ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கர்ப்பகாலத்தில் இதை நான் தவறாமல் செய்தேன்... டிப்ஸ் சொன்ன சோனம் கபூர்!

கர்ப்பகாலத்தில் இதை நான் தவறாமல் செய்தேன்... டிப்ஸ் சொன்ன சோனம் கபூர்!

சோனம் கபூர்

சோனம் கபூர்

கர்ப்ப காலத்தில் வாயில் பிளேக் மற்றும் கால்குலஸ் அளவுகள் அதிகரிக்கும். மேலும் வாயில் பாக்டீரியாவின் அளவு அதிகரிப்பதோடு மோசமான வாய் சுகாதாரத்திற்கு வழிவகுக்கிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

'குழந்தை பிறப்பு என்பது அனைவரின் வாழ்க்கையில் வரக்கூடிய அற்புத நிகழ்வாகும்'. ஒரு பெண் கர்ப்பம் தரித்தாலே தன்னுடைய உடல் நலத்தில் கவனம் கொள்வதோடு வயிற்றில் உள்ள குழந்தையின் நலனிலும் மிகுந்த அக்கறையுடன் இருப்பது தான் பெண்மையின் இயல்பு. வசதிப்படைத்தவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவருக்கும் பொதுவான ஒன்று தான் இது.

சினிமா நடிகர்கள் முதல் முக்கிய பிரபலங்களின் கரப்ப காலம் குறித்த தகவல் சமீபத்தில் சோசியல் மீடியாக்களில் சமீபத்தில் டிரெண்டாகி வருவது வழக்கமாகிவிட்டது. அதிலும் பிரபலங்கள் தான் சந்தித்த பிரச்சனைகள் மற்றும் என்னென்ன ஊட்டச்சத்துள்ள உணவுகளை கர்ப்ப காலத்தில் சாப்பிட்டோம்? என்பது குறித்து பதிவிடும் தகவல்கள் அனைத்தும் பலருக்கு உதவியாக உள்ளது.

இந்நிலையில் தான் பாலிவுட்டின் முன்னணி நடிகையான சோனம் கபூர், கடந்த சில மாதங்களாகவே தான் சந்தித்த கர்ப்ப கால அனுபவங்கள் குறித்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு சோனம் கபூரின் நீண்ட கால நண்பரான தொழில் அதிபர் அஹுஜாவை திருமணம் செய்துக்கொண்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 20 ல் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து குழந்தைப்பிறப்பிற்கு முன் மற்றும் பின்னதாக இருக்கும் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து வருவதோடு ரசிகர்களின் கேள்விகளுக்கும் இன்ஸ்டாவில் பதிலளித்து வருகிறார்.

Read More : சின்ன வயசுலையே முதுகு வலி, மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா..? உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கலாம்..!

அந்த பதிவில், கர்ப்ப காலத்தில் வாயில் பிளேக் மற்றும் கால்குலஸ் அளவுகள் அதிகரிக்கும். மேலும் வாயில் பாக்டீரியாவின் அளவு அதிகரிப்பதோடு மோசமான வாய் சுகாதாரத்திற்கு வழிவகுக்கிறது. இது தாய்மார்களுக்கு மட்டுமில்லாமல், கெட்ட பாக்டீரியாக்கள் தாயின் இரத்தத்தில் சென்று குழந்தைக்கும் சென்றடைவதால் குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கிறது. இதனால் தான் பல் மருத்துவரை சந்திப்பதற்கு கூட தான் பயந்ததாகவும், ஆனால் இது முறை மருத்துவரின் ஆலோசனைப் பெற்றேன் என்றார்.

இதோடு தான் தினமும் எள் எண்ணெய்,தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் கொண்டு பழங்கால முறைப்படி தினமும் வாய் கொப்பளித்து அதாவது ஆயில் புல்லிங் செய்ததால் எந்த பிரச்சனையும் தான் சந்திக்கவில்லை என்கிறார் சோனம். தற்போதும் இதை செய்தும் வருகிறேன் என்றும் கூறியுள்ளார். இந்த பதிவைப் பார்த்த நெட்டிசன்கள், ”நிச்சயம் கர்ப்ப காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் மிகவும் சவாலானது என்றும், பெண்கள் கவனமுடன் இருக்க வேண்டும், உங்களின் பதிவுகள் பயனுள்ளதாக இருக்கிறது” என்றும் பதிலளித்துள்ளனர்.

Read More : மாதவிடாய் காலத்தில் இந்த 5 பிரச்சனைகளை அலட்சியம் செய்யாதீர்கள்..!

 குறிப்பாக சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, வாய் துர்நாற்றம், ஈறுகளில் இரத்தப்போக்கு, தொண்டை வறட்சி, உதடு வெடிப்பை சரிசெய்வதற்கு மற்றும் ஈறுகள் மற்றும் தாடைகள் வலுப்பெறுவதற்கு ஆயில் புல்லிங் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதை வழக்கமாக அனைவரும் செய்து வரும் போது வாய் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதோடு, குரலில் நல்ல தெளிவும் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Pregnancy care, Sonam Kapoor