Home /News /lifestyle /

சூரிய கிரகணம் 2022 : கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

சூரிய கிரகணம் 2022 : கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

சூரிய கிரகணம்

சூரிய கிரகணம்

கிரகண நாளில், கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரங்களுக்கு முன்பாக எளிமையான மற்றும் எளிதாக செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. உடலில் நச்சு நீக்கும் தேநீர் வகைகள் மற்றும் சப்ளிமென்ட்களை சாப்பிடலாம்.

மேலும் படிக்கவும் ...
வானிலை சாஸ்திரப்படி, கிரகணம் என்பது சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய கிரந்கங்களுக்கு இடையே ஏற்படும் அசாதாரணமான மாற்றங்கள் ஆகும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு தோன்றும் காலமே சூரிய கிரகணம் என்று கூறப்படுகிறது. இதைச் சார்ந்து பல்வேறு கட்டுக்கதைகள் உள்ளன. கிரகண காலத்தில் சாப்பிடும் விஷயத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ஆம் தேதி வருகிறது. இந்த கிரகணத்தின் போது உணவு சம்மந்தப்பட்ட விஷயங்களில் எவையெல்லாம் உண்மை என்பதை இங்கே பார்க்கலாம்.

சூரிய கிரகணம் 2022:

இன்று இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் உலகம் முழுவதும் ஏற்படுகிறது. ஆனால் இது ஒரு பார்சியல் சோலார் எக்லிப்ஸ் என்று கூறப்படுகிறது. அதாவது இந்த சூரிய கிரகணம் முழுமையாக ஏற்படவில்லை என வானியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த கிரகணம் 4 மணி நேரம் வரை நீடிக்கும். நாசாவின் அறிக்கையில் 65% அளவுக்கு நிலவு சூரியனை மறைத்துவிடும் என்று நான் அறிக்கை கூறுகிறது. எனவே முழுமையான கிரகணம் ஏற்படவில்லை என்றும் இந்தியாவில் இந்த கிரகணம் தெரியாது கூறியுள்ளது. இருப்பினும், பல்வேறு நாடுகளிலும் இந்திய நேரப்படி மதியம் 12:15 முதல் – 2: 11 வரை சூரிய கிரகணம் நீடிக்கும் என்று அறிக்கை வெளியாகியுள்ளது.

சூரிய கிரகண காலத்தில் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்ற நம்பிக்கைகள்

சூரிய கிரகணத்தில் இந்த விஷயங்களை எல்லாம் செய்யக் கூடாது என்று பலவிதமான கட்டுப்பாடுகள் உள்ளன. அதில் கர்ப்பிணிகளுக்கு ஒரு சில குறிப்பிட்ட விஷயங்கள் செய்யவே கூடாது என்று பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. சூரிய கிரகணம் ஏற்படும் பொழுது ஆப்பிள்களை வெட்டக்கூடாது, அப்படி வெட்டினால் குழந்தைகள் விரல்கள் இல்லாமல் பிறக்குமாம். பசுக்களுக்கு புல் அல்லது வைக்கோல் வழங்குவதும் சூரியகிரகணம் முடிந்த பிறகு அது சம்பந்தப்பட்ட மந்திரங்கள் சொல்லுவதும் தோஷத்தை நீக்கும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி கிரகண காலத்தில் எந்த உணவையும் சாப்பிட கூடாது. இது உடலுக்கு பல்வேறு கேடுகளை ஏற்படுத்தும் மற்றும் சில நேரங்களில் உணவே விஷமாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனால்தான் பெரும்பாலானவர்கள் கிரகண நேரத்தில் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள்.



அது மட்டுமின்றி கிரகணம் என்பது ஒரு நெகட்டிவான எதிர்மறையான தாக்கம் ஏற்படுத்தக் கூடியது. சூரியனின் ஒளி முற்றிலுமாக மறைக்கப்படும் பொழுது எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஸ்கந்தபுராணத்தில் கிரகண காலத்தில் எந்த உணவையும் சாப்பிடாமல் இருக்க வேண்டும், அப்படி சாப்பிட்டால் நோய்கள் உண்டாகும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல, பல்வேறு புராணங்களிலும் கிரகண காலத்தில் சாப்பிடக்கூடாது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

சூரிய கிரகணம் நம் உடல் ஆரோக்கியத்தை எப்படியெல்லாம் பாதிக்கிறது...?

சூரிய கிரகணத்தின் போது உணவு கெட்டுப்போவது பற்றி நாசா என்ன கூறுகிறது?

ஒளி மங்கிய சூரியக் கதிர்கள் உணவை பாதிக்கும் தன்மை கொண்டது என்று நாட்டுப்புறக் கதைகள் உள்ளன. ஆனால், நாசாவின் கூற்று படி, சமைத்த உணவுகள் பாதிக்கப்படும் என்றால், கடைகளில் வைத்திருக்கும் பேக்கேஜ் உணவுகள், தானியங்கள் என்று எல்லா உணவுகளுமே பாதிப்படைய வேண்டும். எனவே, சூரிய கிரகணத்தால் உணவுகள் பாதிக்காது என்று நாசா கூறுகிறது.

பொதுவாக, முந்தைய நாள் சமைத்து மிச்சமிருக்கும் உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். துளசி இலைகளை சாப்பிடுவது அல்லது சமைப்பது மூலம், உணவில் உள்ள பாக்டீரியா பாதிப்புகள் நீங்கும். இதனால், துளசி இலைகளை சேர்த்த நீரை கிரகணம் முடிந்த பின் குடிப்பது வழக்கம்.

மேலே குறிப்பிட்ட விஷயங்கள் பலவற்றுக்கும் அறிவியல் பூர்வமான சான்றுகள் இல்லை. பல நாடுகளில் கிரகணத்தை ஒரு எதிர்மறையான நிகழ்வாகக் கருதினாலும், இத்தாலி போன்ற நாடுகளில் சூரிய கிரகணத்தைக் கொண்டாடுவார்கள்.



ஆயுர்வேத முறைப்படி கிரகண காலத்தில் என்ன செய்ய வேண்டும்

கிரகண நாளில், கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரங்களுக்கு முன்பாக எளிமையான மற்றும் எளிதாக செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. உடலில் நச்சு நீக்கும் தேநீர் வகைகள் மற்றும் சப்ளிமென்ட்களை சாப்பிடலாம். அதுமட்டுமின்றி தண்ணீரில் எலுமிச்சை துண்டு மற்றும் இஞ்சி சேர்த்து குடிப்பதும் உடலை பாதுகாக்கவும். கிரகண காலத்தில் சமைக்காமல் இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும், அந்த காலத்தில் ஏற்படக்கூடிய மங்கலான ஒளி சமைக்கப்படாத உணவுகளின் தன்மையை பாதித்து பாதிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. அசைவ உணவு, மது மற்றும் செரிமானமாவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் உணவுகளும் கிரகண நேரத்தில் தவிர்க்க வேண்டும்.

இதய பாதிப்பை உணர்த்தும் இந்த அறிகுறிகளை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்..!

கிரகண காலத்தில் கர்ப்பிணிகளுக்கான உணவுகள்

மேலும் கூறியுள்ளது போல பெரும்பாலானவர்கள் கிரகணம் ஏற்படும் நேரத்தில் உண்பதை தவிர்ப்பார்கள். கர்ப்பிணிகள் கிரகணம் தொடங்குவதற்கு முன்பு பழங்களை துளசி இலைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். அதுமட்டுமின்றி உடலில் இருக்கும் நீர்ச்சத்து மற்றும் எலக்ட்ரோலைட் அளவுகள் குறையாமல் இருப்பதற்கு இளநீர் குடிக்கலாம். கிரகண நேரத்தில் சமைத்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்ற நீண்டகால நம்பிக்கை இருப்பதால் கிரகணம் தொடங்கும் முன்பாகவே சாப்பிடுவது நல்லது. மருத்துவ ஆய்வுப்படி செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுவதால் கிரகணத்தின் போது அசைவ உணவுகளை கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Solar eclipse

அடுத்த செய்தி