ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பெண்களுக்கு இரண்டு பிறப்புறுப்புகள் இருக்குமா..? எப்படி கண்டறிவது..? மருத்துவரின் விளக்கம்

பெண்களுக்கு இரண்டு பிறப்புறுப்புகள் இருக்குமா..? எப்படி கண்டறிவது..? மருத்துவரின் விளக்கம்

பெண்களுக்கு இரண்டு பிறப்புறுப்பு

பெண்களுக்கு இரண்டு பிறப்புறுப்பு

இரண்டு கர்ப்பப்பை இருப்பவர்களுக்கு, இரண்டு கர்ப்பப்பையிலுமே கருமுட்டைகள் உருவாகும். எனவே இவர்களுக்கு மற்ற பெண்களை விட அதிகப்படியாக மாதவிடாய் ஏற்படும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயற்கைக்கு மாறாக ஒரு சில விஷயங்களை மனிதர்களிடம் பார்க்கும்போது வியப்பாக இருக்கும். உதாரணமாக ஒரு நபருக்கு ஆறு விரல்கள் இருப்பது என்பது தற்போதெல்லாம் பார்ப்பது சகஜமாகி இருக்கிறது. ஆனால் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள், இரண்டு குழந்தைகள் ஒரே உறுப்பை பகிர்ந்து கொள்ளும் நிலை, தலை மட்டும் ஒட்டி இருக்கும் சகோதரிகள் என்பது பற்றி பல நபர்களை நாம் பார்த்திருக்கிறோம்.

இதில் ஒரு சிலருக்கு வழக்கமாக இருக்கும் உறுப்புகளை விட கூடுதலாக ஒரு உறுப்பு இருந்தால் அதிசயமாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் இருக்கும் குயின்ஸ்லாந்தில் சேர்ந்த ஈவ்லின் மில்லர் என்ற ஒரு அடல்ட் கன்டென்ட் கிரியேட்டருக்கு, இரண்டு வஜைனாக்கள் உள்ளன என்று செய்து வெளியிட்டிருக்கிறார். இதைப் பற்றி முழு விவரங்களை இங்கு பார்க்கலாம்.

ஒரு ஆண் அல்லது பெண் என்றால், தோற்றத்தில் இப்படி இருப்பார்கள், இவ்வளவு எண்ணிக்கையில் உறுப்புகள் பாகங்கள் இருக்கும் என்பது இயற்கை. ஆனால், ஈவ்லினுக்கு இரண்டு பிறப்புறுப்பு அதாவது வஜைனாக்கள் உள்ளன என்று தெரிவித்திருக்கிறார். அது மட்டுமில்லாமல், இவருக்கு இரண்டு கர்ப்பப்பை, இருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஈவ்லினுக்கு, தனக்கு இரண்டு கருப்பைகள், வஜைனாக்கள் இருப்பதே, 20 வயதுக்குப் பிறகு தான் தெரிய வந்தது. ஆனால், இது ஒரு மருத்துவ கோளாறு என்பதும் குறிப்படத்தக்கது.

இரண்டு கருப்பைகள், இரண்டு பிறப்புறுப்புகள் – கருப்பை டிடெல்ஃபிஸ்

ஈவ்லினுக்கு 31 வயது ஆன பொழுது, ஒரு ரிலேஷன்ஷிப் பிரேக்-அப்பிற்கு பிறகு பாலியல் தொழிலில் ஈடுபட தொடங்கியதாக இவர் தெரிவித்திருக்கிறார். இவர் ஒரு எஸ்கார்ட்டாக ஏழு ஆண்டுகள் உலகம் முழுவதும் பயணம் செய்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இவருக்கு இரண்டு வஜைனாக்கள் இரண்டு கருப்பைகள் மற்றும் இரண்டு செர்விக்ஸ் உள்ளன என்றும் கூறியுள்ளார்.

இரண்டு கருப்பைகள், பிறப்புறுப்புகளுடன் பிறக்கும் நிலையின் பெயர் கருப்பை டிடெல்ஃபிஸ். மிக மிக அரிதான, லட்சத்தில் ஒருவருக்கு தான் போன்ற ஒரு நிலை ஏற்படும். கருப்பை டிடெல்ஃபிஸ் என்றால் என்ன, அது எவ்வாறு ஏற்படுகிறது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

Also Read : 40 வயதை கடந்த பெண்களே... இனி உங்க நேரத்தை இப்படி செலவிடுங்கள்..!

கருப்பை டிடெல்ஃபிஸ் என்றால் என்ன?

கருப்பை டிடெல்ஃபிஸ் என்பது பிறக்கும்போதே ஏற்படக்கூடிய ஒரு மருத்துவக் குறைப்பாடு ஆகும். பொதுவாக ஒரு பெண் சிசுவாக உருவாகும் பொழுதே அந்த சிசுவுக்கு கருப்பை உருவாகும். மரபணு அல்லது வேறு ஏதேனும் கோளாறு காரணமாக ஒரு கர்ப்பப்பைக்கு பதிலாக இரண்டு கர்ப்பப்பைகள் உருவாகும் இந்த நிலை பெயர்தான் கருப்பை டிடெல்ஃபிஸ் என்று கூறப்படுகிறது.

வழக்கமாக கருப்பை என்பது தலைகீழாக வைக்கப்பட்ட பேரிக்காய் போன்ற ஒரு தோற்றத்தில் தான் இருக்கும். ஆனால் கருப்பை டிடெல்ஃபிஸ் பிரச்சனை ஏற்படும் போது, இரண்டு கருப்பைகள் வாழைப்பழங்களை போல காட்சியளிக்கும்.

பிறக்கும்போதே ஒரு பெண்ணுக்கு இரண்டு கருப்பைகள் உடன் பிறப்பதால் இதற்கான அறிகுறிகளை எதுவும் அவ்வளவு சுலபமாக கண்டறிய முடியாது. இவ்வாறு ஒரு குறைபாடு இருக்கிறது என்பதே பலருக்கும் தெரியாமல் எவ்வளவோ பெண்கள் இருக்கிறார்கள் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கருப்பை டிடெல்ஃபிஸ் இருப்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது..?

இரண்டு கருப்பைகள் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் தாங்க முடியாத அளவுக்கு வலி மற்றும் அசௌகரியம் ஏற்படலாம். எக்கச்சக்கமான ரத்தப்போக்கு ஏற்பட்டால் அல்லது குழந்தை கருத்தரிக்காமல் இருக்கும் பொழுது மருத்துவ பரிசோதனைகள் தேவைப்படும் போது, இரண்டு கருப்பைகள் இருப்பது தெரிய வரும்.

Also Read :  ரோல்-ஆன் டியோடரன்ட்டை பயன்படுத்தினால் மார்பக புற்றுநோய் ஏற்படுமா?

பெண்ணுக்கு இரண்டு கர்ப்பப்பை இருக்கிறது என்பதை ஸ்கேன் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இரண்டு கர்ப்பப்பை இருப்பவர்களுக்கு, இரண்டு கர்ப்பப்பையிலுமே கருமுட்டைகள் உருவாகும். எனவே இவர்களுக்கு மற்ற பெண்களை விட அதிகப்படியாக மாதவிடாய் ஏற்படும். உதாரணமாக ஒருவருக்கு 30 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி வருகிறது என்றால் இரண்டு கருப்பைகள் இருக்கும் பெண்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை அல்லது 20 நாட்களுக்கு ஒருமுறை என்று இரண்டு கருப்பைகளில் இருந்து கருமுட்டை வெளியாகி மாதவிடாய் ஏற்படும்.

ஈவ்லின்க்கு இரண்டு கர்ப்பப்பை மட்டுமல்லாமல், இரண்டு வஜைனாக்களும் இருப்பதால் இவர் மாதவிடாய் காலத்தில் மிகவும் அவஸ்தைப் பட்டதாக தெரிவித்திருந்தார். கருப்பை டிடெல்ஃபிஸ் இருப்பவர்களுக்கு மாதத்தில் பாதி நாட்கள் மாதவிடாய் நாட்களாகவே இருக்கும்.

இரட்டை கர்ப்பப்பை இருக்கும் போது, கர்ப்பமாவது என்பது கொஞ்சம் ஆபத்தானது தான். சாதாரணமாக பெண்கள் கர்ப்பமாக இருப்பதைவிட இரண்டு கருப்பைகள் இருக்கும்போது ஒரு பெண் கர்ப்பமாக இருக்கையில் தீவிரமான மருத்துவ கண்காணிப்பு தேவைப்படும். முன்கூட்டியே குழந்தை பிறந்து விடும் அல்லது கருக்கலைப்பு ஆகிய பிரச்சனைகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.

ஈவ்லின் இரண்டு குழந்தைகளை பெற்றுள்ளார். ஆனால் இரண்டுமே ஹை-ரிஸ்க் கர்ப்பம் என்று தான் மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். இவருடைய கர்ப்ப காலம் முழுவதுமே அசௌகரியமாக இருந்ததாகவும், குழந்தை நன்றாக பிறக்கவேண்டும் என்று பயந்து கொண்டே இருந்ததாகவும் தெரிவித்தார். இவருக்கு இரண்டு வஜைனாக்கள் இருப்பதால் நார்மல் டெலிவரி செய்ய முடியவில்லை என்றும் மருத்துவர்கள் சிசேரியன் மூலம் தான் குழந்தையை பிரசவித்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Uterus Care, Vagina Health, Women Health