Home /News /lifestyle /

குறட்டைவிட்டால் அருகில் இருப்பவருக்கு இதய பாதிப்பு உண்டாகும் - அதிர்ச்சி தரும் ஆய்வு..!

குறட்டைவிட்டால் அருகில் இருப்பவருக்கு இதய பாதிப்பு உண்டாகும் - அதிர்ச்சி தரும் ஆய்வு..!

குறைட்டை விட்டுத் தூக்கினால் அவர் ஆழ்ந்து தூங்குகிறார் என பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறானது. அவ்வாறு வரும் குறட்டை ஆபத்து என நினைவில் கொள்ளுங்கள். அலட்சியம் காட்டாமல் அதன் காரணத்தை ஆராய்ந்து சரி செய்யுங்கள். சில வீட்டு வைத்தியங்கள் மூலமும் குறட்டையைக் கட்டுப்படுத்தலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிறந்த வழியாக , காதில் பஞ்சு அல்லது இயர் ப்ளக் அணிந்துகொள்வது உதவியாக இருக்கும்.

    தூங்கும் போது அருகில் இருப்பவர் குறட்டை விட்டால் தூக்கமே போய்விடும். அந்த சத்தம் நம் காதுகளை துளைத்து தூக்கத்தை பாதிக்கும். இப்படி நடு இரவில் குறட்டையால் தூக்கம் பறி போவது கடுமையான தலைவலியை உண்டாக்கும். மறுநாள் வரை தூக்கமின்மையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்த உண்மைதான்.

    ஆனால் ஆக்ஸ்ஃபோர்ட் அகாடமி வெளியிட்டுள்ள ஆய்வு புதுவித பிரச்னையை கூறியுள்ளது. Johns Hopkins School of Medicine நடத்திய இந்த ஆய்வில் குறட்டையால் தினம் தினம் உங்கள் தூக்கம் பறிபோகிறதெனில் ஆரோக்கியத்தை பல வகைகளில் பாதிக்கும். அதுமட்டுமன்றி ரத்த அழுத்தத்தை உண்டாக்கும் என்று தெரிவித்துள்ளது.

    இந்த ஆய்வில் குறட்டை விடும் 162 பேரை வைத்து பரிசோதித்துள்ளனர். பின் அவர்களின் குறட்டை சத்தம் 14 சதவீதம் பேருக்கு 53 டெசிபலைத் தாண்டியுள்ளது. மீதம் 66 சதவீதத்தினருக்கு குறட்டை சத்தம் 45 டெசிபலுக்கும் அதிகமாக இருந்துள்ளது.

    இந்த அளவுக்கு அதிகமான ஒலியானது, நிசப்தமான இரவில், சிறிய படுக்கை அறையில் காதுகளைத் துளைக்கிறது. இதனால் அருகில் இருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறனர். அவர்களுக்கு சிறந்த வழியாக , காதில் பஞ்சு அல்லது இயர் ப்ளக் அணிந்துகொள்வது உதவியாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

    ”இது சத்தத்திலிருந்து மீள்வதற்கு மட்டும் வழியல்ல. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் இது உதவும் “ என்கிறார் டெய்லி மெயில் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த மருத்துவர் மியூடி சோஹோ.

    இதேபோல் 2016 ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்விலும் அளவுக்கு அதிகமான சத்தம் இதயத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது. இதனால் இதயம் பாதிக்கப்பட்டு அதன் செயல்பாடுகளிலும் பாதிப்பை உண்டாக்குகிறது என்று கூறியது. அதை வைத்துப் பார்க்கும்போதும் குறட்டை என்பதும் அளவுக்கு அதிகமான சத்தம் என்பதால் தூக்கமின்மையை உண்டாக்குவதோடு இதய பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது என்று ஆய்வில் விளக்கமளித்துள்ளது.

    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி