர்ப்பிணிகளுக்கு ஓரளவுக்கு சௌகரியமான காலமாகத்தான் இருக்கும். ஸ்கேன் மூலம் குழந்தையின் இதயத் துடிப்பு, வளர்ச்சி எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியும். சமீப காலமாக இந்த காலத்தில் பேபி மூன் கொண்டாடும் பழக்கம் அதிகரித்துள்ளது.



கடைசி மூன்று மாதங்கள் – 27 முதல் 40 வாரங்கள் வரை

மூன்றாவது ட்ரைமெஸ்டர் என்று கூறப்படும் கடைசி 7, 8 மற்றும் 9 மாதங்கள் கர்ப்ப காலத்தின் இறுதி கட்டமாகும். இந்த காலத்தில் கர்ப்பிணிகள் எல்லாவற்றிலுமே கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. இந்த காலகட்டத்தில் வயிற்றில் இருக்கும் சிசு முழு உருவெடுத்து எடை அதிகரிக்க துவங்கும், நுரையீரலும் முழுதாக வளரத் தொடங்கும். இது குழந்தை வயிற்றுக்குள்ளேயே சுற்றிவருவதை கர்ப்பிணிகளால் உணர முடியும். அதுமட்டுமல்லாமல் குழந்தையின் தலை கீழ் நோக்கி இறங்கும்.



கர்ப்பிணி பெண்களை தாக்கும் குடல் அழற்சி நோய் : குழந்தையையும் பாதிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி

இதனால் முதுகு வலி, பாதம் வீக்கம், வயிறு அழுத்தப்படுவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சோர்வு, தூக்கமின்மை ஆகிய தொந்தரவுகள் ஏற்படும்.

மிகவும் சவாலான காலம் எது?

பெண்களின் கர்ப்ப காலத்தை மூன்றாக பிரித்து எது மிகவும் சவாலான காலமாக இருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது முதல் மூன்று மாதங்கள் தான் பெண்கள் அதிக சவாலை எதிர்கொள்கிறார்கள். சிலருக்கு கர்ப்பம் தரித்திருப்பது சில வாரங்கள் கழித்து தான் தெரிய வரும்.



சிலருக்கு போலி கர்ப்பம் அல்லது கர்ப்பப்பைக்கு வெளியே குழந்தை உருவாக இருப்பது உள்ளிட்ட தீவிரமான சிக்கல்கள் முதல் ட்ரைமஸ்டரில் தான் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் வயிற்றில் உருவாகி இருக்கும் சிசுவின் ஒவ்வொரு பாகமும் முதல் மூன்று மாதங்களில் தான் உறுப்புகள் வளரும். பலவீனமாக இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி மருந்துகள் எடுத்துக் கொள்வதும், சிசு ஆரோக்கியமாகவும் முழுமையாகவும் வளர்ப்பதற்கு உதவும்.

அதே போல, கடைசி காலத்தில், மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் ஸ்கேன், ஊட்டச்சத்து மருந்துகள், நடைபயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளார்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Pregnancy care, Sonam Kapoor

அடுத்த செய்தி